K. Palanisami v. M. Shanmugam & Ors.

Supreme Court of India · 23 Feb 2023
Dinesh Maheshwari; Hrishikesh Roy
Civil Appeal Nos. 1392-1397 of 2023
constitutional appeal_allowed Significant

AI Summary

The Supreme Court remanded disputes over AIADMK's internal leadership and meetings to the High Court, emphasizing adherence to party bylaws and limited judicial interference.

Full Text
Translation output
இந்திய உச்ச நீதிமன்றம்
உரிமையியல் மேல்முறையீட்டு அதிகார வரம்பு
உரிமையியல் மேல்முறையீடு எண் 1392/2023
(சிறப்பு அனுமதி மனு (உரிமையியல்) எண் 11237/2022-லிருந்து எழுகிறது)
திரு. கே. பழனிசாமி ... மேல்முறையீட்டாளர் (கள்)
-எதிர்-
எம். சண்முகம் மற்றும் பலர் ... எதிர்மேல்முறையீட்டாளர் (கள்)
உடன்
உரிமையியல் மேல்முறையீடு எண் 1393/2023
(சிறப்பு அனுமதி மனு (உரிமையியல்) எண் 11579/2022-லிருந்து எழுகிறது)
உரிமையியல் மேல்முறையீடு எண் 1394/2023
(சிறப்பு அனுமதி மனு (உரிமையியல்) எண் 11578/2022-லிருந்து எழுகிறது)
உரிமையியல் மேல்முறையீடு எண் 1395/2023
(சிறப்பு அனுமதி மனு (உரிமையியல்) எண் 15753/2022-லிருந்து எழுகிறது)
உரிமையியல் மேல்முறையீடு எண் 1396-1397/2023
(சிறப்பு அனுமதி மனு (உரிமையியல்) எண் 15705-15706/2022-லிருந்து எழுகிறது)
தீர்ப்புரை
மாண்புமிகு நீதியரசர் திரு. தினேஷ் மகேஸ்வரி:
அனுமதி வழங்கப்பட்டது.
JUDGMENT

2. இம்மேல்முறையீடுகளின் பிரச்சினைகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையனவாகவும், ஒரே வழக்காடும் தரப்பினர்களைக் கொண்டுள்ளதாலும், அவை ஒன்றாகப் பரிசீலிக்கப்பட்டு, இப்பொதுவான தீர்ப்புரையின் மூலம் தீர்வு செய்யப்படுவதற்காக எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

3. தேவைப்படும் விவரங்களை விவாதிப்பதற்கு முன்பு, ஒரு சில முதல்நிலைக் கருத்துகளையும், வழக்கு விவரங்களையும் சுருக்கமாகக் குறிப்பிடத்தக்கதாகும்.

3.1. பிரச்சினைக்குரிய விடயங்கள், முக்கியமாக இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்1 என்ற அரசியல் கட்சியின் உள்நிர்வாகம் குறித்ததாக உள்ளன. இந்த அரசியல் கட்சிக்கு 1.[5] கோடிக்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளதாகவும், மேலும், அதற்குரிய துணை விதிகளும் அவ்வப்போது திருத்தப்பட்டு வந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. கட்சியின் இரு உயர் மட்ட அமைப்புகளில், மைய நிர்வாகக் குழுவும்2, மைய அமைப்பின் பொதுக் குழுவும்3 அடங்கும். துணை விதி வகையங்களின்படி, கட்சியின் உயர் பதவி, பொதுச் செயலாளருக்கு ஒதுக்கப்பட்டபோதிலும், 05.12.2016 அன்று பொதுச் செயலாளரின் இறப்புக்குப் பிறகு, கட்சியின் அமைப்பில் பெருமளவு மாற்றங்கள் ஏற்பட்டன, இறுதியில், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரைக் கொண்ட கூட்டு தலைமை அமைப்பு 12.09.2017 அன்று துணை விதிகள் திருத்தத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டது. இருப்பினும், மேற்கொண்டு திருத்தங்கள் செய்வதற்கான முன்மொழிவுரைகள், கட்சிக்குள் ஏற்பட்ட பல்வேறான உட்கலகத்தினால் மாறுபட்ட கருத்துகளைச் சந்தித்ததோடு, குறைந்தபட்சம், ஐந்து உரிமையியல் வழக்குகளுக்கேனும் வழிவகுத்துள்ளன. இந்த உரிமையியல் வழக்குகள் நிலுவையிலுள்ளபோது தற்காலிக உறுத்துக்கட்டளைக்கான வேண்டுரைகள், உயர் நீதிமன்ற முதலேற்புப் பிரிவாலும், மேல்முறையீட்டு பிரிவாலும், மேலும் இந்த நீதிமன்றத்தாலும் பல்வேறு கட்டங்களில் பல்வேறு உத்தரவுகள் இடப்படுவதற்கு வழிவகுத்துள்ளன.

3.2. அறிமுகப்படுத்தும்பொருட்டு, முதல் மூன்று உரிமையியல் வழக்குகளான உ.வ. எண்கள் 102/2022, 106/2022 மற்றும் 111/2022 ஆகியவற்றில், இடைக்கால பரிகாரங்கள் கோரும் பல்வேறு 1 சுருக்கமாக 'அ.இ.அ.தி.மு.க' எனவும், இதில் இதற்குப்பிறகு 'கட்சி' அல்லது 'அரசியல் கட்சி' என்றும் குறிப்பிடப்படும். 2 இதில் இதற்குப் பிறகு 'செயற்குழு' எனக் குறிப்பிடப்படும். 3 இதில் இதற்குப் பிறகு 'பொதுக் குழு' எனக் குறிப்பிடப்படும். விண்ணப்பங்கள் 22.06.2022-ஆம் தேதியிடப்பட்ட உத்தரவு மூலம் விசாரிக்கப்பட்டன, இதன்மூலம் உயர் நீதிமன்ற அறிவார்ந்த தனியமர் நீதியரசர் 23.06.2022 அன்று நடைபெறவிருந்த பொதுக்குழுக் கூட்டத்திற்கு எதிராக எந்தவொரு உறுத்துக்கட்டளையையும் வழங்க மறுத்துவிட்டார். இந்த உத்தரவு, உள் நீதிமன்ற மேல்முறையீடான மு.பி.மே. எண் 160/2022-இல் மனுதாரர்களுள் ஒருவரால் எதிர்க்கப்பட்டது. மேலும், அதில் 23.06.2022 அன்று அதிகாலை கேட்புகைக்குப் பிறகு பிறப்பிக்கப்பட்டவாறான உத்தரவின்படி, உயர் நீதிமன்ற நீதியர் அமர்வு, பொதுக்குழுக் கூட்டத்தை நடத்த அனுமதித்தபோதிலும், வரைவு தீர்மானத்தின் 23 அம்சங்களைத் தவிர, வேறு எந்த விடயத்திலும் முடிவு எடுக்கக்கூடாது என்று கூறி அதன் வரம்பின்பேரில் கட்டுப்பாடுகளை விதித்தது. 23.06.2022-ஆம் தேதியிடப்பட்ட மேற்படி உத்தரவு, இத்தொகுப்பு வழக்குகளில் சிறப்பு அனுமதி மனு (உ) எண்கள் 11237/2022, 11578/2022 மற்றும் 11579/2022 ஆகியவற்றிலிருந்து எழுகின்ற மூன்று மேல்முறையீடுகளில் இந்நீதிமன்றத்தில் எதிர்க்கும்படியானது. இந்நீதிமன்றம், 06.07.2022-ஆம் தேதியிடப்பட்ட இடைக்கால உத்தரவின் மூலம், 23.06.2022-ஆம் தேதியிடப்பட்ட மேற்படி உத்தரவின் செயற்பாட்டினையும், செயற்விளைவினையும் நிறுத்தி வைத்ததோடு, உரிமையியல் வழக்குகளை விசாரிக்கின்ற அறிவார்ந்த தனியமர் நீதியரசர் முன்பாக வேறேதும் பரிகாரத்தைக் கோருவதற்கான வாய்ப்பினை தரப்பினர்களிடம் விடுகையில், 11.07.2022 அன்று நடைபெற இருப்பதாகக் கூறப்பட்ட அடுத்த உத்தேச பொதுக்குழு கூட்டத்தையும் அனுமதித்தது. இந்நீதிமன்றத்தால் 06.07.2022-ஆம் தேதியிடப்பட்ட மேற்கண்ட உத்தரவிடப்படுவதற்கு முன்னதாக, மேற்படி 11.07.2022-ஆம் தேதியன்றான உத்தேச கூட்டத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் உ.வ. எண்கள் 118/2022 மற்றும் 119/2022 என்ற இரண்டு உரிமையியல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட வேண்டியதாயிற்று. மீண்டும், அதில், உயர் நீதிமன்ற அறிவார்ந்த தனியமர் நீதியரசர் 11.07.2022 அன்று அதிகாலை விசாரணை நடத்தி இடைக்காலப் பரிகாரத்தை மறுத்தார். ஆனால், 11.07.2022-ஆம் தேதியன்றான மேற்படி கூட்டம் குறித்த நேரத்திலேயே நடத்தப்பட்டு, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன, ஆனால் 11.07.2022-ஆம் தேதியிடப்பட்ட மேற்படி உத்தரவு இந்நீதிமன்றத்தில் எதிர்ப்புக்குள்ளானதாகும், மேலும், 27.09.2022-ஆம் தேதியிடப்பட்ட உத்தரவின் மூலம், இந்நீதிமன்றம் மறுபரிசீலனைக்காக வழக்கைத் திருப்பியனுப்பியது. அதன்பிறகு, 23.06.2022-ஆம் தேதிக்கு முன்னதாக இருந்த நிலையே தொடர்ந்திருந்து வரவேண்டுமென்றும், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரின் கூட்டு ஒத்திசைவின்றி செயற்குழு கூட்டமோ அல்லது பொதுக்குழு கூட்டமோ நடத்தப்படாது என்றும் மற்றவற்றுக்கிடையே கூறி, சில இடைக்கால பரிகாரங்களை வழங்கி, மேற்படி புதிதாகத் தாக்கல் செய்யப்பட்ட உரிமையியல் வழக்குகளின் இடைக்கால பரிகார விண்ணப்பங்கள் உயர் நீதிமன்ற அறிவார்ந்த தனியமர் நீதியரசரால் 17.08.2022 அன்று தீர்வு செய்யப்பட்டன. 17.08.2022-ஆம் தேதியிடப்பட்ட மேற்படி உத்தரவு, மு.பி.மே. எண்கள் 227/2022, 231/2022 மற்றும் 232/2022 என்ற உள் நீதிமன்ற மேல்முறையீடுகளில் எதிர்க்கப்பட்டது. இந்த மூன்று மேல்முறையீடுகளும், உயர் நீதிமன்ற நீதியர் அமர்வால் 02.09.2022-ஆம் தேதியிடப்பட்ட அதன் உத்தரவின் மூலம் அனுமதிக்கப்பட்டன, இவை சிறப்பு அனுமதி மனு (உ) எண்கள் 15753/2022 மற்றும் 15705- 15706/2022-லிருந்து எழுகின்ற மேல்முறையீடுகளில் எதிர்ப்பிலுள்ளன.

4. அ.தி.மு.க. கட்சியின் பொதுக்குழுக் கூட்டங்கள் தொடர்பான பிரச்சினையை, வெவ்வேறு கட்சிகள் வெவ்வேறான கருத்துகள் கூறியும், வெவ்வேறான பரிகாரங்கள் கோரியும், அதனை தீவிரமான பிரச்சினையாக ஆக்கிவிட்டபோதிலும் தற்போதுள்ள நிலவரப்படி, மேற்படி கூட்டம் 11.07.2022-ஆம் தேதியன்று நடந்துள்ளது, மேலும் மேற்படி உரிமையியல் வழக்குகள் வெவ்வேறு நிலையில் நிலுவையில் உள்ளன. 23.06.2022-ஆம் தேதியிடப்பட்டதும், 02.09.2022-ஆம் தேதியிடப்பட்டதுமான எங்கள் முன்பாக எதிர்ப்பிலுள்ள இரு முதன்மை உத்தரவுகளும், சம்பந்தப்பட்ட உரிமையியல் வழக்குகள் நிலுவையிலுள்ளபோது, முக்கியமாக தற்காலிக உறுத்துக்கட்டளை வழங்குவது குறித்ததாகும். இது தொடர்பாக, 23.06.2022-ஆம் தேதியிடப்பட்ட உத்தரவைப் பொறுத்தவரையிலும், இந்த நீதிமன்றத்தால் 06.07.2022-ஆம் தேதியன்று நிறுத்திவைக்கப்பட்ட அதனுடைய செயற்பாடும், செயற்விளைவும் இடையிடையான மற்றும் அடுத்தடுத்த நிகழ்வுகளின் காரணமாக நடைமுறையில் அதன் தொடர்புடைமையை இழந்துவிட்டது என்பதும் குறிப்பிடப்பட வேண்டியதாகும். ஒருபுறம், மேற்சொன்ன உத்தரவு நீக்கறவு செய்யப்பட வேண்டும் என்றும், 17.08.2022-ஆம் தேதியிடப்பட்ட அறிவார்ந்த தனியமர் நீதியரசரின் உத்தரவு மீட்டளிக்கப்பட வேண்டும் என்றும் வாதிகளான மேல்முறையீட்டாளர்கள், 02.09.2022-ஆம் தேதியிடப்பட்ட உத்தரவை எதிர்த்து வாதிட்டனர், இதன்மூலம் அவர்களுக்கு இடைக்கால பரிகாரம் வழங்கப்பட்ட அதேவேளையில், எதிர்த்தரப்பினர்கள் 02.09.2022-ஆம் தேதியிடப்பட்ட உத்தரவு நியாயமானதாகவும், முறையானதாகவும் இருப்பதால் எந்தக் குறுக்கீடும் தேவையில்லை எனக் கூறி ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பதே வழக்காடும் தரப்பினர்களின் தற்போதுள்ள நிலைப்பாடாகும்.

5. நமது முன் பல்வேறு கட்சிகள் பல்வேறு நிலைப்பாடுகளை எடுத்துரைத்தாலும், முக்கியமான விடயங்கள் என்பன அரசியல் கட்சியின் விவகாரங்கள், உறுப்பினர்களுக்கு இடையிலான சச்சரவுகள் மற்றும் கட்சிக்குள் இருக்கும் உட்கலகங்கள் ஆகியவை தொடர்பான உரிமையியல் வழக்குகளில் தற்காலிக உறுத்துக்கட்டளை வழங்குவது தொடர்பான பிரச்சினையாக உள்ளன, மேலும் எதிர்ப்புக்குள்ளான உத்தரவுகளுக்கு வழிகோலும் உரிமையியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பதையும், அவை சட்டப்படி விசாரிக்கப்பட வேண்டும் என்பதையும் முக்கியமாகச் சுட்டிக்காட்டும் வகையில் நாங்கள் மேற்கூறிய விவரக்குறிப்பை வரைந்துள்ளோம். ஆதலால், வழக்காடும் தரப்பினர்களுக்கான கற்றறிந்த வழக்குரைஞர், பல்வேறு காரணிகளையும், அம்சங்களையும் குறித்து விரிவான வாதங்களை வைத்தபோதும், நாங்கள், உரிமையியல் வழக்குகளில் தற்காலிக உறுத்துக்கட்டளை வழங்குவது தொடர்பான பிரச்சினையில் எங்களது பரிசீலனைக்கும், இது தொடர்பாக இந்நீதிமன்றத்தால் அந்தளவுக்கு தீர்ப்பளிக்கப்படுவதற்கும் இத்தீர்ப்புரையை வரையறுத்துக் கொள்கிறோம். எனவே, தற்போதைய தீர்ப்பளிப்புக்கு பொருத்தமற்ற கேள்விகளை நாம் ஆராயலாகாது.

6. மேற்சொன்ன முதன்மை குறிப்புரைகள், கருத்துரைகள் மற்றும் சுருக்கக்குறிப்புகள் ஆகியவற்றுடன், நாம் தொடர்புடைய பொருண்மைசார் அம்சங்களை சுருக்கமாகக் குறித்துக்கொள்ளலாம், அது பின்வருமாறு:

6.1. அ.இ.அ.தி.மு.க. கட்சி 1972-ஆம் ஆண்டு நிறுவப்பட்டு, உரியமுறையில் அங்கீகரிக்கப்பட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அடிப்படையாக ஒப்புக்கொள்ளப்படும் சில சங்கதிகளில் எந்தக் கருத்து மாறுபாடும் இல்லை. இக்கட்சி 1.[5] கோடிக்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட முக்கிய கட்சியாகவும், அதற்கே உரிய துணை விதிகளின்படியாக நிருவகிக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. குறிப்பிட்டபடி, மேல்மட்ட கட்சி அமைப்பு என்பது செயற்குழுவையும், பொதுக்குழுவையும் உள்ளடக்கியதாகும். 2011 மற்றும் 2017-ஆம் ஆண்டுகளில் செய்யப்பட்ட திருத்தங்கள் உட்பட கட்சியின் துணை விதிங்கள், அவ்வப்போது திருத்தம் செய்யப்பட்டுள்ளன. மேற்கொண்டு திருத்தங்கள் செய்வதற்கான முன்மொழிவுகள், தற்போதைய வழக்குகளில் கருத்து மாறுபாட்டுக்கு அடித்தளமாக உள்ளன. கருத்து மாறுபாடுக்குரிய பிரச்சினைகளை எடுத்துக் கொள்வதற்கு முன்பு, முதலில் இயற்றப்பட்டு, நீண்டகாலம் தொடர்ந்துகொண்டிருக்கும் துணை விதிகளின் வகையத்தில், கட்சியின் உயர் பதவி அதன் பொதுச் செயலாளருக்கு ஒதுக்கப்பட்டது, அவர் அடிப்படை உறுப்பினரால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார். முன்னதாக, டாக்டர் ஜெ. ஜெயலலிதா பொதுச் செயலாளர் என்ற மேற்படி பதவியை வகித்து வந்தார், ஆனால், 05.12.2016 அன்று அவரது மறைவுக்குப் பிறகு, தலைமை பொறுப்பைப் பொறுத்தவரையில், ஒரு நிச்சயமற்ற நிலைக்கு அக்கட்சி சென்றுவிட்டது.

6.2. டாக்டர். ஜெ. ஜெயலலிதா அவர்களின் மறைவுக்குப் பிறகு, 29.12.2016 அன்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில், திருமதி வி.கே. சசிகலா இடைக்கால பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். எனினும், மேற்படி இடைக்கால பொதுச் செயலாளர், இந்நீதிமன்றத்தின் தீர்ப்புரையின்படி 14.02.2017 அன்று சிறையில் அடைக்கப்பட்டார். இறுதியாக 28.08.2017 அன்று, 12.09.2017 அன்றான பொதுக்குழுக் கூட்டத்திற்கு அறிவிப்பு அனுப்பப்பட்டது. அந்த நிலையில், கட்சியில் உள்ள ஒரு குழு, கட்சி விவகாரங்களின் பொறுப்பாளராக இருப்பதற்கு இந்திய தேர்தல் ஆணையத்திடம் தனது உரிமையைக் கோரியிருந்தது. அந்த நிலையில், உட்கட்சி பூசலின் இந்த அம்சங்கள் அனைத்தும் தற்போது உள்ள பிரச்சினைகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துபவையல்ல. 12.09.2017 அன்று நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில், துணை விதிகளில் திருத்தம் செய்து, ஒரு தனித்துவ நடைமுறை கொண்டுவரப்பட்டது என்பது தொடர்புடைய அம்சமாகும். இத்திருத்தத்தின் மூலம், மேற்படி பொதுச் செயலாளர் பதவி நீக்கப்பட்டு, மேற்படி பொதுச் செயலாளர் பதவிக்குப் பதிலாக, ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரண்டு உயர் பதவிகள் உருவாக்கப்பட்டன என வகைசெய்கையில், மேற்படி மறைந்த டாக்டர் ஜெ. ஜெயலலிதா அவர்களுக்கு கட்சியின் “நிரந்தர பொதுச் செயலாளர்” அந்தஸ்து வழங்கப்பட்டது.

6.3. இத்தறுவாயில், உரிமையியல் வழக்குகளின் பிரச்சினைகள், கேள்விக்குள்ளான இடைக்கால உத்தரவுகளுக்கு வழிகோலியதுடன், அவை முக்கியமாக அந்தத் துணை விதிகளின் திருத்தத்திற்குப் பிறகு, ஒருங்கிணைப்பாளராக மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக முறையே தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு நபர்கள் குறித்தது என்பதையும் கருத்திற்கொள்ளலாம்; அவர்கள், சி.அ.ம. (உ) எண் 15753/2022-லிருந்து எழுகின்ற மேல்முறையீட்டில், ஒருங்கிணைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட மேல்முறையீட்டாளரான திரு. ஓ. பன்னீர்செல்வம்4 அவர்களும், அதே மேல்முறையீட்டில், இணை ஒருங்கிணைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாம் எதிர்மேல்முறையீட்டாளரான திரு. இ.கே. பழனிசாமி5 அவர்களும் ஆவர். 4 பல இடங்களில், வாதங்களைச் சமர்ப்பிக்கும்போது, திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் 'ஓ.பி.எஸ்.' என்ற ஆங்கில தலைப்பெழுத்துகளுடன் குறிப்பிடப்பட்டுள்ளார்.. தொடர்ந்து இத்தீர்ப்புரையிலும் அதே தலைப்பெழுத்துகளுடன் அவர் குறிப்பிடப்படுவார். 5 பல இடங்களில், வாதங்களைச் சமர்ப்பிக்கும்போது, திரு. இ.கே. பழனிசாமி அவர்கள் 'இ.பி.எஸ்.' என்ற ஆங்கில தலைப்பெழுத்துகளுடன் குறிப்பிடப்பட்டுள்ளார். தொடர்ந்து இத்தீர்ப்புரையிலும் அதே தலைப்பெழுத்துகளுடன் அவர் குறிப்பிடப்படுவார்.

6.4. 12.09.2017 அன்று நிறைவேற்றப்பட்ட துணை விதித் திருத்தத்தின்படி, ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கு, முன்னதாக பொதுச் செயலாளருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களும், பொறுப்புகளும் வழங்கப்பட்டன. சுருக்கமாகச் சொன்னால், கட்சியில் கூட்டுத் தலைமைமுறை ஏற்படுத்தப்பட்டு, அதன்படி அனைத்து முடிவுகளும் கட்சியின் மேற்படி இரண்டு பதவி வகிப்பவர்களால் கூட்டாக எடுக்கப்பட வேண்டும். திருத்தப்பட்ட துணை விதிகளின்படி, ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டு காலமாக நிர்ணயிக்கப்பட்டது. 12.09.2017-ஆம் தேதியிடப்பட்ட மேற்படி தீர்முடிவிலிருந்து 2021-ஆம் ஆண்டு மே மாதம் வரை இந்த அரசியல் கட்சியான அ.இ.அ.தி.மு.க. தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்து அதிகாரத்தில் இருந்தது.

6.5. இருப்பினும், 01.12.2021 அன்று, கட்சியின் செயற்குழு துணை விதிகளின் விதிகள் 20(அ)(ii), 43 மற்றும் 45 ஆகியவற்றைத் திருத்தம் செய்வதற்கான ஒரு சிறப்பு தீர்மானத்தை நிறைவேற்றியது. இத்திருத்தங்கள், மேற்படி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு நேரடியாக நபர்களைத் தேர்ந்தெடுக்க கட்சியின் அடிப்படை உறுப்பினர்களுக்கு அதிகாரம் அளித்தன, மேலும் பொதுக்குழு, கட்சி அமைப்பு விதிகளை மாற்ற முடியும் என்றாலும், ஒருங்கிணைப்பாளரும் இணை ஒருங்கிணைப்பாளரும் கட்சியின் விதிகளிலும், ஒழுங்குமுறை விதிகளிலும் தளர்வுகள் அல்லது மாற்றங்கள் செய்ய முடியும் என்றாலும், ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவர் எனும் வகையத்தை மாற்ற முடியாது என்று வகைசெய்யப்பட்டுள்ளது. 01.12.2021-ஆம் தேதியிடப்பட்ட செயற்குழுவின் தீர்மானம், மேற்கண்ட திருத்தங்கள் உடனடியாக அமலுக்கு வரும் என்றும், ஆனால் அவை பொதுக்குழுவால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் வகைசெய்கிறது. 6.5.1. 02.12.2021 அன்று, மேற்கண்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான கட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டது. 06.12.2021 அன்று ஓ.பி.எஸ். மற்றும் ஈ.பி.எஸ். கூட்டாக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்குப் போட்டியிட்டனர்; அவர்கள் ஒருமனதாக, எதிர்ப்பின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்; அவர்கள் இருவருக்கும் தேவையான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன; மேலும், தேர்தல் முடிவுகள் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்பட்டன. மேலும், கழகத்தின் பல்வேறு மட்டங்களிலுள்ள கட்சி அலுவல் பொறுப்பாளர் பதவிகளுக்கு துணை விதிகளின் 6 முதல் 14 வரையிலான விதிகளின்படி 13.12.2021 முதல் 28.04.2022 வரை பல்வேறு கட்டங்களாக தேர்தல்கள் நடத்தப்பட்டன, அப்போது கழகத்தின் தலைமைக் குழு அலுவலகப் பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டனர், பின்னர் ஒருங்கிணைப்பாளராக ஓ.பி.எஸ். அவர்களும், இணை ஒருங்கிணைப்பாளராக இ.பி.எஸ். அவர்களும் கூட்டாகச் செயல்பட்டு 29.04.2022 அன்று மைய செயற்குழு உறுப்பினர்களை நியமித்தனர். தமிழ்நாடு சட்டமன்ற மேலவைத் தேர்தல் தொடர்பாக, மே 2022-ல், படிவம் ஏஏ மற்றும் படிவம் பிபி ஆகியவை அக்கட்சியால் அனுப்பப்பட்டன. இந்தப் படிவங்களில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பி.எஸ். அவர்களும், இணை ஒருங்கிணைப்பாளராக இ.பி.எஸ். அவர்களும் கூட்டாகக் கையெழுத்திட்டனர்.

6.6. மேற்கூறிய நடைமுறைகள் இருக்கும்வரை, ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும், ஒன்றாக இணைந்து, திருத்தப்பட்ட விதிகளில் வரையறுக்கப்பட்டுள்ள கூட்டு தலைமைப் பண்பு உணர்வுடன் தொடர்ந்து செயல்பட்டதாகவே தெரிகிறது. அதனைத் தொடர்ந்து, அவர்கள், பொதுக்குழுக் கூட்டத்தை 23.06.2022 அன்று கூட்டுவதற்கான ஒரு கூட்டு அறிவிப்பை வெளியிட்டனர். இந்த அறிவிப்பில் திட்டக்குறிப்போ அல்லது முன்மொழியப்பட்ட தீர்மானங்களோ ஏதுமில்லை. இருப்பினும், இந்த அறிவிப்பு வழங்கப்பட்ட உடன், கட்சிக்குள் ஒற்றைத் தலைமை முறைக்கு திரும்புவது குறித்து சூட்சுமமாக சூடு பிடிக்கத் தொடங்கியதாகத் தெரிகிறது, மேலும் இது, இந்த வழக்கினைத் தூண்டிற்று. 19.06.2022 அன்று, ஓ.பி.எஸ்., 23.06.2022 அன்று நடைபெற உள்ள பொதுக்குழுக் கூட்டத்தை ஒத்திவைக்குமாறுகோரி, இ.பி.எஸ்.-க்கு கடிதம் அனுப்பியதாகத் தெரிகிறது, இதற்கு இ.பி.எஸ். அவர்களால் மறுப்புத் தெரிவிக்கப்பட்டது. 23.06.2022-ஆம் தேதியிடப்பட்ட கூட்டத்திற்கு காவல்துறை பாதுகாப்புக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. கட்சி தலைமையகத்தால் பொதுக்குழு உறுப்பினர்கள் முன்பாக வைக்கப்பட வேண்டிய தீர்மானத்தின் இறுதி வடிவினை ஓ.பி.எஸ். பெற்றுக்கொண்டதுடன், அதற்கு அவர் சம்மதம் தெரிவித்தார். இதில் இதற்குமுன் குறிப்பிட்டபடி, 23.06.2022-ஆம் தேதியிடப்பட்ட உத்தேச கூட்டம், மூன்று உரிமையியல் வழக்குகளான மேற்படி உ.வ. எண்கள் 102/2022, 106/2022, 111/2022 ஆகியவற்றுக்கு வழிகோலின. உ.வ. எண் 111/2022-இல், அவர்கள் 23.06.2022 அன்று நடைபெற உள்ள உத்தேச பொதுக்குழு கூட்டத்தைக் கூட்டாமலிருக்கலாம் என கட்சிக்கு எதிராகவும், பொதுக்குழு, செயற்குழு, ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்கு எதிராகவும் வாதியான சண்முகம் தடை உறுத்துக்கட்டளைப் பரிகாரங்களைக் கோரினார். 23.06.2022 அன்று நடைபெறவுள்ள பொதுக்குழுக் கூட்டத்தில் எந்தவொரு திட்டக்குறிப்பையும் முன்வைப்பதிலிருந்து பிரதிவாதிகளைத் தடுப்பதற்காக தற்காலிக உறுத்துக்கட்டளை கோரி இரண்டு விண்ணப்பங்களான மு.வி. எண்கள் 327/2022 மற்றும் 328/2022-ம் தாக்கல் செய்யப்பட்டன. மற்ற உரிமையியல் வழக்குகளிலும் மற்ற விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டன என்றாலும், காலத்தின் அருமை கருதி, நாங்கள் அவற்றை விளக்கவில்லை, ஏனெனில் முக்கியமாக அவற்றின் வழக்குப்பொருளும் ஒரே மாதிரியாகவே உள்ளது. 6.[7] இடைக்கால உத்தரவு மற்றும் கட்டளைக்கான வேண்டுரையுடன் கூடிய மேற்கூறிய விண்ணப்பங்கள் உயர் நீதிமன்ற அறிவார்ந்த தனியமர் நீதியரசரால் 22.06.2022 அன்று பரிசீலிக்கப்பட்டன. அறிவார்ந்த தனியமர் நீதியரசர் இடைக்கால உத்தரவு எதனையும் பிறப்பிக்கவோ அல்லது ஏதும் இடைக்கால கட்டளையிடவோ மறுத்து, 23.06.2022 அன்று நடைபெறுவதாகக் குறிக்கப்பட்ட பொதுக்குழுக் கூட்டத்திற்கும் அனுமதியளித்தார். அறிவார்ந்த தனியமர் நீதியரசர் மற்றவற்றுக்கிடையே கருத்துரைத்துள்ளதாவது:- "13. இந்நீதிமன்றம், சம்பந்தப்பட்ட கற்றறிந்த வழக்குரைஞர்களின் வாதங்களைக் கேட்டும், பதிவாவணத்தை ஒட்டுமொத்தமாக ஆராய்ந்தும், அனைத்து கட்சிக்காரர்களும், 23.6.2022 அன்று நடைபெற இருந்த பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதற்கு ஆட்சேபணை ஏதும் தெரிவிக்கவில்லை என்றாலும், 1-ஆம் பிரதிவாதி/கட்சியின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறை விதிகளைத் திருத்தம் செய்வது குறித்து கூட்டம் நடக்குமிடத்தில் முக்கியமாக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை நீக்கி தீர்மானங்கள் ஏதும் நிறைவேற்றினால், அது அவர்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறி, வாதிகள் மற்றும் 3-ஆம் பிரதிவாதி/ஒருங்கிணைப்பாளருக்காக முன்னிலையான கற்றறிந்த வழக்குரைஞர் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தார். எந்தக் கட்சியினரும் இடைக்கால உத்தரவுகள் வழங்குவதற்கான வழக்கு முகாந்திரம் எதனையும் நிலைநாட்டவில்லை. உண்மையில், முதல் பிரதிவாதி/கட்சியின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறை விதிகளில் திருத்தம் செய்வது தொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் என்ற அச்சத்தின் அடிப்படையில் வாதிகள் இடைக்கால உத்தரவுகளைக் கோரும் விண்ணப்பங்களுடன் வந்துள்ளனர். இந்த நீதிமன்றம், 23.06.2022 அன்று நடைபெறவிருக்கும் பொதுக்குழு கூட்டத்தில் என்ன நடக்கும் என்பதைக் கற்பனை செய்து முன்கூட்டியே இடைக்கால உத்தரவுகள்/கட்டளைகள் பிறப்பிக்க முடியாது. உண்மையில், கழகம்/கட்சியின் உறுப்பினர்கள் தீர்மானங்கள் நிறைவேற்றவும், கட்சியினை நன்கு நிருவகிப்பதற்காக ஒரு குறிப்பிட்ட துணை விதி, விதி அல்லது ஒழுங்குமுறை விதியை வகுக்கவும் கழகம்/கட்சியின் விருப்பத்திற்கே விடப்படுவதால் நீதிமன்றம் அதன் உள் விவகாரங்களில் பொதுவாக தலையிடுவதில்லை என்பதும், பொதுக்குழு உறுப்பினர்களுக்கிடையே எந்த முடிவும் கூட்டு விவேகத்திற்குட்பட்டே எடுக்கப்படுவதால், நீதிமன்றம் உறுப்பினர்களை ஒரு குறிப்பிட்ட முறையில் செயல்பட வற்புறுத்த முடியாது என்பதும் நன்கு அறுதியிடப்பட்டுள்ளது. தீர்மானங்களை முடிவு செய்து, நிறைவேற்றுவது பொதுக்குழுவும் அதன் உறுப்பினர்களும்தான் என்பதால், பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதற்கான செயல்முறையில் இந்த நீதிமன்றம் தலையிட முடியாது. எனவே, இந்த நீதிமன்றம், 23.06.2022 அன்று நடைபெற உள்ள பொதுக்குழுக் கூட்டத்தை நடத்துவதற்கான ஏற்பாட்டைச் செய்ய வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்தியதேயன்றி, இடைக்கால உத்தரவுகளைப்/ கட்டளைகளைப் பிறப்பிக்க விரும்பவில்லை. 11.07.2022-க்குள் திரும்பத்தக்க அறிவிப்பை எதிர்மேல்முறையீட்டாளர்- களுக்கு அனுப்பிடுக. தனியார் அறிவிப்பும் அனுமதிக்கப்படுகின்றன. இந்த வழக்கினை 11.07.2022 அன்று பட்டியலிடுக."

6.8. உ.வ. எண் 111/2022-இன் வாதியால் மேற்சொன்ன 22.06.2022-ஆம் தேதியிடப்பட்ட உத்தரவு குறித்து மு.பி.வி எண் 160/2022-இல் உயர் நீதிமன்ற ஈராய அமர்வின் முன் கேள்வி எழுப்பப்பட்டது. மேற்சொன்ன உள்-நீதிமன்ற மேல்முறையீட்டில் வாதியான மேல்முறையீட்டாளரின் வழக்கைக் கருத்திற்கொண்டு, உயர் நீதிமன்ற ஈராய அமர்வு, 23.06.2022 அன்று நடத்துவதாகக் குறிக்கப்பட்ட பொதுக்குழுக் கூட்டத்தை நடத்தலாம் என்றாலும், வரைவு தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 23 அம்சங்களைத் தவிர வேறு எந்த அம்சத்திலும் முடிவு எடுக்கக்கூடாது என்ற முறையில் உத்தரவுகள் பிறப்பித்தது. அறிவிப்பு வழங்குகையில், நீதியர் அமர்வு 23.06.2022-ஆம் தேதியிடப்பட்ட அதன் உத்தரவில் கருத்துரைத்து, உத்தரவிட்டதாவது:- "11. விதி-20(அ)1 முதல் 13, 45 மற்றும் 45 (அதிலுள்ளவாறு) திருத்தம் செய்வது தொடர்பான அம்சம் எதுவும், 4 மற்றும் 5-ஆம் எதிர்மேல்முறையீட்டாளர்களால் அங்கீகரிக்கப்பட்ட வரைவு தீர்மானத்தில் இல்லை என்பதால், இடைக்கால உறுத்துக் கட்டளை உத்தரவை வழங்குவதற்கான வழக்கு முகாந்திரத்தை மேல்முறையீட்டாளர் நிலைநாட்டியிருக்கவில்லை என நாங்கள் கருதுகிறோம்." மேற்சொன்ன மனுவில் இடைக்கால உத்தரவு எதனையும் வழங்காதபோது, மேல்முறையீட்டாளரும், 4-ஆவது எதிர்மேல்முறையீட்டாளாரும் மிகவும் பாதிக்கப்படுவர். மேலும், உறுத்துக்கட்டளை உத்தரவு வழங்கப்படாவிட்டால், உரிமை வழக்கில் கோரப்படும் வேண்டுரை பயனற்றதாகிவிடும். பொதுக்குழுக் கூட்டத்தை நடத்துவதிலிருந்து எதிர்மனுதாரர்களைத் தடுக்குமாறு மனுதாரரால் கோரப்பட்ட இடைக்கால உறுத்துக்கட்டளை வழங்கப்பட முடியாது என்றும் நாங்கள் கருதுகிறோம். எனினும், 4 மற்றும் 5-ஆம் எதிர்மேல்முறையீட்டாளர்களால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள வரைவு தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 23 அம்சங்கள் குறித்து மட்டுமே பொதுக்குழு விவாதித்து முடிவெடுக்கலாம். எதிர்மேல்முறை- யீட்டாளர்கள், வரைவு தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 23 அம்சங்களைத் தவிர, வேறு எந்த முடிவும் எடுக்கக்கூடாது. பொதுக்குழுவுக்கு வரைவு தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 23 அம்சங்களைத் தவிர வேறு எந்த விடயத்தையும் விவாதிக்க உரிமை உள்ளதென்றாலும், இது தொடர்பாக பொதுக்குழு கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கக்கூடாது.

12. முடிவில், 23.06.2022 அன்று காலை 10.00 மணிக்கு பொதுக்குழுக் கூட்டத்தை நடத்த 4 மற்றும் 5-ஆம் எதிர்மேல்முறையீட்டாளர்களை நாங்கள் அனுமதிக்கிறோம், மேலும், வரைவு தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 23 அம்சங்கள் குறித்து விதிகள் மற்றும் துணை விதிகளின்படி, விவாதித்து முடிவெடுக்கவும் நாங்கள் அனுமதிக்கிறோம், மேலும், வரைவு தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 23 அம்சங்களைத் தவிர, எதிர்மேல்முறையீட்டாளர்கள் வேறெந்த முடிவும் எடுக்கக்கூடாது என்பதை நாங்கள் தெளிவாக்குகிறோம். பொதுக்குழு உறுப்பினர்களுக்கு வேறு எந்த விடயத்தையும் விவாதிக்கும் உரிமை இருந்தாலும், இது தொடர்பாக பொதுக்குழு எந்த முடிவும் எடுக்கக்கூடாது. 19.07.2022-க்குள் திரும்பத்தக்க அறிவிப்பை 1 முதல் 3-ஆம் எதிர்மேல்முறையீட்டாளர்களுக்கு அனுப்பிடுக.”

183,663 characters total

7. 23.06.2022-ஆம் தேதியிடப்பட்ட மேற்கண்ட உத்தரவுக்குப் பிறகும், அதனைத் தொடர்ந்து நடந்த பொதுக்குழுக் கூட்டத்திலும் என்ன வெளியிடப்பட்டதோ அது பல சர்ச்சைக்குரிய கேள்விகளுக்கும் பிரச்சினைகளுக்கும் வழிவகுத்துவிட்டது. ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவாளர்களும், 23.06.2022-ஆம் தேதியன்று நடந்த கூட்டத்தில், திரு. ஏ. தமிழ் மகன் உசேனை நிரந்தர பொதுக்குழுத் தலைவராக நியமிக்கும் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தனர், அவர் அந்தத் தலைவர் பதவியில் தாமே அமர்ந்துகொண்டார், அதன்பிறகு, பொதுக்குழு உறுப்பினர்களுள் ஒருவர் கூட்டத்தின்போது மேடைக்கு அருகே சென்று, அனைத்து 23 தீர்மானங்களுக்கும் கருத்து வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என கூச்சல் எழுப்பினார், அது நிராகரிக்கப்பட்டது. பின்னர், சுமார் 2000 பொதுக்குழு உறுப்பினர்களால், தாங்கள் கையொப்பமிட்டதாகச் சொல்லப்படும் பிரமாணப் பத்திரங்கள்/கோரிக்கை வடிவிலான சில ஆவணங்களைக் கூட்டத்தின் தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டது, அதேசமயத்தில் அவரது விருப்பப்படியான ஒரு நாளில் அடுத்த பொதுக்குழுக் கூட்டத்தை நடத்த வேண்டுகோளும் விடுக்கப்பட்டது. மேற்படி ஏ. தமிழ் மகன் உசேன், கட்சியின் துணை விதிமுறைகளை மீறி, அடுத்த பொதுக்குழுக் கூட்டத்தின் தேதி 11.07.2022 என அறிவித்ததாகச் சொல்லப்படுகிறது. மேற்படி கூட்டத்தில் அட்டவணைப்படுத்தப்பட்ட தீர்மானம் எண் 1, மின்னஞ்சலில் ஓ.பி.எஸ்-ஆல் ஒப்புதல் அளிக்கப்பட்ட ஒன்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டது என்பது அவருடைய வழக்கு. அதற்குமாறாக, 23.06.2022-ஆம் தேதியன்று நடந்த கூட்டத்தில் 2190 உறுப்பினர்களால் விடுக்கப்பட்ட வேண்டுகோள் வாசிக்கப்பட்டு பொதுக்குழுத் தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டது, அவர் அதே கூட்டத்தில், ஓ. பி. எஸ். மற்றும் பொதுக்குழுவின் அனைத்து உறுப்பினர்களின் முன்னிலையில், ஒற்றைத் தலைமை குறித்து விவாதித்து, முடிவெடுக்க அடுத்த பொதுக்குழுக் கூட்டம் அதே இடத்தில் 11.07.2022 அன்று காலை 9.15 மணிக்கு நடைபெறும் என அறிவித்தார் என்பது இ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களின் வழக்காகும். இந்தக் கூட்டத்தின் 23.06.2022-ஆம் தேதியிடப்பட்ட அறிக்கை, 28.06.2022 அன்று பொதுக்குழுத் தலைவரின் அறிக்கையுடன் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட்டது.

7.1. 23.06.2022-ஆம் தேதியன்று நடந்த மேற்கண்ட கூட்டம்/நடவடிக்கைகளுக்குப் பிறகு, பொதுக்குழு கூட்டத்தை 11.07.2022 அன்று நடத்துவதற்கான 01.07.2022-ஆம் தேதியிடப்பட்ட அறிவிப்பு “கட்சித் தலைமையகப் பொறுப்பாளர்களால்” வெளியிடப்பட்டது. ஓ.பி.எஸ். அவர்களும், அவரது ஆதரவாளர்களும், 01.07.2022-ஆம் தேதியிடப்பட்ட மேற்படி அறிவிப்பின் சட்டமுறைமையையும், செல்லுபடியாகும் தன்மையையும் குறித்து முக்கியமாக இரண்டு காரணங்களுக்காக அதாவது ஒன்று பொதுக்குழுக் கூட்டத்தை கூட்டுவதற்கான அதிகாரம் கூட்டாகச் செயல்படும் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரிடம் இருந்ததே தவிர, வேறெவரிடமும் இல்லை என்பதும், இரண்டாவதாக, துணை விதிகளின்படி, அறிவிப்பு அனுப்புவதற்கு குறைந்தபட்சம் 15 நாட்கள் இருக்கவேண்டும் எனும்போது, இந்த அறிவிப்பு, கூட்டம் நடக்கவிருப்பதற்கு 10 நாட்களுக்கு முன்னதாகத்தான் அனுப்பப்பட்டது என்பது குறித்து கடுமையாகக் கேள்விகள் எழுப்பியுள்ளனர்.

7.2. 01.07.2022-ஆம் தேதியிடப்பட்ட மேற்படி அறிவிப்பைத் தொடர்ந்து, மேற்படி (உ.வ. எண் 111 of 2022) திரு. எம். சண்முகம், உயர் நீதிமன்ற நீதியர் அமர்வு முன்பாக, அதனுடைய 23.06.2022-ஆம் தேதியிடப்பட்ட உத்தரவு மீறப்பட்டுள்ளதாகக் கூறி, விண்ணப்பங்களைத் தாக்கல் செய்தார். இந்த விண்ணப்பங்களைப் பொறுத்தவரை, உயர் நீதிமன்ற ஈராய அமர்வு 04.07.2022-ஆம் தேதியிடப்பட்ட அதனுடைய உத்தரவில், 23.06.2022-ஆம் தேதியிடப்பட்ட இடைக்கால உத்தரவு, 23.06.2022 அன்று நடைபெறும் கூட்டம் தொடர்பானது மட்டுமே என்றும், அதை காலவரையறையின்றி நீட்டிக்க முடியாது என்றும் தெளிவுபடுத்தியுள்ளது. 11.07.2022-ஆம் தேதியன்று நடைபெற உள்ள கூட்டத்திற்கு அவர்கள் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை என்றும் நீதியர் அமர்வு தெளிவுபடுத்தியது.

8. ஆதலால், 04.07.2022-ஆம் தேதியிடப்பட்ட உத்தரவில், உயர் நீதிமன்றம் 11.07.2022-ஆம் தேதியன்று நடைபெறவிருந்த கூட்டம் தொடர்பாக தலையிட மறுத்தபோது, மறுநாள் அதாவது 05.07.2022 அன்று வேறு இரண்டு உரிமையியல் வழக்குகள் ஒன்று ஓ.பி.எஸ். அவர்களாலும், மற்றொன்று திரு. பி.வைரமுத்து அவர்களாலும் தாக்கல் செய்யப்பட்டன. மேற்கூறிய உரிமை வழக்குகளிலும், அதிலுள்ள இடைக்கால பரிகார விண்ணப்பங்களிலும் செய்யப்பட்ட வேண்டுரைகளைக் குறிப்பிடுவதற்கு முன்பாக, நிகழ்வுகளின் வரிசையையும், தொடர்ச்சியையும் நிலைநிறுத்துவதற்கு, நாம், இந்த நீதிமன்றத்தால் 06.07.2022 அன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவைக் குறித்துக்கொள்ளலாம்.

8.1. மேற்சொன்ன புதிய உரிமையியல் வழக்குகளும், இடைக்கால பரிகார விண்ணப்பங்களும் உயர் நீதிமன்றத்தால் எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய நிலையில், மு.பி.மே. எண் 160/2022-இல் 23.06.2022-ஆம் தேதியிடப்பட்ட மேற்படி உத்தரவை எதிர்த்து சி.அ.ம. (உ) எண் 11237/2022-இன் வாயிலான மேல்முறையீட்டுக்கு சிறப்பு அனுமதி கோரும் மூன்று மனுக்களும் 06.07.2022 அன்று இந்த நீதிமன்றத்தில் பரிசீலனைக்காக வந்தன. வைக்கப்பட்ட வாதங்களையும், நடந்த நிகழ்வுகளையும், 11.07.2022-ஆம் தேதியன்று நடக்கவிருந்த கூட்டத்தையும் கருத்திற்கொண்டு, இந்நீதிமன்றம் அறிவிப்பு அனுப்புகையில், 23.06.2022-ஆம் தேதியிடப்பட்ட எதிர்ப்புக்குள்ளான உத்தரவின் செயல்பாட்டினையும், செயல்விளைவினையும் நிறுத்தி வைத்ததோடு, வழக்கின் சங்கதிகள் மற்றும் சூழ்நிலைகளின்படி தேவைப்படலாகும் வேறேதும் இடைக்கால பரிகாரத்திற்கான வேண்டுரையை ஆராய்வதையும், வேறேதும் உத்தரவுப் பிறப்பிப்பதையும் மேற்படி உரிமையியல் வழக்குகளை விவாதிக்கும் கற்றறிந்த தனியமர் நீதியரசர் அவர்களின் விருப்பத்திற்கே விட்டுவிடும் அதேசமயத்தில், 11.07.2022-ஆம் தேதியன்று நடக்கவிருப்பதாகக் குறிக்கப்பட்ட கூட்டத்தை சட்டப்படி நடத்துவதையும் தெளிவாக்கியது. இந்த நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட 06.07.2022-ஆம் தேதியிடப்பட்ட உத்தரவு பின்வருமாறு:- "வழக்குக் குறிப்பேடு எண் 19425/2022 மற்றும் வழக்குக் குறிப்பேடு எண் 19419/2022-இல் சிறப்பு அனுமதி மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான அனுமதி வழங்கப்படுகிறது. இந்த மனுக்கள் தொடர்பான உரிமையியல் வழக்கின்(களின்) தரப்பினர் அல்லாத விண்ணப்பதாரருக்கான வ.வி. எண் 89644/2022 நிராகரிக்கப்படுகிறது. மனுதாரர்களுக்கான கற்றறிந்த மூத்த வழக்குரைஞர்களின் வாதங்களையும், முன்னெச்சரிக்கை மனுவில் சம்பந்தப்பட்ட எதிர்மனுதாரர்களுக்காக முன்னிலையான கற்றறிந்த மூத்த வழக்குரைஞர்களின் வாதங்களையும் கேட்டோம். வழக்குகள் பரிசீலனைக்குரியவை. இரண்டு வாரங்களில் திரும்பத்தக்க அறிவிப்பை அனுப்பிடுக. 1 மற்றும் 2-ஆம் எதிர்மனுதாரர்கள் சார்பாக திரு. பை அமித் மற்றும் திரு. கௌதம் சிவசங்கர் அறிவிப்பை ஏற்றுக்கொள்கின்றனர். ஆகவே, சார்பாளர் இல்லாத எதிர்மனுதாரர்களுக்கு இரண்டு வாரங்களில் திரும்பத்தக்க அறிவிப்புகள், அனுப்பப்பட வேண்டும். வழக்கமான நடைமுறையோடு நேரடி ஒப்படைப்பு சேவையும் அனுமதிக்கப்படுகிறது. வழக்கின் சங்கதிகளையும், சூழ்நிலைகளையும், வழக்கின் விடயப்பொருளையும், முதலேற்புப் பிரிவு கற்றறிந்த தனியமர் நீதியரசரால் பிறப்பிக்கப்பட்ட 22.06.2022-ஆம் தேதியிடப்பட்ட உத்தரவின் பொருளடக்கத்தையும், உள் நீதிமன்ற மேல்முறையீடுகளை விசாரிக்கும் உயர் நீதிமன்ற நீதியர் அமர்வால் பிறப்பிக்கப்பட்ட 23.06.2022-ஆம் தேதியிடப்பட்ட உத்தரவையும் கருத்திற்கொண்டு, இது தக்கதென ஆராய்ந்து, கருத்துரைத்து உத்தரவிட்டதாவது:- அ. 23.06.2022-ஆம் தேதியிடப்பட்ட எதிர்ப்புக்குள்ளான உத்தரவின் செயற்பாடும், செயற்விளைவும் நிறுத்தி வைக்கப்படும். (மேற்கண்ட உத்தரவுகளின் வழக்குப்பொருளாக அமைகின்ற) 23.06.2022-ஆம் தேதியிடப்பட்ட கூட்டம் ஏற்கெனவே நடத்தப்பட்டிருந்தாலும், எதிர்ப்புக்குள்ளான உத்தரவைத் தொடர்ந்தும், அதில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள்/ வழிகாட்டுதல்களைத் தொடர்ந்தும், மேற்கொண்டு எடுக்கப்பட்ட அல்லது எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகளைக்/முயற்சிகளைக் கருத்திற்கொண்டும், இந்த மனுக்களில் எழுப்பப்பட்ட கேள்விகளை ஆராய்ந்தும், இந்த நீதிமன்றத்தின் அடுத்த உத்தரவு வரும்வரை இந்த எதிர்ப்புக்குள்ளான உத்தரவின் செயற்பாடு நிறுத்தி வைக்கப்படுவது அவசியமானதாகவும், தக்கதாகவும் தோன்றுகிறது. ஆ. 11.07.2022 அன்று நடைபெறுவதாகக் குறிக்கப்பட்ட 3-ஆம் எதிர்மனுதாரரின் பொதுக்குழுக் கூட்டத்தைப் பொறுத்தவரை, அது சட்டப்படி நடத்தப்படலாம், மேலும் இது தொடர்பாக, எந்தவொரு இடைக்கால பரிகாரத்தின் பிற அம்சங்கள், முதலேற்புப் பிரிவு உரிமை வழக்குகளைக் கையாளும் கற்றறிந்த தனியமர் நீதியரசர் முன்பாக முன்கொணரப்பட்டு, முன்னிலைப்படுத்தப்பட வேண்டும். இ. இடைக்கால உத்தரவு என்ற தன்மை கொண்ட வேறு எந்த உத்தரவையும் பிறப்பிக்கும் அவசியமிருப்பதாக நாங்கள் கருதவில்லை, மேலும் மற்ற அம்சங்கள் யாவும் உரிய நிலையில் ஆராயப்படும் என்றும் நாங்கள் கருதுகிறோம். ஈ. இந்த நீதிமன்றத்தில் இந்த மனுக்கள் நிலுவையிலிருப்பதால், இது, வழக்கின் சங்கதிகள் மற்றும் சூழ்நிலைகளின்படி தேவைப்படலாகின்ற வேறேதும் இடைக்கால பரிகாரத்திற்கான வேண்டுரையை ஆராய்வதற்கும் மற்றும்/அல்லது வேறேதும் தேவையான உத்தரவைப் பிறப்பிப்பதற்குமான உரிமையியல் வழக்கைக்(களைக்) கையாளும் கற்றறிந்த தனியமர் நீதியரசருக்கு எந்த இடர்ப்பாடும் இருக்கக்கூடாது என்பது தெளிவாக்கப்படுகிறது. எதிர்மனுதாரர்கள் இரண்டு வாரங்களுக்குள் எதிர் பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்யலாம். இரண்டு வாரங்களுக்குப் பிறகு வழக்குகளைப் பட்டியலிடுக."

9. நாம், தற்போது உ.வ. எண் 118/2022 மற்றும் உ.வ. எண் 119/2022 என்ற மேற்படி இரண்டு உரிமையியல் வழக்குகளின் விடயப்பொருளையும், அவற்றின் மீதான நடவடிக்கைகளையும் மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளலாம்.

9.1. திரு. ஓ. பன்னீர்செல்வம், 11.07.2022 அன்று பொதுக்குழுக் கூட்டத்தை நடத்துதல் குறித்து கேள்வி எழுப்புகையில், இடைக்கால பரிகாரத்திற்காக மு.வி. எண் 368/2022 உடன் உ.வ. எண் 118/2022-ஐ தாக்கல் செய்தார். உ.வ. எண் 118/2022-இன் முதன்மை வேண்டுரைகள் பின்வருமாறு:- "(அ) 1-ஆம் பிரதிவாதியின் துணை விதிகள் மிக முக்கியமாக அ.இ.அ.தி.மு.க.வின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறை விதிகளின் விதி 20(அ)(iv) மற்றும் 20(அ)(v)-ஐ மீறும்வகையில், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இருவரின் ஒப்புதலின்றி, 11.07.2022 அன்றோ அல்லது வேறு எந்த தேதியிலோ பொதுக்குழுக் கூட்டத்தை நடத்துவது சட்டவிரோதமானது என விளம்புகை செய்வதற்காகவும். (ஆ) ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இருவரின் வெளிப்படையான ஒப்புதலின்றி, 11.07.2022 அன்றோ அல்லது வேறு எந்த தேதியிலோ பொதுக்குழுக் கூட்டத்தை நடத்துவதிலிருந்து பிரதிவாதிகளை தடுக்கின்ற நிரந்தர உறுத்துக்கட்டளைக்காகவும்."

9.2. மேற்படி உ.வ. எண் 118/2022 உடன் தாக்கல் செய்யப்பட்ட மு.வி. எண் 368/2022-இன் வேண்டுரை பின்வருமாறு:- "உரிமை வழக்கின் தீர்வு நிலுவையிலிருக்கையில், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரின் ஒப்புதலின்றி, 11.07.2022 அன்றோ அல்லது வேறு எந்த தேதியிலோ பொதுக்குழுக் கூட்டத்தை நடத்துவதாகச் சொல்லப்படுவதிலிருந்து எதிர்மனுதாரர்களைத் தடைசெய்து இடைக்கால உறுத்துக்கட்டளை பிறப்பிக்கவும், இந்த மாண்புமிகு நீதிமன்றம் நீதியின் நலன்கருதி தக்கதாகவும் முறையானதாகவும் கருதுகின்ற அத்தகைய மேல் அல்லது பிற உத்தரவுகளைப் பிறப்பிக்கவும்."

9.3. உறுத்துக்கட்டளை கோருவதற்கான விண்ணப்பத்துடன் (மு.வி. எண் 370/2022) திரு. பி. வைரமுத்தால் உ.வ. எண் 119/2022 தாக்கல் செய்யப்பட்டது. உ.வ. எண் 119/2022-இன் முதன்மை வேண்டுரைகள் பின்வருமாறு:- "(அ) ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இருவரின் வெளிப்படையான ஒப்புதலின்றி, 11.07.2022 அன்றோ அல்லது வேறு எந்த தேதியிலோ பொதுக்குழுக் கூட்டத்தை நடத்துவதிலிருந்து பிரதிவாதிகளை தடுக்கின்ற நிரந்தர உறுத்துக்கட்டளைக்காகவும். (ஆ) 1-ஆம் பிரதிவாதியான கட்சியின் விதிகளில் குறிப்பிட்டுள்ளபடி, அதன் உறுப்பினர்களுக்கு 15 நாட்களுக்கு முன்னதாக அறிவிப்பு வழங்காமல் 11.07.2022 அன்றோ அல்லது வேறு எந்த தேதியிலோ பொதுக்குழுக் கூட்டத்தைக் கூட்ட பிரதிவாதிகளை அல்லது கட்சியின் அலுவல் பொறுப்பாளர்கள் வேறெவரையும் தடுக்கின்ற நிரந்தர உறுத்துக் கட்டளைக்காகவும்."

9.4. மேற்படி உ.வ. எண் 19/2022 உடன் தாக்கல் செய்யப்பட்ட மு.வி. எண் 370/2022-இல், இடைக்கால பரிகாரத்திற்கான வேண்டுரை பின்வருமாறு:- "(அ) உரிமை வழக்கின் தீர்வு நிலுவையிலிருக்கையில், கட்சியின் துணை விதிகளை மீறும்வகையில், கூட்டம் நடக்கும் தேதியை 15 நாட்களுக்கு முன்னதாக அளிக்காமல், 01.07.2022-ஆம் தேதியிடப்பட்ட கையெழுத்திடாத அறிவிப்பின் அடிப்படையில், 11.07.2022 அன்று நடைபெறுவதாகக் குறிப்பிடப்பட்ட 1-ஆம் எதிர்மனுதாரரான கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தை நடத்துவதாகச் சொல்லப்படுவதிலிருந்து எதிர்மனுதாரர்களைத் தடைசெய்து இடைக்கால உறுத்துக்கட்டளை உத்தரவைப் பிறப்பிக்கவும், இந்த மாண்புமிகு நீதிமன்றம் நீதியின் நலன் கருதி தக்கதாகவும் முறையானதாகவும் கருதுகின்ற அத்தகைய மேல் அல்லது பிற உத்தரவுகளைப் பிறப்பிக்கவும்."

9.5. மேற்கொண்டு செல்லும் முன், கூடுதல் இடைக்கால பரிகாரம் கோரி, 07.07.2022 அன்று, மு.வி. எண் 379/2022 என்ற மற்றொரு இடைக்கால பரிகார விண்ணப்பம் உ.வ. எண் 119/2022-இல் தாக்கல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்: "(அ) துணை விதி 20(அ)ii, 20(அ)(iii)-இன்படி, 5 ஆண்டு காலத்திற்கு கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை நீக்குவது தொடர்பான தீர்மானம் எதனையும் நிறைவேற்றுவதிலிருந்து எதிர்மனுதாரர்களை தடுக்கின்றன ஓர் இடைக்கால உறுத்துக்கட்டளை உத்தரவைப் பிறப்பிக்கவும், அதனைத்தொடர்ந்து, உரிமை வழக்கின் தீர்வு நிலுவையிலிருக்கையில், 11.07.2022 அன்று நடைபெறுவதாகச் சொல்லப்படும் பொதுக்குழுக் கூட்டத்தில், 01.07.2022-ஆம் தேதியிடப்பட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள 3, 4, 5, 6, 7 என்ற அம்சங்கள் தொடர்பான தீர்மானங்களை/முடிவுகளை நிறைவேற்றாமலிருக்க எதிர்மனுதாரர்களுக்கு உத்தரவிடவும், இந்த மாண்புமிகு நீதிமன்றம் நீதியின் நலன் கருதி தக்கதாகவும் முறையானதாகவும் கருதுகின்ற அத்தகைய மேல் அல்லது பிற உத்தரவுகளைப் பிறப்பிக்கவும்."

10. மேற்சொன்ன இரண்டு பின்னிட்ட வழக்குகள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மேற்படி இடைக்கால பரிகார விண்ணப்பங்கள், உயர் நீதிமன்ற கற்றறிந்த தனியமர் நீதியரசரால், 11.07.2022 அன்று பொதுக்குழுக் கூட்டம் நடப்பதற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு ஒருசில மணித்துளிகளுக்கு முன்னர் காலை 09:00 மணிக்குதான் பரிசீலிக்கப்பட்டு முடிவு செய்யப்பட்டன. கற்றறிந்த தனியமர் நீதியரசர் பின்னணி அம்சங்களையும், இந்த நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளையும் கருத்திற்கொண்டு, விண்ணப்பங்களைத் தள்ளுபடி செய்ய முற்பட்டார்.

10.1. அதற்குப்பிறகு, பொதுக்குழுக் கூட்டம் 11.07.2022 அன்று நடைபெற்றது, அதில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன, அவைதான் தரப்பினர்களுக்கிடையேயான வாதப்பொருளாகும். உ.வ. எண்கள் 118/2022 மற்றும் 119/2022-இன் வாதிகளால் கேள்வி எழுப்பப்பட்டுள்ள மேற்படி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் சுருக்கம், அவர்களின் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட எழுத்துப்பூர்வமான குறிப்பிலிருந்து (புத்தகத் தாள்களின் பக்க எண்களைத் தவிர்த்து) பயனுள்ளவகையில் பின்வருமாறு குறிப்பிடலாம்: "மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்ட உடனேயே, பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது, மேலும், அ.தி.மு.க.வின் தலைமை அமைப்பை, ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரின் கீழான கூட்டு தலைமை முறையிலிருந்து பொதுச் செயலாளர் பதவியின்கீழ் ஒற்றைத் தலைமைக்கு மாறுவதற்காக பல்வேறு சட்டவிரோதமான தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. ஓ.பி.எஸ்.-ஐ கட்சியின் பொருளாளர் பதவியிலிருந்து நீக்கியும், ஓ.பி.எஸ். மற்றும் பிற உறுப்பினர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியும், கூட்டத்தில் சட்டவிரோதமான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. ● ஓ.பி.எஸ்.-ஐ கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து விடுவித்து, அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குதல். ● 2 எம்.எல்.ஏ.க்கள் உட்பட 3 மூத்த தலைவர்களை வெளியேற்றுதல். ● ஒற்றைத் தலைமைக்கு திரும்புதல் மற்றும் அதற்குரிய துணை விதிகளில் திருத்தங்கள் செய்தல்: தீர்மானம் 3 ● இடைக்கால பொதுச் செயலாளர் பதவியை உருவாக்குதல்: தீர்மானம் 4 ● இடைக்கால பொது செயலாளராக இ.பி.எஸ்.-ஐ தேர்வு செய்தல்: தீர்மானம் 5 ● பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் அறிவிப்பு: தீர்மானம் 6 ● துணை விதிகளுக்கான திருத்தங்களின் சுருக்கம் அங்கீகரிக்கப்பட்டது. ○ பொதுச் செயலாளருக்கான தேர்தலில் போட்டியிடும் நபருக்கு மிகவும் உச்சவரம்பான நிபந்தனைகளை விதிக்கும் துணை விதிகளின் விதி 2-இல் திருத்தங்கள் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளன. முன்னதாக, கட்சியின் எந்த உறுப்பினரும் இந்தப் பதவிக்கு போட்டியிடலாம்."

11. 11.07.2022 அன்று மேற்படி கூட்டம் நடைபெற்றபோதிலும், மேற்சொன்ன உ.வ. எண்கள் 118/2022 மற்றும் 119/2022-இன் வாதிகள், குறிப்பிட்ட தேதியில் கூட்டம் நடத்துவதில் தலையிட மறுத்து உயர்நீதிமன்ற தனியமர் நீதியரசரால் பிறப்பிக்கப்பட்ட 11.07.2022-ஆம் தேதியிடப்பட்ட உத்தரவை சி.அ.ம. (உ) எண்கள் 12784-12785/2002 மற்றும் சி.அ.ம. (உ) எண் 12782/2022-இன் வாயிலாக இந்நீதிமன்றத்தில் எதிர்த்தனர். மேற்சொன்ன மனுக்களைப் பரிசீலிக்கையில், முக்கியமாக இந்நீதிமன்றத்தின் 06.07.2022-ஆம் தேதியிடப்பட்ட உத்தரவைப் பொறுத்து, கோரப்பட்ட பரிகாரங்களின்பேரில் உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கவில்லை என்பதை இந்நீதிமன்றம் கவனத்திற்கொண்டு, 06.07.2022-ஆம் தேதியிடப்பட்ட உத்தரவில் குறிப்பாக உயர் நீதிமன்ற விருப்பதிகாரங்களின்பேரில் எந்தக் கட்டுப்பாடும் இல்லாதபோது இடைக்கால பரிகாரங்களுக்கான மேற்படி விண்ணப்பங்கள் உயர் நீதிமன்றத்தால் மறுபரிசீலனை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று கருத்துக்கூறியது. மேற்படி மனுக்கள் 29.07.2022 அன்று தீர்வு செய்யப்பட்டன, மேலும், வழக்கைத் திருப்பி அனுப்புகையில், உயர் நீதிமன்றத்தால் வழக்கு விசாரிக்கப்படும் வரையில், நாளது தேதியில் இருந்த நிலையே தரப்பினர்களால் தொடர்ந்து பேணிவர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது, அதேசமயத்தில், வழக்கின் நற்கூறுகளின்பேரில் இந்நீதிமன்றத்தால் ஏதும் கருத்து தெரிவிக்கப்பட்டதாக அதுகாறும் உள்ள நிலை உத்தரவை, எடுத்துக்கொள்ளக்கூடாது என்பது தெளிவாக்கப்படுகிறது. 29.07.2022-ஆம் தேதியிடப்பட்ட உத்தரவு பின்வருமாறு:- "1. விலக்களிப்பு விண்ணப்பங்கள் அனுமதிக்கப்படுகின்றன.

2. கட்சிகளுக்கான மூத்த வழக்குரைஞர்களின் வாதங்கள் விரிவாகக் கேட்கப்பட்டன.

3. மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் நிலுவையிலிருக்கும் பிரச்சினையில் உள்ள சில தரப்பினர்கள், சிறப்பு அனுமதி மனு (உ) எண் 11237/2022, சிறப்பு அனுமதி மனு (உ) எண் 11578/2022 மற்றும் சிறப்பு அனுமதி மனு (உ) எண் 11579/2022 என்ற சிறப்பு அனுமதி மனுக்களைத் தாக்கல் செய்ததாக பதிவாவாணத்திலிருந்து தெரிகிறது. இம்மனுக்கள் 06.07.2022-ஆம் தேதியன்று பட்டியலிடப்பட்டபோது, 1-ஆம் எதிர்மனுதாரரின் பொதுக்குழுக் கூட்டம் 11.07.2022-ஆம் தேதியன்று நடத்தப்பட வேண்டும் என்று மற்றவற்றுக்கிடையே இந்நீதிமன்றம் சில உத்தரவுகளைப் பிறப்பித்தது.

4. இந்த நீதிமன்றத்தில் தற்போதுள்ள மனுதாரர்கள், 01.07.2022-ஆம் தேதியன்று பொதுக்குழுக் கூட்டத்தை நடத்துவதை எதிர்த்தும், நிலுவையிலுள்ள உரிமை வழக்குகளில் இடைக்கால பரிகாரங்கள் கோரியும் மற்றவற்றுக்கிடையே உரிமையியல் வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளனர். எனினும், எதிர்ப்புக்குள்ளான உத்தரவின் மூலம், மெட்ராஸ் உயர் நீதிமன்ற கற்றறிந்த தனியமர் நீதியரசர், இடைக்கால பரிகாரங்களின்பேரில் தீர்ப்பளிக்க விரும்பினாரே தவிர, கோரப்பட்ட பரிகாரங்கள் குறித்து தீர்ப்பளிக்கவில்லை எனத் தெரிகிறது. மேலும், கற்றறிந்த தனியமர் நீதியரசர் தீர்மானித்ததாவது: "11. கட்சிகாரர்களின் கற்றறிந்த வழக்குரைஞர்களின் வாதங்களைக் கேட்ட பின்னர், எதிர்மேல்முறையீட்டாளர்/பிரதிவாதிக்கான கற்றறிந்த மூத்த வழக்குரைஞரால் முன்வைக்கப்பட்ட வாதங்களில் பெரும் வலிமையிருப்பதாக இந்நீதிமன்றம் அறிகிறது. "தொடக்கத்தில், 11.07.2022 அன்று நடைபெறுவதாகக் குறிக்கப்பட்ட 3-ஆம் எதிர்மனுதாரரின் பொதுக்குழுக் கூட்டத்தைப் பொறுத்தவரை, அதனைச் சட்டப்படி நடத்தலாம் என்று மாண்புமிகு உச்ச நீதிமன்றம் சந்தேகத்திற்கு இடமில்லாமல் கருத்துரைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஆகவே, மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைக் கருத்திற்கொண்டு, பொதுக்குழுக் கூட்டம் சட்டப்படியாக நடைபெறவில்லை என விண்ணப்பதாரர்கள் வழக்கின் முகாந்திரத்தை மெய்ப்பித்திருந்தால், இந்நீதிமன்றம், மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவில் நன்கு தலையிட்டு, அதனைப் புறந்தள்ளி கூட்டம் நடத்துவதிலிருந்து எதிர்மேல்முறையீட்டாளர்களை/பிரதிவாதிகளை தடை செய்து உத்தரவுகள் பிறப்பிக்கலாம் எனக் கூறி, விண்ணப்பதாரர்களுக்கான கற்றறிந்த மூத்த வழக்குரைஞரால் நுட்பமாக முன்வைக்கப்பட்டவாறு அதனை பொருள்விளக்கம் செய்து, ஒரு முரணான முடிவை இந்நீதிமன்றம் எடுக்கமுடியாது. இந்த நீதிமன்றம் விண்ணப்பதாரர்களுக்கான கற்றறிந்த மூத்த வழக்குரைஞரால் முன்வைக்கப்பட்ட வாதத்தை உறுதிசெய்ய முடியவில்லை என்றாலும், அது ஒன்றுக்கும் மேற்பட்ட காரணத்திற்காக ஆச்சரியமடைந்தது, முதலாவதாக, மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தால் ஏற்கெனவே வழங்கப்பட்ட உத்தரவைக் கருத்திற்கொள்ளாமல், கற்றறிந்த தனியமர் நீதியரசர் 11.07.2022 அன்று பொதுக்குழுக் கூட்டத்தை நடத்துவது தொடர்பான பிரச்சினையை முடிவு செய்யலாம் என்று மாண்புமிகு உச்ச நீதிமன்றம் அதன் உத்தரவில் கருத்துரைத்தது; இரண்டாவதாக, இந்தக் கூட்டத்தை நடத்துவது குறித்து ஆராய்ந்து, இந்த நீதிமன்றத்தால் தேவையான உத்தரவுகள் பிறப்பிக்கப்படக் கூடாது என்பதைத் தவிர வேறு எந்த இடைக்கால பரிகாரமும் விண்ணப்பதாரர்களால் இந்நீதிமன்றத்தில் கோரப்பட்டிருக்கவில்லை; மூன்றாவதாக, கூட்டத்தைக் கூட்ட எதிர்மேல்முறையீட்டாளர்கள்/பிரதிவாதிகளுக்கு அனுமதி அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால், அது சட்டப்படியாக நடைபெறவில்லை என உத்தரவின் பொறுப்பாளர் என்ற முறையில் விண்ணப்பதாரர்களுக்கான கற்றறிந்த மூத்த வழக்குரைஞரால் முன்வைக்கப்பட்டுள்ளதால், வழக்கின் இந்த அம்சம் குறித்து மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தால் பரிசீலிக்கப்பட வேண்டுமேயன்றி, இந்த நீதிமன்றத்தால் அல்ல. நான்காவதாக, வழக்குப்பொருளான கூட்டம் சட்டப்படியாக நடைபெறவில்லை என்பது தொடர்பாக விண்ணப்பதாரர்கள் சார்பாக இந்த நீதிமன்றத்தில் முனைப்புடன் எழுப்பப்பட்ட காரணங்கள் யாவும், மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சமயத்தில் இருக்கவே செய்தன, மேலும், விண்ணப்பதாரர்கள், மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை ஆராய்ந்து, பொருள்விளக்கம் செய்ய இந்நீதிமன்றத்தைக் கோருவதற்குப் பதிலாக உத்தரவை மாற்றக் கோரி மறு ஆய்வு வாயிலாக மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்கு ஏன் கொண்டு வரவில்லை என்பதை இந்நீதிமன்றம் புரிந்துகொள்ளவில்லை, முன்தீர்ப்புச் சட்டத்தைப் பின்பற்றிவரும் கீழ் நீதிமன்றமான இந்நீதிமன்றம் அத்தகைய முறையில் முரணான உத்தரவுகளைப் பிறப்பிக்கும் துணிவுடன் செயல்படுவதை விரும்புவதற்கில்லை என்று கூறியுள்ளார்"

5. இந்த நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட 06.07.2022-ஆம் தேதியிடப்பட்ட முந்தைய உத்தரவின் காரணமாக, கற்றறிந்த தனியமர் நீதியரசரால் இந்த வழக்குகளில் முறையாகத் தீர்ப்பளிக்க இயலவில்லை என அவர் கருதியுள்ளார் என்பது மேற்சொன்னவற்றிலிருந்து தெளிவாகிறது. எனினும், 06.07.2022-ஆம் தேதியிடப்பட்ட உத்தரவின் ஆய்வு, உயர் நீதிமன்றத்தின் அதிகாரம் அல்லது விருப்பதிகாரத்தின் மீது அத்தகைய கட்டுப்பாடு ஏதும் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.

6. மேற்சொன்னவற்றைக் கருத்திற்கொண்டு, தற்போதைய சிறப்பு அனுமதி மனுக்களிலோ அல்லது சிறப்பு அனுமதி (உ) எண் 11237/2022, சிறப்பு அனுமதி (உ) எண் 11578/2022 மற்றும் சிறப்பு அனுமதி (உ) எண் 11579/2022 ஆகியவற்றிலோ முறையே இந்த நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட எந்த உத்தரவுகளின் தாக்கத்திற்குட்படாமல் மறுபரிசீலனைக்காக உயர் நீதிமன்றத்திற்கு இப்பிரச்சினையைத் திரும்ப அனுப்புவது பொருத்தமானது என்பது எங்களுடைய ஆழ்ந்தாராய்ந்த கருத்தாகும்.

7. இந்த உத்தரவின் நகல் கிடைக்கப்பெற்ற நாளிலிருந்து கணக்கிடப்பட்ட இரண்டு வார காலத்திற்குள், உயர் நீதிமன்றத்தில் தீர்ப்புக்காக நிலுவையில் உள்ள மேற்படி வழக்குகளை முன்னுரிமையளித்து விரைவாகத் தீர்வு செய்ய அதனை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

8. உயர் நீதிமன்றம் இந்த வழக்குகளை விசாரிக்கும் வரையில், தற்போதுள்ள நிலையே கட்சிகளால் தொடரப்பட வேண்டும்.

9. இந்த வழக்குகளிலிருந்து விடைபெறும் முன், இவ்வழக்கின் தகுதிக்கூறுகளின்பேரில் நாங்கள் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறோம். இவ்வழக்கின் தகுதிக்கூறுகளின் அடிப்படையில், இந்த நீதிமன்றத்தால் எந்தக் கருத்தும் தெரிவிக்கப்பட்டதாக இன்று வழங்கப்பட்டுள்ள அதுகாறும் உள்ள நிலை உத்தரவை எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதும் தெளிவுபடுத்தப் படுகிறது. உயர் நீதிமன்றம் சட்டப்படி, தனக்கே உரிய தகுதிக்கூறுகளின் அடிப்படையில் வழக்கை விவாதித்து தீர்மானிக்க வேண்டும்.

10. சிறப்பு அனுமதி மனுக்களும், நிலுவையில் உள்ள அனைத்து விண்ணப்பங்களும், மேற்சொன்ன வரையறைகளின் அடிப்படையில் தீர்வு செய்யப்படுகின்றன.”

12. அதன்பிறகு, உயர் நீதிமன்ற கற்றறிந்த தனியமர் நீதியரசர், உ.வ. எண்கள் 118/2022 மற்றும் 119/2022-இல் மேற்படி இடைக்கால பரிகார விண்ணப்பங்களைப் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டதோடு, 17.08.2022-ஆம் தேதியிடப்பட்ட அவருடைய உத்தரவின் மூலம் தீர்வு செய்ய முற்பட்டார். அதில், கற்றறிந்த தனியமர் நீதியரசர் பின்வருமாறு தீர்மானத்திற்கான கூறுகளை வனைந்தார்:- "(1) மனுதாரருக்கு வழக்கு தொடுக்கும் உரிமை உள்ளதா? (2) 11.07.2022-ஆம் தேதியிடப்பட்ட பொதுக்குழுக் கூட்டம், இந்தக் கூட்டத்தை நடத்துவதற்கு அதிகாரம் பெற்ற நபரால் நடத்தப்பட்டதா? (3) எவருக்கு சாதகமாக வழக்கு முகாந்திரமும், வாய்ப்பு நலமும் உள்ளது?"

12.1. கற்றறிந்த தனியமர் நீதியரசர், வழக்கின் சங்கதிகளையும், கட்சியின் துணை விதிகளையும், அதோடு எஸ். திருநாவுக்கரசு மற்றும் ஒருவர் -எதிர்- செல்வி ஜெ. ஜெயலலிதா மற்றும் ஒருவர்: 1997 (III) சி. டி. சி. 229 என்ற வழக்கில் அதே அரசியல் கட்சி தொடர்பான உயர் நீதிமன்ற நீதியர் அமர்வின் தீர்முடிவையும் ஆராய்ந்து, கட்சி அமைப்புக்கு எதிராக ஏதும் செய்தாலும், உறுப்பினர்களின் உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருந்தாலும், உரிமையியல் நீதிமன்றத்திலிருந்து தீர்வு கோருவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று மற்றவற்றுக்கிடையே கருத்துரைத்தார். துணை விதிகளின்படி நடத்தப்படும் கூட்ட முடிவுகளுக்கு மட்டுமே உள் நிர்வாகக் கொள்கை பொருந்தும் என்றும், கூட்டத்தை நடத்தும் செயல்முறையே தவறானதாகவும், சட்டத்திற்கு முரணானதாகவும் இருந்தால், உரிமையியல் நடைமுறைச் சட்டம், 1908-இன் பிரிவு 9-இன் கீழ் உரிமையியல் நீதிமன்றத்தை அணுக எந்தத் தடையும் இல்லை என்றும் கற்றறிந்த தனியமர் நீதியரசர் கருத்துரைத்தார். ஆதலால், வாதிகளுக்கு, வனையப்பட்டவாறான உரிமை வழக்கைத் தொடர உரிமையிருந்தது என்று தீர்மானிக்கையில், தீர்மானத்திற்குரிய முதல் கூறு உடன்பாடாக பதிலளிக்கப்பட்டது. 12.[2] எதிரெதிர் வாதங்களைக் கருத்திற்கொண்டும், கட்சியின் துணைவிதிகளை ஆராய்ந்தும், கற்றறிந்த தனியமர் நீதியரசர் தீர்மானத்திற்குரிய இரண்டாவது கூறின் அடிப்படையில் பின்வருமாறு அவரது முடிவைப் பதிவு செய்தார்:- "75. சுருங்கக் கூறின்:- (i) 11.07.2022 அன்றான பொதுக்குழுக் கூட்டம், பொதுக்குழுக் கூட்டத்தை நடத்துவதற்கு உரிய நபரால் கூட்டப்படவில்லை. (ii) 15 நாட்கள் முன்னதாக அறிவிப்பு அளித்து மேற்படி கூட்டம் நடத்தப்படவில்லை. (iii) 23.06.2022-க்குப் பிறகு ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டது என்ற வாதம் கற்பனையானதாகும். 23.06.2022-க்குப் பிறகு இந்தப் பதவி காலியாக இருப்பதாக கூறுவதற்கான காரணம் ஆதாரமற்றது. கட்சி அமைப்பை மீறுவதை மூடி மறைக்கவும், வசதிக்கேற்ப காரணமும் கண்டுபிடிக்கப்பட்டது. (iv) கட்சி அமைப்பின் விதி 20(அ)(vii), நியமிக்கப்பட்ட மைய செயற்குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பாக, ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலியாக இருக்கும்போது, நெருக்கடிநிலை குறித்து விவாதிக்கும் ஒரு வகையமாகும். இந்த வகையம், பொதுக்குழுக் கூட்டத்தைக் கூட்டுவதற்கான உரிமையை தற்காலிக பொதுக்குழுத் தலைவருக்கு எவ்வகையிலும் அளிக்காது. (v) விதி 20(அ)-இன் துணை விதி (viii), ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரிடம் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதற்கும், கட்சியின் கொள்கைகள் மற்றும் செயல் திட்டங்களைச் செயற்படுத்துவதற்கும், கட்சி அமைப்புக்கான தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்களை நடத்துவதற்கும் அதிகாரங்களையும், பொறுப்பினையும் அளிக்கிறது. ஒருவேளை அவர்கள் கூட்டம் நடத்த மறுத்தால், பொதுக்குழு உறுப்பினர்கள் கட்சி அமைப்பின் விதி 19(vii)-இன் 2-ஆவது கூறை துணைகொள்ள வேண்டும். மொத்த உறுப்பினர்களில் ஐந்தில் ஒரு பங்கு உறுப்பினர்களால் நியாயமான கோரிக்கை வைக்கப்பட்டால், அறிவிப்பு வெளியிடப்பட்ட 30 நாட்களுக்குள் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் கூட்டத்தை நடத்துவதற்குரியவர்களாவர். கூட்டத்துக்கான தேதியை 15 நாட்களுக்கு முன்னதாகவே எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும். ஆதலால், 11.07.2022 அன்று பொதுக்குழுக் கூட்டம், அதிகாரமளிக்கப்பட்ட நபரால் நடத்தப்படாததால், 15 நாட்களுக்கு முன்னதாகவே அறிவிப்பும் அளிக்கப்படவில்லை."

12.3. அதன்பிறகு, கற்றறிந்த தனியமர் நீதியரசர், வழக்கு முகாந்திரத்தையும் வாய்ப்புநலத்தையும் குறித்து விவாதித்து தீர்மானித்துள்ளதாவது:- "76. அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 95%-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றுள்ள எதிர்மேல் முறையீட்டாளர்களுக்கு சாதகமாகவே வாய்ப்புநலமிருப்பதாக எதிர்மேல்முறையீட்டாளர்கள்/ பிரதிவாதிகளுக்கான கற்றறிந்த மூத்த வழக்குரைஞரால் இறுதி வாதம் வைக்கப்பட்டது. அதாவது, 11.07.2022 அன்று நடந்த பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தற்காலிக பொதுச் செயலாளராக தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு. எடப்பாடி கே. பழனிசாமிக்கு பின்னால் 95 சதவீதத்திற்கும் மேற்பட்ட அடிப்படை உறுப்பினர்கள் உள்ளனர். அந்தக் கூட்டத்தில், பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த தீர்மானிக்கப்பட்டு, அதற்கான தேர்தல் அலுவலரும் ஏற்கெனவே நியமிக்கப்பட்டுவிட்டார். இருப்பினும், தற்போதுள்ள நிலையையே தொடர்வதற்கு கட்சிக்காரர்களை பணித்துள்ள மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவின் காரணமாக, பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் செயல்முறை ஏதும் மேற்கொள்ளப்படவில்லை. கட்சியின் அடிப்படை உறுப்பினர்களை பொதுச் செயலாளராக முன்னிறுத்தி, கட்சியை ஜனநாயக முறையில் நடத்த விரும்பும் எதிர்மேல்முறையீட்டாளர்களுக்கு/பிரதிவாதிகளுக்கு சாதகமாகவே வாய்ப்புநலம் உள்ளது. உறுத்துக்கட்டளையின் வேண்டுரை ஏற்றுக்கொள்ளப்பட்டால், அது எதிர்மேல்முறையீட்டாளர்களுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பினை ஏற்படுத்தும்.

77. இந்த நீதிமன்றம் உறுத்துக்கட்டளைக்கான வேண்டுரையைப் பரிசீலிக்கையில், வழக்கு முகாந்திரம், வாய்ப்புநலம் மற்றும் ஈடு செய்ய முடியாத ஊறு ஆகிய மூன்று சோதனைகளைப் பயன்படுத்துவதற்குட்பட்டதாகும். உறுத்துக்கட்டளைப் பிறப்பிக்கப் படாவிட்டால், பிரச்சினைக்குள்ளான பொதுக்குழுக் கூட்டத்திற்குப் பிறகு, வாதிகளும்/விண்ணப்பதாரர்களும், வேறு சிலரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டதால், கட்சி அமைப்பின் எழுத்துப்பூர்வமான வகையங்களுக்கு முரணாக பொதுக்குழுக் கூட்டத்தை நடத்துவதற்கு திரு, எடப்பாடி கே. பழனிசாமி மிகவும் தகுதியான நிலையில் இருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை. முன்மொழியப்பட்ட பொதுச் செயலாளருக்கான தேர்தலில்கூட அவர்கள் பங்கேற்கவோ/போட்டியிடவோ முடியாது.

78. இக்கருத்துப்படி, இந்தப் போட்டியில் வாய்ப்புநலம், கட்சியின் ஆதாரமாக விளங்கும் அடிப்படை உறுப்பினர்களின் பதவியிலிருந்து சோதிக்கப்பட வேண்டுமேயன்றி, தலைவர்களின் பதவியிலிருந்து அல்ல. கட்சியின் அடிப்படை உறுப்பினர்களில் பெரும்பான்மையோர், இரட்டை தலைமை முறை, கட்சி நிர்வாகத்தில் அசௌகரியங்களை ஏற்படுத்துவதாக உணர்கின்றனர் என்றும், அவர்கள் ஒற்றைத் தலைமைக்கு குரல் கொடுக்கின்றனர் என்றும் எதிர்மேல்முறையீட்டாளர்கள்/ பிரதிவாதிகளால் செய்யப்பட்ட வாதம் எந்த அறுதிசெய்யத்தக்க விவரத்தின் அடிப்படையிலானதுமல்ல. குறிப்பாக, இதே இரட்டைத் தலைமையின் கீழ் பல்வேறு ஊகங்களுக்கிடையே முதலமைச்சராகவும், துணை முதலமைச்சராகவும் (அவ்வாறே) சுமார் 4½ ஆண்டுகள் வெற்றிகரமாக ஆட்சி செய்தும், ஒருங்கிணைப்பாளராகவும், இணை ஒருங்கிணைப்பாளராகவும் சுமார் 5 ஆண்டுகளாக கட்சி நிர்வகித்தும் வரப்பட்டது. இந்தக் காலகட்டத்தில் அவர்கள் கூட்டாக தேர்தல் கூட்டணியை முடிவு செய்து, அனைத்து மட்டங்களிலும் நடைபெற்ற தேர்தல்களுக்கும் கூட்டாக வேட்பாளர்களைத் தேர்வு செய்து, பல தேர்தல்களிலும் போட்டியிட்டனர். அவ்வாறிருக்கையில், 20.06.2022 முதல் 01.07.2022-க்கிடையே எவ்வாறு திடீரென 1½ கோடிக்கும் அதிகமான தொண்டர்களைக் கொண்ட ஒரு கட்சி, 2500 பழைய பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம் தற்போதுள்ள பங்கீட்டு பதவிமுறையை மாற்ற முடிவு செய்தது என்பதும், மேற்படி (அவ்வாறே) 2500 உறுப்பினர்களின் கருத்துகளை உண்மையில் 1½ கோடி அடிப்படை உறுப்பினர்கள் பிரதிபலிக்கின்றனரா? என்பதும் ஆராய்ந்து பரிசோதிக்கப்பட வேண்டிய வினாக்களாகும். கட்சி அமைப்பின்படி, திருத்தங்கள் செய்யப்படலாம், ஆனால் அவை உரிய செயல்முறைகளைப் பின்பற்றி மட்டுமே இருக்க வேண்டும். தலைமை குறித்து கட்சி உறுப்பினர்கள்தான் முடிவு செய்ய வேண்டுமேயன்றி, அவர்களது முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது, ஆனால், இந்தச் செயல்முறையில் வெளிப்படையான உரிமை மீறல் இருந்தால், நீதிமன்றத்தின் மூலம் பரிகாரம் கோர எந்தத் தடையும் இல்லை.

79. கூட்டத்தை நடத்துவதற்கு அதிகாரம் பெற்றிராத நபரால் 01.07.2022 அன்று, 11.07.2022 அன்று பொதுக்குழு கூட்டம் நடத்தக் கோரப்பட்ட அறிவிப்பு, தொடக்கத்திலிருந்தே செல்லாதது என்பதில் இந்நீதிமன்றத்திற்கு சந்தேகம் இல்லை. செல்லுபடியற்ற கூட்டத்தினால் ஏற்படும் விளைவை நிலைநிறுத்த அனுமதித்தால், இது கட்சித் தொண்டர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துவதோடு, அவர்களது தலைமை குறித்து நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்திவிடும். சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் இந்த இரு தலைவர்களுக்கும் இடையேயான பூசலின் காரணமாக, தேர்தலில் போட்டியிட்ட அடிப்படை கட்சித் தொண்டர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட தேர்தல் சின்னமான 'இரட்டை இலை'யைப் பெற முடியவில்லை என்பது தட்டச்சு ஆவணத் தொகுப்பிலிருந்து இந்நீதிமன்றம் கவனத்திற்கொண்டது. அவர்கள் இருவரும், தங்கள் கட்சிக்கான சின்னத்தை வேட்பாளர்களுக்கு ஒதுக்கித்தருமாறு கூட்டாக தேர்தல் ஆணையத்திடம் கோரத் தவறியதால், தேர்தல் ஆணையம் ஒதுக்கப்பட்ட சின்னத்தை ஒதுக்க மறுத்தது. கட்சிக்காரர்களைப் பொறுத்தவரை இது ஈடு செய்ய முடியாத ஊறு ஆகும்.

12.4. மேற்சொன்னவற்றைக் கருத்திற்கொண்டு, கற்றறிந்த தனியமர் நீதியரசர் பின்வருமாறு இடைக்கால பரிகார விண்ணப்பங்களைத் தீர்வு செய்தார். "80. மேற்கூறிய காரணங்களுக்காக, முதலேற்பு விண்ணப்ப எண்கள் 368, 370 மற்றும் 379/2022 ஆகியவை பின்வரும் கட்டளைகளுடன் தீர்வு காணப்படுகின்றன:- (i) 23.06.2022-ஆம் தேதிக்கு முன்னதாக உள்ள நிலை குறித்த உத்தரவு இருக்கவேண்டும். (ii) ஒருங்கிணைப்பாளர் திரு. ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோரின் இசைவு இல்லாமல், செயற்குழு கூட்டமோ அல்லது பொதுக்குழு கூட்டமோ நடத்தக்கூடாது. (iii) ஒற்றைத் தலைமையை மீட்டெடுப்பது உள்ளிட்ட கட்சி அமைப்பின் விவகாரங்களையும், பொதுக்குழுக் கூட்டத்தை நடத்த ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் கூட்டாக தாங்களே முடிவு செய்வதற்கு எந்தத் தடையும் இல்லை. (iv) பொதுக்குழுவின் மொத்த உறுப்பினர்களில் குறைந்தது 1/5 உறுப்பினர்களிடமிருந்து உரிய முறையீடு பெறப்படுமானால், ஒருங்கிணைப்பாளரும் இணை ஒருங்கிணைப்பாளரும் பொதுக்குழுக் கூட்டத்தை நடத்த மறுக்கக் கூடாது. (v) அத்தகைய கோரிக்கையின்பேரிலான பொதுக்குழுக் கூட்டம், கோரிக்கை பெற்ற தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் கூட்டப்பட வேண்டும், மேலும் அது 15 நாட்களுக்கு முன்னதாக எழுத்துப்பூர்வமான அறிவிப்பு கொடுத்த பிறகு நடத்தப்பட வேண்டும். (vi) பொதுக்குழுக் கூட்டத்தை நடத்துவதற்கு மேற்கொண்டு வழிகாட்டுதல் ஏதும் தேவைப்படுவதாக அல்லது கூட்டத்தை நடத்துவதற்கு ஆணையரின் உதவி தேவைப்படுவதாக ஒருங்கிணைப்பாளரும் இணை ஒருங்கிணைப்பாளரும் கருதினால், அவர்கள் இந்த நீதிமன்றத்தை அணுகி தேவையான பரிகாரத்தைக் கோருவது அவர்களின் விருப்பத்தைப் பொறுத்ததாகும்.

81. மேற்கண்ட உத்தரவுகளுடன், இந்த முதலேற்பு மனுக்கள் தீர்வு செய்யப்படுகின்றன. செலவுத்தொகை குறித்து எந்த உத்தரவும் இல்லை."

13. 17.08.2022-ஆம் தேதியிடப்பட்ட மேற்கண்ட உத்தரவு, ஈ.பி.எஸ். அவர்களால் தாக்கல் செய்யப்பட்ட மு.பி.வி. எண்கள் 227/2022, 231/2022 மற்றும் 232/2022 என்ற மூன்று உள்-நீதிமன்ற மேல்முறையீடுகளில் எதிர்க்கப்பட்டது. இந்த மூன்று உள்-நீதிமன்ற மேல்முறையீடுகளும் உயர் நீதிமன்ற நீதியர் அமர்வால் அதனுடைய எதிர்ப்புக்குள்ளான உத்தரவு மூலம் பரிசீலிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளன. 02.09.2022-ஆம் தேதியிடப்பட்ட இந்த உத்தரவின் தொடர்புடைய பகுதிகள் பயனுள்ள வகையில் கீழ்க்கண்டவாறு எடுத்துரைக்கப்படலாம்:- "28. பொதுக்குழுக் கூட்டத்தை நடத்துவது தொடர்பான வாதத்தைப் பொறுத்தவரை, பொதுக்குழுக் கூட்டம் (மு.பி.மே. எண் 227/2022-இல்) மேல்முறையீட்டாளராலும், முதலாம் எதிர்மேல்முறையீட்டாளராலும் 23.06.2022 அன்று நடத்தப்பட்டது. 23.06.2022 அன்று நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் மேல்முறையீட்டாளரும், எதிர்மேல்முறையீட்டாளருங்கூட கலந்து கொண்டனர். மு.பி.வி. எண் 160/2022-இன் உ.ப.ம. எண் 9962/2022-இல் பிறப்பிக்கப்பட்ட 23.06.2022-ஆம் தேதியிடப்பட்ட உத்தரவின்படி, இந்த நீதிமன்றம் 23 வரைவு தீர்மானங்களை முடிவு செய்ய பொதுக்குழுவுக்கு அனுமதி அளித்ததோடு, மற்ற விடயங்களை விவாதிக்கவும் உறுப்பினர்களுக்கு அனுமதி அளித்தது என்றாலும், 23 வரைவு தீர்மானங்களைத் தவிர இறுதி முடிவு ஏதும் எடுப்பதற்கு அவர்களை தடைசெய்தது. மேற்படி கூட்டத்தில், பொதுக்குழுக் கூட்டத்தை நடத்துமாறு 2190 உறுப்பினர்கள் எழுத்துப்பூர்வ கோரிக்கை விடுத்தனர். மேற்படி கடிதத்தின் அடிப்படையில், அடுத்த பொதுக்குழுக் கூட்டம் 11.07.2022 அன்று நடைபெறும் என்று அந்த பொதுக்குழுக் கூட்டத்திலேயே அறிவிக்கப்பட்டது. அத்தகைய அறிவிப்பின்போது முதல் எதிர்மேல்முறையீட்டாளர் அங்குதான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். கட்சியின் துணை விதி 19(vii)-இன்படி, பொதுக்குழுக் கூட்டம் ஆண்டுதோறும் அல்லது ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் கூட்டம் நடத்துவது அவசியமெனக் கருதும்போதெல்லாம், கூட்டம் நடத்துவதற்கு 15 நாட்களுக்கு முன்னதாக அறிவிப்பு கொடுத்து நடத்த வேண்டும். பொதுக்குழுவின் மொத்த உறுப்பினர்களில் 1/5 பங்குக்கு குறையாமல் கூட்டத்தின் எண்ணிக்கை இருக்கவேண்டும். பொதுக்குழு உறுப்பினர்களில் ஐந்தில் ஒரு பங்கினர், சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தை நடத்துமாறு ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரிடம் வேண்டுகோள் விடுத்தால், அவர்கள் அந்த முறையீட்டைப் பெற்றுக்கொண்ட 30 நாட்களுக்குள் அதைச் செய்ய வேண்டும். துணை விதியின் 19(vii)-ஐ தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் எடுத்துக் குறிப்பிடத்தக்கதாகும். விதி 19(vii) பின்வருமாறு:- பகுதி vii:- பொதுக்குழுக் கூட்டம் ஆண்டுதோறும் அல்லது ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் கூட்டம் நடத்துவது அவசியமெனக் கருதும்போதெல்லாம், கூட்டம் நடத்துவதற்கு 15 நாட்களுக்கு முன்னதாக அறிவிப்பு கொடுத்து நடத்த வேண்டும். பொதுக்குழுவின் மொத்த உறுப்பினர்களில் ஐந்தில் ஒரு பங்குக்கு குறையாமல் கூட்டத்தின் எண்ணிக்கை இருக்கவேண்டும். பொதுக்குழு உறுப்பினர்களில் ஐந்தில் ஒரு பங்கினர், சிறப்பு பொதுக்குழு கூட்டத்தை நடத்துமாறு ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரிடம் வேண்டுகோள் விடுத்தால், அவர்கள் அந்த முறையீட்டைப் பெற்றுக்கொண்ட 30 நாட்களுக்குள் அதைச் செய்ய வேண்டும். விதி 19(vii)-ஐ வாசிக்கையில், முதல் பகுதி, ஆண்டுக்கு ஒருமுறை கூட்டப்பட வேண்டிய வழக்கமான பொதுக்குழுக் கூட்டம் குறித்தும், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரின் வேண்டுகோளின்பேரில் கூட்டப்படுவது குறித்தும் குறிப்பிடுகிறது என்பதைக் காணலாம். அக்கூட்டத்தை நடத்துவதற்கு, விதி 19(vii)-இன் முதல் பகுதி, கூட்டம் நடைபெறும் தேதிக்கு 15 நாட்கள் முன்னதாக அறிவிப்புக் கொடுக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறது. விதி 19(vii), கூட்டத்தை நடத்துவதற்கு எழுத்துப்பூர்வமான அறிவிப்பு எதையும் குறிப்பிடவில்லை. விதி 19(vii)-இன் இரண்டாவது பகுதி, கூட்டத்தின் எண்ணிக்கை பொதுக்குழுவின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 1/5-ஆக இருக்க வேண்டும் எனக் கூறுகிறது. பொதுக்குழுவின் உறுப்பினர்களில் 1/5-இல் ஒரு பங்கினரின் கோரிக்கையின்பேரில் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்தை நடத்துவதற்கு, ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரால் அந்த கோரிக்கையைப் பெற்றுக்கொண்ட 30 நாட்களுக்குள் அது கூட்டப்பட வேண்டும். இரண்டாவது பகுதி பொதுக்குழு உறுப்பினர்களுக்கு எந்த அறிவிப்பும் வழங்குவது குறித்து குறிப்பிடவில்லை. வழக்கமான பொதுக்குழுக் கூட்டம் போன்றல்லாமல், பொதுக்குழுக் கூட்டத்தைக் கோருவோருக்கு 15 நாட்களுக்கு முன்னதாகவே அறிவிப்பு கொடுப்பதுபோன்ற எந்த அறிவிப்பும் விதி 19(vii)-இல் குறிப்பிடப்படவில்லை. வழக்கமான பொதுக்குழுக் கூட்டத்திற்கும், உறுப்பினர்களின் கோரிக்கையின் அடிப்படையிலான சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்திற்குமிடையே உள்ள வேறுபாட்டை துணைவிதிகளின் தமிழ் வடிவம் தெளிவாக வரையறுக்கிறது. துணை விதியின் தமிழ் வடிவம், வழக்கமான கூட்டத்தைக் குறித்து குறிப்பிடுவதோடு “மேற்படி கூட்டத்துக்கு 15 நாட்கள் முன்அறிவிப்பு கொடுக்க வேண்டும்” என்று கூறுகிறது, அதேநேரத்தில் கோரிக்கை விடுப்பவர்களால் கோரப்படும் சிறப்பு கூட்டத்திற்கு அத்தகைய நிபந்தனை எதுவும் இல்லை. இந்த இரண்டு கூட்டங்களுக்கும், எழுத்துப்பூர்வமான அறிவிப்பு கொடுக்கப்பட வேண்டும் என துணை விதிகள் குறிப்பிடவில்லை. விதி 19(vii)-ல் குறிப்பிடப்பட்டுள்ள அறிவிப்பு கூட்டத்திற்கான அறிவிப்பேயன்றி, ஒவ்வொரு உறுப்பினருக்குமான அறிவிப்பு அல்ல. இந்த அறிவிப்பு, வெளியீட்டின் வாயிலாகவோ, அறிவிப்பு பலகையில் ஒட்டுதல், அறிவித்தல் போன்றவற்றின் வாயிலாகவோ செய்யலாம். கையிலுள்ள வழக்கில், சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தின் அறிவிப்பு, 23.06.2022 அன்று நடந்த கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. ஆகவே, 23.06.2022 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பு, 11.07.2022 அன்று சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தை நடத்துவதற்கான உரிய அறிவிப்பாக இருந்தது. 12.09.2017 அன்று நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்திற்கான அறிவிப்பு, தலைமை அலுவலகப் பொறுப்பாளர்களால் 28.08.2017 அன்று வெளியிடப்பட்டபோது, 23.06.2022 அன்று பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்ற இடத்தில், 11.07.2022 அன்று சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தை நடத்துவதற்கான அறிவிப்பை, உரிய அறிவிப்பாகக் கருதலாம். "அறிவிப்பு" "என்ற சொல், ஒரு குறிப்பிட்ட சங்கதி குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினருக்குத் தெரிவிப்பதையே குறிக்கிறது. இது "எழுத்துப்பூர்வமான அறிவிப்பு" என்றோ, வெறும் கடிதம் என்றோ வரையறுக்கப்பட முடியாது. ஓர் அறிவிப்பு பல வடிவங்களில் இருக்கலாம். இந்த அறிவிப்பானது நடைமுறைக்கு மாறாக இருப்பதாகக் கருதினாலும், அந்த அறிவிப்புக்கு அடிப்படையாக உள்ள தற்சார்பான உரிமை/கடமை இருக்கும்வரை, பொதுக்குழுவின் உறுப்பினர்கள் அதை எப்போதும் ஏற்புறுதி செய்வதற்குரியவர்களாவர். இந்தக் கருத்துரை, ஏ.ஐ.ஆர். 1962 எஸ்.சி. 666 (மேற்குறிப்பிடப்பட்ட) மாண்புமிகு உச்ச நீதிமன்றத் தீர்ப்புரை வாயிலாக வகுத்துரைக்கப்பட்டுள்ளது.

29. பொதுக்குழு உறுப்பினர்களில் 1/5-ல் பங்கினரின் கோரிக்கையின்பேரில் சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தை நடத்துவதற்குங்கூட 15 நாட்கள் அறிவிப்பு கொடுக்க துணை விதிகளை இயற்றியவர்கள் நினைத்திருந்தால், விதி 19(vii)-இன் இரண்டாவது பகுதியின் இறுதியில் 15 நாட்கள் அறிவிப்பு கொடுப்பதை இணைத்திருக்கக்கூடும். முதல் பகுதியில் குறிப்பிடப்பட்டிருக்கும் 15 நாட்கள் அறிவிப்பு, வழக்கமான வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் குறித்து மட்டுமே பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அறிவிப்பு கொடுக்க வேண்டும் என்பதோடு ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரின் வேண்டுகோளின்பேரில் நடத்தப்படும் பொதுக்குழுக் கூட்டத்திற்கும் அறிவிப்பு கொடுக்க வேண்டும் என்பதே துணை விதிகளை இயற்றியவர்களின் உட்கருத்து என்பதை நிலைநாட்டும். பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கைபேரில் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் நடத்தப்படுவதால், சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்தை மீண்டும் நடத்துவதற்கு உறுப்பினர்களுக்கு மீண்டும் அறிவிப்பு கொடுக்க வேண்டிய அவசியம் இருக்காது. பொதுக்குழுவிலுள்ள ஐந்தில் ஒரு பங்கு உறுப்பினர்களின் கோரிக்கையின்பேரில் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்தைக் கூட்ட மீண்டும் 15 நாள் அறிவிப்பு கொடுக்கப்பட்டால், கூட்டம் 16-ஆம் நாளிலிருந்து 30-ஆம் நாளுக்குள்ளாகத்தான் கூட்டப்படும் நிலைக்கு அது வழிவகுக்கும்.

30. இந்தக் கூட்டத்துக்கான திட்டக்குறிப்பு 01.07.2022 அன்று வெளியிடப்பட்டது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். 23.06.2022 அன்றே, 11.07.2022 அன்று கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்தை நடத்த 2190 பொதுக்குழு உறுப்பினர்களால் கையெழுத்திடப்பட்ட கோரிக்கை பொதுக்குழுத் தலைவர், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்கு அனுப்பப்பட்டு, அது பொதுக்குழுத் தலைவரிடம் அளிக்கப்பட்டது. 23.06.2022 அன்று பொதுக்குழுக் கூட்டத்தை நடத்துவதற்கு பொதுக்குழுத் தலைவர் கட்டாயம் இருக்க வேண்டும் என்பதை மறுக்கமுடியாது. பொதுக்குழுத் தலைவர் இல்லாவிட்டால், கூட்டம் நடத்தப்பட முடியாது. ஆகவே, ஒருங்கிணைப்பாளருக்கும், இணை ஒருங்கிணைப்பாளருக்கும் இடையேயான கருத்து வேறுபாட்டின் காரணமாக, 2190 உறுப்பினர்களும், ஒரு சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தை நடத்துவதற்கான கோரிக்கையை பொதுக்குழுத் தலைவரிடம் விடுத்தனர். ஏற்கெனவே குறிப்பிட்டபடி, 11.07.2022 அன்று அடுத்த பொதுக்குழுக் கூட்டத்தை நடத்துவது குறித்த அறிவிப்பு, 1-ஆம் எதிர்மேல்முறையீட்டாளர் முன்னிலையிலும், சுமார் 2500 உறுப்பினர்களின் முன்னிலையிலும் வெளியிடப்பட்டது. 23.06.2022 அன்று பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்ற இடத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டதைக் குறித்து அவர்களுக்குத் தெரியாது என்பது 1-ஆம் எதிர்மேல்முறையீட்டாளரின் வழக்கல்ல. ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும், 1/5 பங்கு உறுப்பினர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தை நடத்தவேண்டும் என்று விதி 19(vii) கூறியுள்ளபோதிலும், ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் பிணக்கான நிலையிலுள்ளதால், அவர்கள் சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தைக் கூட்டாக நடத்தும் நிலையிலில்லை. ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் பிணக்காக இருப்பதால், அவர்கள் இணைந்து சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தை நடத்துவர் என எவரும் எதிர்பார்க்க முடியாது என்பதால் துணை விதியின் விதி 19(vii)-இன் 2-ஆம் பகுதி கண்டிப்பாகப் பயன்படுத்தப்படுமானால், அது ஒரு முடக்க நிலையில் முடிந்துவிடும். ஒருங்கிணைப்பாளரோ அல்லது இணை ஒருங்கிணைப்பாளரோ பொதுக்குழுக் கூட்டத்தை நடத்த ஒத்துழைக்காவிட்டால், அது பொதுக்குழுக் கூட்டத்தை நடத்த முடியாத சூழ்நிலைக்கு வழிவகுத்துவிடும்.

31. (மேற்குறிப்பிடப்பட்ட) (1997) 3 சி.டி.சி 229-இல் வெளியிடப்பட்ட தீர்ப்புரையில், அப்போதைய பொதுச்செயலாளர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்குழு கூட்டத்திற்கு இணையான ஒரு பொதுக்குழுக் கூட்டத்திற்கு அ.தி.மு.க.-விலிருந்து நீக்கப்பட்ட உறுப்பினர் திரு. எஸ். திருநாவுக்கரசு ஏற்பாடு செய்தார். இணை கூட்டம் நடத்துவதை எதிர்த்து, பொதுச் செயலாளர் இடைக்கால உறுத்துக்கட்டளை பிறப்பிக்கக் கோரி இந்நீதிமன்றத்தை அணுகினார், அவருக்கு ஆதரவாகவே அவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆகவே, மேற்படி தீர்ப்புரையைச் சூழ்ந்துள்ள சங்கதிகள், தற்போதைய வழக்கின் சங்கதிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை. கையிலுள்ள வழக்கில், எந்தவொரு உறுப்பினர்களாலும், இணை கூட்டம் நடத்த கோரப்படவில்லை. (மேற்குறிப்பிடப்பட்ட) (1997) 3 சி.டி.சி. 229-இல் வெளியிடப்பட்ட இந்த நீதிமன்றத்தின் மாண்புமிகு நீதியர் அமர்வினால் வகுத்துரைக்கப்பட்ட கருத்துரை, தற்போதைய வழக்கின் சங்கதிகளுக்கும், சூழ்நிலைகளுக்கும் பயன்படுத்தப்பட முடியாது. தலைவர்கள் கூட்டம் நடத்த கோராதபோது கோரிக்கை செய்பவர்களுக்கு நீதிமன்றத்திற்கு செல்வதைத் தவிர வேறு வழியில்லை என்று பொதுவாகச் சொல்லிவிட முடியாது. இத்தகைய அறிக்கை ஜனநாயகத்திற்கு புறம்பானது, சட்டவிரோதமானது. 2017-ஆம் ஆண்டில் இடைக்கால பொதுச் செயலாளரால் செயல்பட முடியாதபோது, (அவ்வாறே) அலுவலகப் பொறுப்பாளர்கள் 12.09.2018 அன்று பெறப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் கூட்டத்தை நடத்த முன்வந்தனர்.

32. பொதுக்குழுக் கூட்டத்தை நடத்துவதற்கு பொதுச் செயலாளருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது என்பதை மறுப்பதற்கில்லை. செல்வி. ஜெ. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, திருமதி வி.கே. சசிகலா இடைக்கால பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார், அவர் ஒரு குற்ற வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டதால் 2017-ஆம் ஆண்டில் அவரால் இடைக்கால பொதுச் செயலாளராக செயற்பட இயலவில்லை. ஆகவே, உறுப்பினர்களால் வேண்டுகோள் விடுக்கப்பட்டதன்பேரில், அலுவலகப் பொறுப்பாளர்கள் 12.09.2017 அன்று கூட்டத்தைக் கூட்டினர். அதேபோன்றதொரு நிலை தற்போது ஏற்பட்டுள்ளது, (அதாவது) ஒருங்கிணைப்பாளருக்கும், இணை ஒருங்கிணைப்பாளருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதால், பொதுக்குழு கூட்டம் நடந்த இடத்தில் 23.06.2022 அன்று பொதுக்குழுத் தலைவர், கூட்டம் நடத்தக் கோரிக்கை விடுத்திருப்பது சட்டவிரோதமானது என்று கூற முடியாது.

33. மேல்முறையீட்டாளராலும் முதல் எதிர்மேல்முறையீட்டாளராலும் (மு.பி.வி. எண் 227/2022-இல்) எடுக்கப்பட்ட நிலைப்பாட்டின் காரணமாக, கட்சியில் செயல்பாட்டு முட்டுக்கட்டை உள்ளது என்பது ஒப்புக்கொள்ளப்படுகிறது. பொதுக்குழுதான் கட்சியின் மிக உயர்வான அமைப்பு என்று விதிகள் 5, 19(i) மற்றும் 19(viii) தெள்ளத்தெளிவாக்குகின்றன. கட்சியின் துணை விதிகளின்படி, விதிகளைத் திருத்தம் செய்யவோ அல்லது எந்தவொரு முக்கிய முடிவும் எடுப்பதற்கோ செயற்குழுவுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கவில்லை. அத்தகைய முடிவு எடுக்கப்பட்டால், அது கட்சியின் பொதுக்குழுவால் அங்கீகரிக்கப்பட வேண்டும். விதிகள் மற்றும் ஒழுங்குமுறை விதிகளின் கீழ் தலைவர்கள், தங்களுக்கு குறிப்பாக என்ன வகைசெய்யப்பட்டுள்ளதோ, அவற்றைத் தவிர வேறு ஏதாவது முடிவு அல்லது நடவடிக்கை எடுப்பார்களேயானால், அவை பொதுக்குழுவில் ஏற்புறுதியளிக்கப்பட வேண்டும். பொதுக்குழு, அடிப்படை உறுப்பினர்களால் இறுதியாகத் தேர்ந்தெடுக்கப்படுவதால், அது துணை விதிகளின் விதிகள் 6 முதல் 14-இன்படி மிக்க அதிகாரம் பெற்றதாகும்.

34. ஏற்கெனவே குறிப்பிட்டபடி, பொதுக்குழு 2665 உறுப்பினர்களைக் கொண்டதாகும், அவர்கள் துணை விதிகளின் விதிகள் 6 முதல் 14-இன்படி, கழகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாவர். தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பர். பொதுக்குழுதான் கட்சியின் உயர் அதிகாரம் கொண்ட குழு என்பதை மறுக்க முடியாது. துணை விதிகளின் விதிகள் 19(i) மற்றும் 19(viii)-இன்படி, கொள்கை விடயங்களின் அடிப்படையில் முடிவெடுக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. துணை விதிகளின் விதி 43-இன்படி, துணை விதிகளைத் திருத்தம் செய்ய பொதுக்குழுவுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. 11.07.2022 அன்று நடைபெற்ற பொதுக்குழு, துணை விதிகளின் விதி 19(vii)-இன் கீழ், கோரிக்கை செய்தோரின் சிறப்புக் கூட்டமாக அமைந்தது. ஏற்கனவே குறிப்பிட்டபடி, 2190 உறுப்பினர்கள், சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தை நடத்துமாறு கோரிக்கை விடுத்தனர். 23.06.2022 அன்று நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் விடுக்கப்பட்ட கோரிக்கை, பொதுக்குழுக் கூட்டம் 11.07.2022 அன்று நடைபெறும் என்று உறுப்பினர்களுக்கு தெரிவித்து, கூட்டம் நடந்த இடத்தில் அறிவிக்கப்பட்டது. 2190 உறுப்பினர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கையைத் தொடர்ந்து, 2432 உறுப்பினர்களால் ஒரு திட்டக்குறிப்பு கையெழுத்திடப்பட்டது. 11.07.2022 அன்று கூட்டம் நடைபெற்றது, இந்தக் கூட்டத்தில் 2460 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அதன்பிறகு, பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஆதரித்து, 2539 உறுப்பினர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரங்களைத் தாக்கல் செய்தனர்.

35. கட்சியில் முடிவு எடுப்பதில் முடக்கநிலை ஏற்பட்டதால், ஒருங்கிணைப்பாளரும் இணை ஒருங்கிணைப்பாளரும் கோரிக்கையின்பேரில் செயல்பட முடியவில்லை. மேல்முறையீட்டாளர் கூற்றுப்படி, ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ஏற்புறுதி செய்யப்படாததால் 23.06.2022 அன்று காலாவதியாகிவிட்டன. பொதுக்குழுவின் இதர உறுப்பினர்களின் தேர்தல்கள் திருத்தப்பட்ட எந்த துணை விதியின் அடிப்படையிலும் இல்லாததால், அவை காலாவதியாகாது என்பது குறிப்பிடத்தக்கதாகும். 2017-இல் நிலவிய நிலைமைபோன்றே தற்போதைய நிலைமையும் உள்ளது. ஒருங்கிணைப்பாளரும் இணை ஒருங்கிணைப்பாளரும் கூட்டம் நடத்தக் கோரும்நிலையில் இல்லாதபோது, உறுப்பினர்கள் ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை அணுகுவதற்கு கட்டாயப்படுத்த முடியாது, ஆகவே, 12.09.2017 அன்று கூட்டம் நடத்துவதற்கு பயன்படுத்தியவாறு விதி 20(அ) (vii)-இன் கீழ் அலுவலகப் பொறுப்பாளர்களுக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தை இதன் பொருட்டு பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

36. எளிதாக பார்வையிடும்பொருட்டு, அரசியல் கட்சியின் துணை விதிகள் இந்தத் தீர்ப்புரையுடன் இணைக்கப்பட்டுள்ளது.

37. துணை விதிகளின் விதி 43-இன் கீழ் பொதுக்குழுவில் மட்டுமே துணை விதிக்கான திருத்தங்கள் செய்ய முடியும்.

38. மு.வி. எண்கள் 368, 370 மற்றும் 379/2022-இல் கற்றறிந்த தனியமர் நீதியரசரால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவைத் தொடர்ந்தும், அதன்பின்னர் 06.07.2022-ஆம் தேதியிடப்பட்ட உத்தரவின் அடிப்படையிலும், பொதுக்குழுக் கூட்டம் 11.07.2022 அன்று நடைபெற்றது, சி.அ.ம. (உ) எண் 11237/2022-இல் மாண்புமிகு உச்ச நீதிமன்றம் கருத்துரைத்துள்ளதாவது:- ".........ஆ. 11.07.2022 அன்று நடைபெறவுள்ளதாகக் குறிக்கப்பட்ட 3-ஆம் எதிர்மேல்முறையீட்டாளரின் பொதுக்குழுக் கூட்டத்தைப் பொறுத்தவரை, அது சட்டப்படி நடத்தப்படலாம், மேலும் அது தொடர்பாக, எந்தவொரு இடைக்கால பரிகாரத்தின் பிற அம்சங்கள், முதலேற்புப் பிரிவில் உரிமையியல் வழக்கை(களை) விசாரிக்கும் கற்றறிந்த தனியமர் நீதியரசர் முன்பாக கொணரப்பட்டு, சமர்ப்பிக்கப்பட வேண்டும்......"

39. 01.12.2021 அன்று நடைபெற்ற செயற்குழுக் கூட்டத் தேர்தலுக்கு, 23.06.2022 அன்று நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில் ஏற்புறுதியளிக்கப்படாததால், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டன என்று கூறி, மேல்முறையீட்டாளரான ஒருங்கிணைப்பாளர், இந்திய தேர்தல் ஆணையத்திற்கு 28.06.2022-ஆம் தேதியிடப்பட்ட ஒரு கடிதத்தை அனுப்பினார். மேல்முறையீட்டாளரான இணை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளராக தொடர்வதற்கான தனது உரிமையைக் கைவிட்டார் என்பது மேற்படி கடிதத்திலிருந்து தெளிவாகிறது. ஆகவே, மேற்படி கடிதத்திற்குப் பிறகு கட்சியில் இணை ஒருங்கிணைப்பாளர் இல்லை. மேல்முறையீட்டாளர், என்றென்றைக்கும் இணை ஒருங்கிணைப்பாளராக தொடர கட்டாயப்படுத்த முடியாது. மேல்முறையீட்டாளர், இணை ஒருங்கிணைப்பாளராக தொடரும் தனது உரிமையைக் கைவிட்டுவிட்டபோது, மு.பி.வி. எண் 227/2022-இல் உள்ள மேல்முறையீட்டாளரும், 1-ஆம் எதிர்மேல்முறையீட்டாளரும் கூட்டாக பொதுக்குழுக் கூட்டத்தை நடத்த முடியாது. ஒரு பகுத்தறிவான அணுகுமுறை 12.09.2017 அன்று மேற்கொள்ளப்பட்டதில் கட்சி தலைமை அலுவலகப் பொறுப்பாளர்களின் வேண்டுகோளின்படி பொதுக்குழுக் கூட்டம் நடத்துவது குறித்து அறிவிக்கப்பட்டது. விதி 19(vii)-ஐ கடுமையாகப் பின்பற்றுவது அபத்தத்திற்கு வழிவகுக்கும். இந்தச் சூழ்நிலையில், சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தை 11.07.2022 அன்று நடத்துவதற்கு 23.06.2022 அன்று பொதுக்குழுத் தலைவரால் கூட்டப்பட்ட பொதுக்குழுக் கூட்டம் முறையானதே.

40. பொதுக்குழுவின் 2665 உறுப்பினர்களில் 2190 உறுப்பினர்களால் கூட்டத்துக்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இது பொதுக்குழு உறுப்பினர்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமாகும். ஒற்றைத் தலைமை குறித்த பிரச்சினையில் முடிவெடுப்பதற்காக உறுப்பினர்களால் கோரிக்கை வைக்கப்பட வேண்டும். இந்த கோரிக்கை, கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் படித்துக் காண்பிக்கப்பட்டு, அவர்களது ஒப்புதலுடன், அது இந்தக் கூட்டத்தின் தலைவரிடம் மேடையில் கோரிக்கை செய்தவர்களின் முன்னால் ஒப்படைக்கப்பட்டது. ஒரு திட்டக்குறிப்பு 2432 பொதுக்குழு உறுப்பினர்களால் கையெழுத்திடப்பட்டதைத் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்பிறகு, 11.07.2022 அன்று நடைபெற்ற கூட்டத்தில் 2460 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் மற்றும் 11.07.2022 அன்று நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு தங்களது ஆதரவை உறுதிப்படுத்தும்வகையில் 2539 உறுப்பினர்கள் தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரங்களைத் தாக்கல் செய்தனர்.

41. கற்றறிந்த தனியமர் நீதியரசர், முதலேற்பு விண்ணப்பங்களைத் தீர்வுசெய்கையில், இடைச்செருகுதல் உள்ளதால் அது ஒரு புனையப்பட்ட ஆவணமாகத்தான் இருக்க முடியும் என்று கருத்துரைத்தார். கோரிக்கை அல்லது திட்டக்குறிப்பில் கையெழுத்திட்ட அல்லது கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் எவரும், தாங்கள் அவ்வாறு செய்யவில்லை என்று கூறி நீதிமன்றத்திற்கு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தவிர, கூட்டத்தில் எந்தக் கோரிக்கையும் வைக்கப்படவில்லை என்று வாதியான 1-ஆம் எதிர்மேல்முறையீட்டாளர், வழக்குரையில் எந்த உறுதியுரையும் அளிக்கவில்லை. கோரிக்கை கடிதம் ஒரு புனையப்பட்ட ஆவணம் அல்லது உண்மையானதல்ல என்ற வாதக்கூற்றுகளும் அறவேயில்லை. எந்தவொரு வேண்டுகோளும் அல்லது வாதக்கூற்றும் இல்லாதநிலையில், 2190 உறுப்பினர்களால் அளிக்கப்பட்ட கோரிக்கை கடிதம் உண்மையானதல்ல என்ற (மு.பி.வி. எண் 227/2022 இல்) முதல் எதிர்மேல்முறையீட்டாளரின் வாதுரை ஏற்கப்பட முடியாது. சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்தைக் கூட்ட கோரிக்கை கடிதத்தில் கையொப்பமிட்டுள்ள 2190 உறுப்பினர்களில் எவரும் தங்கள் கையொப்பத்தையோ அல்லது ஆவணத்தின் பொருளடக்கத்தையோ மறுத்திருக்காதபோது, மேற்படி கடிதத்தைக் குறித்து மூன்றாம் தரப்பினர் கேள்விக்கேட்க முடியாது. கையொப்பத்தை மறுக்கும் நபர் அந்தக் குறிப்பிட்ட நபராகத்தான் இருக்க முடியுமேயன்றி, மூன்றாவது தரப்பினராக இருக்க முடியாது. கோரிக்கை கடிதத்தில் கையொப்பமிட்டவர்களால் எதிர்ப்பு எதுவும் காட்டப்படாததால், மேற்படி கடிதம், புனையப்பட்டதாகவோ அல்லது உண்மையான ஆவணம் அல்ல என்றோ தீர்மானிக்கப்பட முடியாது. 23.06.2022 மற்றும் 11.07.2022 அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் சட்டவிரோதமானவை அல்லது கட்சியின் துணை விதிகளுக்கு எதிரானவை என்று கருதினாலும், சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தைக் கூட்டி, அந்த இரண்டு கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மாற்றுவதற்கு எப்போதும் பொதுக்குழுவின் 1/5 பங்கு உறுப்பினர்களுக்கு வாய்ப்பு உள்ளது. கையிலுள்ள வழக்கில், பொதுக்குழு உறுப்பினர்களில் 1/5 பகுதியினரின் வேண்டுகோளின்படி, முடிவை மாற்றுவதற்காக அத்தகைய கூட்டம் எதுவும் நடத்தப்படவில்லை. இது (மு.பி.வி. எண் 227/2022-இல் உள்ள) 1-ஆம் எதிர்மேல்முறையீட்டாளருக்கு ஈடுசெய்ய முடியாத ஊறு எதுவும் ஏற்படுத்தியிருக்கவில்லை என்பதை நிலைநாட்டும்.

42. பொதுக்குழு உறுப்பினர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர், மேலும், பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்கள் 11.07.2022 அன்று சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடத்துவதற்கு கோரிக்கை விடுத்தும், 23.06.2022 மற்றும் 11.07.2022 அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் ஆதரவு தெரிவித்துள்ளபோது, வாய்ப்புநலம் 1-ஆம் எதிர்மேல்முறையீட்டாளருக்கு ஆதரவாக உள்ளது என தீர்மானிக்கப்பட முடியாது. மாறாக, வாய்ப்புநலம் மேல்முறையீட்டாளருக்குச் சாதகமாகவே இருக்க முடியும்.

43. வழக்கு முகாந்திரத்தைப் பொறுத்தவரை, (மேற்குறிப்பிடப்பட்ட) (2012) 6 எஸ்.சி.சி. 792-இல் வழக்கு முகாந்திரம் வாதியான 1-ஆம் மேல்முறையீட்டாளருக்கு சாதகமாக இருக்குமிடத்து, தற்காலிக உறுத்துக்கட்டளையின் காரணமாக 1-ஆம் மேல்முறையீட்டாளருக்கு ஈடுசெய்யவியலாத பாதிப்பேற்பட்டிருந்தால், நீதிமன்றம் தற்காலிக உறுத்துக்கட்டளையை மறுக்கும் என மாண்புமிகு உச்ச நீதிமன்றம் தீர்மானித்தது. (மேற்குறிப்பிடப்பட்ட) (1992) 1 எஸ்.சி.சி. 719-இல் வெளியிடப்பட்ட தீர்ப்புரையில், இடைக்கால உறுத்துக்கட்டளையை வழங்குகையில் அல்லது வழங்க மறுக்கையில், நீதிமன்றம், உறுத்துக்கட்டளை மறுக்கப்படுவதால், தரப்பினருக்கு ஏற்படக்கூடிய கணிசமான தீங்கின் அல்லது ஊறின் அளவைக் கண்டறிவதோடு, எதிர்த்தரப்பினருக்கு உறுத்துக்கட்டளை வழங்குவதால், ஏற்படக்கூடியவற்றை அதனுடன் ஒப்பீடு செய்வதற்கு நீதிமன்றம் சீரிய நீதிசார் விருப்புரிமையைப் பயன்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்மானித்தது. நீதிமன்றம், பாதிப்பேற்படுத்துவதற்குரிய சாத்தியங்கள் அல்லது சாத்தியக்கூறுகள் குறித்து மதிப்பிட்டும், வழக்கு நிலுவையிலிருக்கையில், வழக்குப்பொருள் தற்போதுள்ள நிலையிலேயே தொடர்ந்திருந்து வரவேண்டும் என்பதைப் பரிசீலித்தும் உறுத்துக்கட்டளைப் பிறப்பிக்கப்படும். ஆதலால், வழக்கு நிலுவையிலிருக்கையில், நீதிமன்றம், இடைக்கால உறுத்துக் கட்டளை வழங்குவதில் அல்லது மறுப்பதில் தனது சீரிய நீதிசார் விருப்புரிமையைப் பயன்படுத்த வேண்டும்.

44. மேல்முறையீட்டாளரும், முதல் எதிர்மேல்முறையீட்டாளரும் (மு.பி.வி. எண் 227/2022-இல்) ஒற்றைத் தலைமை பற்றி விவாதிக்க குறைந்தபட்சம் பொதுக்குழு கூட்டத்தைக் கூட்டுவதற்கான வாய்ப்பும் இல்லாததால் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரின் கூட்டு இசைவு இல்லாமல் செயற்குழு கூட்டமோ அல்லது பொதுக்குழு கூட்டமோ நடத்தக்கூடாது என்று உத்தரவிடுவதால், ஒட்டுமொத்த கட்சியும் ஈடுசெய்ய முடியாத சிரமத்திற்குள்ளாகும் ஒரு சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த உத்தரவு, ஏற்கெனவே கட்சியில் நிலவிவந்த "செயல் முடக்கத்தை"யே ஊக்குவிக்கிறது.

45. விதி 20(அ)(ix)-இன்படி, முக்கிய அரசியல் நிகழ்வுகள், பொதுக்குழு கூட்டத்துக்காக காத்திருக்க இயலாத மற்றும் தாமதப்படுத்த இயலாத கட்சியின் அவசரத் தன்மையுடைய கொள்கைகள் மற்றும் நிகழ்ச்சிகள் போன்றவற்றில் அவர் தக்கதெனக் கருதலாகும் அவ்வாறான நடவடிக்கைகளை எடுக்க ஒருங்கிணைப்பாளருக்கும், இணை ஒருங்கிணைப்பாளருக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அத்தகைய முடிவுகளுக்கும் நடவடிக்கைகளுக்கும் அடுத்த பொதுக்குழுக் கூட்டத்தில் ஏற்புறுதியளிக்கப்பட வேண்டும். எனினும், குழுக் கூட்டம் நடக்காதபோது, அவசர விடயங்களில் பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்துகளை அஞ்சல் மூலமாகப் பெறுவதும் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரின் விருப்பத்தைப் பொறுத்ததாகும். ஆகவே, ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் ஏதேனும் முடிவு/நடவடிக்கை எடுத்தாலும், அது பொதுக்குழுக் கூட்டத்தில் ஏற்புறுதியளிக்கப்பட வேண்டும்.

46. 11.07.2022 அன்று சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தை நடத்துவதை எதிர்த்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளபோதும், கற்றறிந்த தனியமர் நீதியரசர் 11.07.2022-ஆம் தேதியிடப்பட்ட உத்தரவு மூலம் சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தை அனுமதித்துள்ளபோதும், இது மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தில் எதிர்ப்பிலிருந்தபோது, உச்ச நீதிமன்றம் 29.07.2022-ஆம் தேதியிடப்பட்ட உத்தரவு மூலம் புதிய பரிசீலனைக்காக கற்றறிந்த தனியமர் நீதியரசருக்கு வழக்கைத் திருப்பியனுப்புகையில், 29.07.2022 அன்று உள்ளவாறான நிலையைத் தொடர்ந்துவருமாறு தரப்பினர்களுக்கு உத்தரவிட்டது. 11.07.2022 அன்றான அல்லது 23.06.2022 அன்றான நிலையையே தொடருமாறு கட்சிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே, 23.06.2022 மற்றும் 11.07.2022 அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், மு.பி.மே. எண்கள் 368, 370 மற்றும் 379/2022-இல் 17.08.2022 அன்று கற்றறிந்த தனியமர் நீதியரசரால் உத்தரவு பிறப்பிக்கப்படும் வரையில் குலைவிக்கப்படவில்லை என்பது தெளிவாகிறது.

47. பொதுக்குழுவின் 2190 உறுப்பினர்கள் 23.06.2022 அன்று விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், பொதுக்குழுத் தலைவர், அடுத்த சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்திற்கான தேதியை அறிவித்திருந்தபோது, 11.07.2022 அன்று சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்தை நடத்த 23.06.2022 அன்று எடுக்கப்பட்ட முடிவை வாதியான முதல் எதிர்மேல்முறையீட்டாளர் எதிர்த்திருக்க வேண்டும். கையிலுள்ள வழக்கில், 11.07.2022 அன்று நடைபெறவிருந்த சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தை மட்டுமே எதிர்த்து 1-ஆம் எதிர்மேல்முறையீட்டாளர் வழக்கு தாக்கல் செய்தார். 1-ஆம் எதிர்மேல்முறையீட்டாளர் 23.06.2022 அன்று நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்க்காதபோது, 23.06.2022-ஆம் தேதிக்கு முன்னதாக உள்ள நிலையையே நீடிக்கும் உத்தரவொன்று வழங்கப்பட முடியாது.

48. செயற்குழுக் கூட்டத்தை அல்லது பொதுக்குழுக் கூட்டத்தை மேல்முறையீட்டாளரும், 1-ஆம் எதிர்மேல்முறையீட்டாளரும் (மு.பி.மே. எண் 227/2022-இல்) கூட்டாக நடத்துவதற்கான உத்தரவு நிறைவேற்றப்படாததைப் பொறுத்தவரை, மேல்முறையீட்டாளரும், 1-ஆம் எதிர்மேல்முறையீட்டாளரும் ஒன்றிணைந்து செயல்படாததால் அங்கு ஒரு தேக்கநிலை ஏற்பட்டு, பணிகளை நிறைவேற்றும் சாத்தியமில்லாது போயிற்று, முன்கூறப்பட்டதன் அடிப்படையிலேயே கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் 12.09.2022 அன்று நடைபெற்றது, அதில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டு, மேல்முறையீட்டாளரும் 1-ஆம் எதிர்மேல்முறையீட்டாளரும், மேற்படி பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படலானார்கள்.

49. மேல்முறையீட்டாளரான இணை ஒருங்கிணைப்பாளர், இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பிய 28.06.2022 தேதியிடப்பட்ட தனது கடிதத்தில், ஏற்கெனவே குறிப்பிட்டபடி, ஒருங்கிணைப்பாளர் பதவியுடன் அவரது பதவியும் காலாவதியாகிவிட்டதால், மேற்படி பதவியில் தொடர அவரைக் கட்டாயப்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ளார். அதைத்தவிர, 1-ஆம் எதிர்மேல்முறையீட்டாளர் (மு.பி.மே. எண் 227/2022-இல்) மட்டும் தனிப்பட்ட முறையில் எந்த முடிவும் எடுக்க முடியாது. இச்சூழ்நிலைகளில், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் 23.06.2022 அன்று ஏற்புறுதியளிக்கப்படாததால் அவை காலாவதியாயின என்ற மேல்முறையீட்டாளரின் நிலைப்பாடு குறித்து நாங்கள் எந்த முடிவும் தெரிவிக்கவில்லை. மேற்படி பிரச்சினைக்கு, நடப்பிலுள்ள வழக்கில் தீர்வு காணலாம்.

50. மேல்முறையீட்டாளருக்காக ஆஜரான கற்றறிந்த மூத்த வழக்குரைஞர்களால் சார்வுறப்பட்ட தீர்ப்புரைகளில் வகுத்துரைக்கப்பட்ட கருத்துரை, தற்போதைய வழக்கின் சங்கதிகளுக்கும், சூழ்நிலைகளுக்கும் முற்றிலும் பொருந்துகிறது. (மேற்குறிப்பிடப்பட்ட) உ.சீ.ம. எண் 22(ஏ.பி.)/2015-இல் வழங்கப்பட்ட வெளியிடப்படாத ஒரு தீர்ப்புரையில் கவுஹாத்தி உயர் நீதிமன்றத்தால் வகுத்துரைக்கப்பட்ட கருத்துரை, 1-ஆம் எதிர்மேல்முறையீட்டாளரின் வழக்குக்குப் பொருந்துகிறது.

51. 1-ஆம் எதிர்மேல்முறையீட்டாளருக்காக ஆஜரான கற்றறிந்த மூத்த வழக்குரைஞரால் சார்வுறப்பட்ட (மேற்குறிப்பிடப்பட்ட) 1990 சப்ளி. (1) எஸ்.சி.சி. 727-இல் வெளியிடப்பட்ட தீர்ப்புரையில் மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தால் வகுத்துரைக்கப்பட்ட தீர்ப்புரை தொடர்பாக எந்த சர்ச்சையும் இல்லாதபோதிலும், தற்போதைய வழக்கின் சங்கதிகளும், சூழ்நிலைகளும் வேறுபடுவதால், மேற்படி கருத்துரை தற்போதைய வழக்குக்குப் பொருந்தாது.

52. மேற்சொன்ன காரணங்களுக்காக, உ.வ. எண் 118/2022-இல் மு.வி. எண் 368/2022-இன் முதலேற்பு விண்ணப்பங்களிலும், உ.வ. எண் 119/2022-இல் மு.வி. எண் 370 மற்றும் 379/2022-இன் முதலேற்பு விண்ணப்பங்களிலும் கற்றறிந்த தனியமர் நீதியரசரால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் நிராகரிக்கப்படுகின்றன. இதன்விளைவாக, மு.வி. எண்கள் 368, 370 மற்றும் 379-இன் முதலேற்பு விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. மேற்சொன்ன முதலேற்புப் பிரிவு மேல்முறையீடுகள் அனுமதிக்கப்படுகின்றன. செலவுத்தொகை இல்லை. இதனைத் தொடர்ந்து, தொடர்புடைய பல்வகை மனுக்களும் முடிக்கப்படுகின்றன."

14. 02.09.2022-ஆம் தேதியிடப்பட்ட மேற்கண்ட உத்தரவு, வாதியான ஓ.பி.எஸ். அவர்களால் சி.அ.ம. (உ) எண் 15753/2022-லிருந்து எழுகின்ற மேல்முறையீட்டிலும், மேற்படி மற்றொரு வாதியான பி. வைரமுத்து அவர்களால் சி.அ.ம. (உ) எண் 15705-15706/2022-லிருந்து எழுகின்ற மேல்முறையீட்டிலும் எதிர்க்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு மனுக்களும் 30.09.2022 அன்று இந்த நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டன, அந்த நாளன்று, இ.பி.எஸ். சார்பாக ஆஜரான கற்றறிந்த வழக்குரைஞர், இந்த வழக்குகள் விசாரிக்கப்படும் வரை, பொதுச் செயலாளர் தேர்தல் எதுவும் நடத்தப்படமாட்டாது என வழக்குமன்றத்தில் தெரிவித்தார். இந்த நீதிமன்றம் அவ்வாறு தெரிவிக்கப்பட்ட கூற்றைப் பதிவு செய்ததோடு, அதற்கேற்ப எதிர்மேல்முறையீட்டாளர்களுக்கு உத்தரவிட்டது. 30.09.2022-ஆம் தேதியிடப்பட்ட உத்தரவு கீழ்க்கண்டவாறு: "அறிவிப்பு அனுப்புக. சம்பந்தப்பட்ட எதிர்மேல்முறையீட்டாளர்களின் சார்பாக சம்பந்தப்பட்ட கற்றறிந்த வழக்குரைஞர் அறிவிப்பைப் பெற்றுக்கொண்டுவிட்டதால், எதிர்மேல்முறையீட்டாளர்களுக்கு தற்போது அனுப்ப வேண்டியதில்லை. அனுப்பப்பட்ட அறிவிப்பு 21.11.2022 அன்று திரும்பத்தக்கதாகும். சி.அ.ம. (உ) எண் 11237/2022 உடன் அறிவிக்கையிடுக. இதற்கிடையில், அனைத்து தரப்பினர்களும் வாதங்களை முடிக்குமாறு பணிக்கப்படுகின்றனர். 1-ஆம் எதிர்மேல்முறையீட்டாளர் சார்பாக ஆஜரான கற்றறிந்த மூத்த வழக்குரைஞர் திரு. சி. ஆர்யாமா சுந்தரம், தற்போதைய வழக்குகள் விசாரிக்கப்படும் வரை, பொதுச் செயலாளார் தேர்தல் நடத்தப்படமாட்டாது என வழக்குமன்றத்தில் தெரிவித்துள்ளார். நாங்கள் அக்கூற்றைப் பதிவு செய்து, அதற்கேற்ப எதிர்மேல்முறையீட்டாளர்களுக்கு பணிக்கிறோம்."

15. மேற்படி பின்னணியில், உயர் நீதிமன்ற நீதியர் அமர்வால் பிறப்பிக்கப்பட்ட 23.06.2022-ஆம் தேதியிடப்பட்ட முந்தைய உத்தரவோடு, 02.09.2022-ஆம் தேதியிடப்பட்ட உத்தரவையும் எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடுகள் இந்நீதிமன்றத்தால் ஒருமித்து கேட்புகைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. எனினும், 23.06.2022-ஆம் தேதியிடப்பட்ட உத்தரவைப் பொறுத்தவரை, அது, 11.07.2022-ஆம் நாளன்று கூட்டத்தை நடத்திய பிறகான நிகழ்வுகளினாலும், உயர் நீதிமன்றத்தாலும், இந்த நீதிமன்றத்தாலும் பிறப்பிக்கப்பட்ட பிற உத்தரவுகளாலும் நடைமுறையில் அதன் தொடர்புடைமையை இழந்துவிட்டது என்பதை பயனுள்ள வகையில் மீண்டும் வலியுறுத்தலாம். ஆகவே, வழக்கின் முதன்மை பகுதி, 02.09.2022-ஆம் தேதியிடப்பட்ட உத்தரவின் சட்டமுறைமைக்கும் செல்லுந்தன்மைக்கும் தொடர்புடையதாகும். இந்த நிலையில், தரப்பினர்களுக்கான கற்றறிந்த வழக்குரைஞரால் ஒப்புக்கொள்ளப்பட்டவாறு, நாங்கள், முதலில் 02.09.2022-ஆம் தேதியிடப்பட்ட உத்தரவு தொடர்பான உரிய வாதங்களைக் கேட்டோம். இதில் இதற்கு முன் சுட்டிக்காட்டப்பட்டபடி, பல்வகையான வாதங்கள் தரப்பினர்களுக்கான கற்றறிந்த வழக்குரைஞரால் வலியுறுத்தப்பட்டிருந்தாலும், இங்கே உள்ள மேல்முறையீடுகள் முக்கியமாக தற்காலிக உறுத்துக்கட்டளை வழங்குவது தொடர்புடையன எனும் சங்கதியைக் கருத்திற்கொண்டு, இது தொடர்பான வாதங்கள் மட்டுமே இத்தீர்ப்புரையில் விவாதிக்கப்பட வேண்டியவையாகும்.

16. ஒருபுறம் சம்பந்தப்பட்ட மேல்முறையீட்டாளர்களுக்காக முன்னிலையான கற்றறிந்த மூத்த வழக்குரைஞர்கள் திரு. ரஞ்சித் குமார், திரு. குரு கிருஷ்ண குமார் மற்றும் சம்பந்தப்பட்ட எதிர்மேல்முறையீட்டாளர்களுக்காக முன்னிலையான மூத்த வழக்குரைஞர்கள் திரு. சி ஆர்யமா சுந்தரம், திரு. சி.எஸ். வைத்தியநாதன், திரு. முகுல் ரோத்தகி மற்றும் திரு அதுல் சித்தாலே ஆகியோரின் விளக்கமான மற்றும் விரிவான வாதங்களை நாங்கள் கேட்டோம்.

16.1. மேற்கொண்டு செல்லும் முன், 11.01.2023 அன்று விரிவான வாதங்கள் முடிந்து, தீர்ப்புரை பகர்வதற்கு ஒத்திவைக்கப்படுகையில், சி.அ.ம. எண் 15705-15706/2022-இன் 1-ஆம் எதிர்மேல்முறையீட்டாளர் சார்பாக வழக்கு குறிப்பீடு செய்யப்பட்டதைக் கருத்திற்கொண்டு, வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன, அதன்பிறகு, 98-ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதிக்கு வரவிருக்கும் இடைத்தேர்தல் குறித்த கட்சியின் வரையறுக்கப்பட்ட செயல்திட்டத்தைச் சீரமைப்பதற்காக 03.02.2023 அன்று இந்நீதிமன்றம் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது. அதில், பொதுக்குழுவால் கட்சியின் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க நாங்கள் வகை செய்துள்ளோம், மேலும் மேல்முறையீட்டாளரான ஓ.பி.எஸ். அவர்களையும், மற்றவர்களையும் வெளியேற்றி, பொதுக்குழுவால் முடிவுசெய்யப்பட்டுள்ள வரையறுக்கப்பட்ட செயல்திட்டம் செல்லாது என்றும், வேட்பாளரின் தேர்வு பொதுக்குழுத் தலைவரால் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் வகை செய்யப்பட்டுள்ளது. அத்தகைய ஏற்பாடு, கட்சிகளின் உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்படாதவகையிலும், எந்தக் கட்சிகளுக்கும்6 6 03.02.2023-ஆம் தேதியிடப்பட்ட உத்தரவு பின்வருமாறு: "30.01.2023-ஆம் தேதியிடப்பட்ட உத்தரவில் அளிக்கப்பட்ட அனுமதியைத் தொடர்ந்து, 98-ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தல் தொடர்பான கட்சியின் வரையறுக்கப்பட்ட செயல்திட்டம் குறித்து கட்சிகளுக்கான கற்றறிந்த வழக்குரைஞரின் வாதங்களை நாங்கள் கேட்டோம். இந்த விடயங்களில் சம்பந்தப்பட்ட போட்டியிடும் கட்சிகள் மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாட்டையும் நாங்கள் கருத்திற்கொண்டுள்ளோம். கூடுதல் உரிமை எதனையும் அளிக்காமலும் இருத்தல் வேண்டும் என்பதை தெளிவாக்குகையில், மேற்படி உத்தரவு, வழக்கத்திற்கு மாறான சூழ்நிலையிலும், அவசர தேவைகளை ஆராய்ந்தும், ஜனநாயகத்தின் மீது பெரும் அக்கறைகொண்டும் பிறப்பிக்கப்பட்டது.

17. 02.09.2022-ஆம் தேதியிடப்பட்ட எதிர்ப்புக்குள்ளான தீர்ப்புரையை எதிர்த்து, மேல்முறையீட்டாளர்கள் சார்பாக வலியுறுத்தப்பட்ட தொடர்புடைய வாதங்களின் சுருக்கமாவது: தீர்ப்பு நிலுவையில் இருப்பதால், இந்த விவகாரங்களில் தொடர்புடைய சர்ச்சைக்குரிய பிரச்சினைகள் எதையும் நாங்கள் விரிவாகக்கூற விரும்பவில்லை. எனினும், 98-ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் 07.02.2023 என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளதைக் கருத்திற்கொண்டு, எங்களது கருத்துப்படி, வரவிருக்கும் இடைத்தேர்தலில் கட்சி வேட்பாளரின் பங்கேற்புடன் சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியின் நலனுக்குகந்த வகையிலும், மேலும் ஜனநாயத்தின் மீது பெரும் அக்கறைகொண்டும் நடைமுறைப்படுத்தத்தக்க தீர்வு/தற்காலிக ஏற்பாடு ஒன்று இருக்கவேண்டும் எனத் தோன்றுகிறது. எனவே, வழக்குத் தரப்பினர்களுக்காக ஆஜரான கற்றறிந்த வழக்குரைஞர்களின் வாத, எதிர்வாதங்களையும், இந்திய தேர்தல் ஆணையத்திற்காக ஆஜரான கற்றறிந்த வழக்குரைஞர்களுக்கான அறுதியுரைகளையும் கருத்திற்கொண்ட பிறகு, வரவிருக்கும் இடைத்தேர்தல் தொடர்பாகவும், சம்பந்தப்பட்ட கட்சியின் வேட்பாளர் பங்கேற்கும் நோக்கத்திற்காகவும் மட்டுமே தற்காலிக ஏற்பாட்டை செய்வது தக்கதென நாங்கள் கருதுகிறோம். மேற்படியானவற்றைப் பொறுத்தவரை, எந்தவொரு கட்சியினரின் உரிமைகளுக்கும் பாதிப்பேற்படுத்தாமலும், எந்தவொரு கட்சியினருக்கும் கூடுதல் உரிமையை வழங்காமலும், தக்கவாறு ஆராய்ந்து, வகைசெய்யப்பட்டுள்ளதாவது: (1) கட்சியின் வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பது தொடர்பான திட்டக்குறிப்பு, கட்சியின் பொதுக்குழுவால் பரிசீலனைக்காகவும், இறுதி முடிவுக்காகவும் வைக்கப்பட வேண்டும். (2) வேட்பாளரைத் தெரிவு செய்வதற்கான பொதுக்குழுவின் முடிவெடுக்கும் செயல்முறையைப் பொறுத்தவரை, காலவரம்பைக் கருத்திற்கொண்டு, சுற்றறிக்கை வாயிலான பரிசீலனைக்குத் தேவையான தீர்மானத்தை முன்வைத்து இச்செயல்முறையை மேற்கொள்ளலாம். (3) வரவிருக்கும் 98-ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் கட்சியால் முன்நிறுத்தப்படும் வேட்பாளரின் பெயரை முடிவு செய்வதற்காக பொதுக்குழுவால் முடிவெடுக்கப்படும் இச்செயல்முறையில், கட்சியிலிருந்து [அதாவது திரு ஓ. பன்னீர்செல்வம் (மேல்முறையீட்டாளர்), ஆர். வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகர் மற்றும் பி.உெறச். மனோஜ் பாண்டியன்] நீக்கப்பட்டவர்களாகவும், அவர்களின் நீக்கம், ஒரு சர்ச்சைக்குரிய விடயமுங்கூட எனச் சொல்லப்பட்டிருந்தது, தற்போதைய நோக்கமான அதாவது வரவிருக்கும் 98-ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளரைத் தெரிவு செய்வதற்கு பொதுக்குழுவால் முடிவெடுக்கப்படும் நோக்கத்தைப் பொறுத்தளவில் அத்தகைய நீக்கம் செல்லாது என வகைசெய்யப்பட்டுள்ளது. அதாவது, மேற்கண்ட நால்வரும், மேற்படி இடைத்தேர்தலுக்கான வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் இந்த வரையறுக்கப்பட்ட செயல்திட்டத்திற்காக சுழற்சி முறையில் வாக்களிப்பதற்கு தகுதியுடையவர்களாவர். (4) வேட்பாளரைத் தெரிவு செய்வதைப் பொறுத்தவரையில் பொதுக்குழுவின் இறுதியான முடிவு, பொதுக்குழுத் தலைவரான முனைவர் எ. தமிழ் மகன் உசேன் அவர்களால் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட வேண்டும்; பொதுக்குழுவின் முடிவு குறித்த அத்தகவல், வரவிருக்கும் இடைத்தேர்தலில் கட்சியின் சார்பாக

17.1. உயர் நீதிமன்றத்தின் கற்றறிந்த தனியமர் நீதியரசரால் பிறப்பிக்கப்பட்ட 17.08.2022- ஆம் தேதியிடப்பட்ட உத்தரவு தன்னிச்சையானது, ஏறுமாறானது, தவறானது அல்லது உறுத்துக்கட்டளைகளை வழங்குதலை முறைப்படுத்துகின்ற அறுதியிடப்பட்ட சட்டக் கோட்பாடுகளுக்கு முரணானது என்பதான ஒரு காண்முடிவைப் பதிவு செய்யாத அந்த உத்தரவில் உயர் நீதிமன்ற நீதியராயம் தலையிட்டிருக்கக் கூடாது என்று மேல்முறையீட்டாளர்களுக்கான கற்றறிந்த மூத்த வழக்குரைஞர் பணிந்துரைத்துள்ளார். உளத்தேர்வதிகாரம் தன்னிச்சையாக அல்லது ஏறுமாறாக அல்லது தவறாகச் செயலுறுத்தப்பட்டுள்ளதாகக் காட்டப்படுகிறபோதோ அல்லது வழக்கிடை உறுத்துக்கட்டளை வழங்குவதை அல்லது மறுப்பதை முறைப்படுத்துகின்ற அறுதியிடப்பட்ட கோட்பாடுகளை நீதிமன்றம் புறந்தள்ளுகிறவிடத்தோதான் மேல்முறையீட்டு நீதிமன்றம், முதலேற்பு நீதிமன்றத்தால் செயலுறுத்தப்படும் உளத்தேர்வதிகாரத்துடன் தலையிட முடியும் என்று பணிந்துரைக்க, அத்தகைய மேல்முறையீடுகளில், மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் அதிகாரவரம்பின் பண்புகளை முனைப்பாகக்காட்டும் வகையில், அவர்கள் வாண்டர் லிமிடெட் மற்றும் ஒருவர் -எதிர்- ஆன்டோக்ஸ் இந்தியா (பி) லிமிடெட்: 1990 சப்ளி. எஸ்.சி.சி. 727 என்ற வழக்கில் இந்த நீதிமன்றத்தின் தீர்முடிவின்மீது சார்ந்துநின்றனர். உயர் நீதிமன்ற நீதியராயத்திலுள்ள மேல்முறையீடுகளில் அத்தகைய வழக்கு விவரம் எதுவும் வேட்பாளரை நிறுத்தும் வரையறுக்கப்பட்ட செயல்திட்டத்தை அங்கீகரிக்கின்ற இந்திய தேர்தல் ஆணையத்தால் ஏற்கப்பட வேண்டும், மேலும் அதற்கேற்ப தேர்தல் அதிகாரி தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த முக்கிய வழக்குகளின் தீர்ப்புரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பதையும், இந்த தற்காலிக ஏற்பாடு வேறுவகையில் எந்தவொரு கட்சியினருக்கும் கூடுதல் உரிமைகளை அளிப்பதாகவோ அல்லது எந்தவொரு கட்சியினரின் உரிமைகளையும் பறிப்பதாகவோ ஆகாது என்பதையும் நாங்கள் மீண்டும் தெளிவுபடுத்துகிறோம். இந்த உத்தரவின்படியான தற்காலிக ஏற்பாடு, 98-ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலின் செயல்முறைக்குட்பட்டதாக இருக்கவேண்டும். இந்த உத்தரவின் நகல், அனைத்து கட்சியினருக்கும், இந்திய தேர்தல் ஆணையத்திற்கும் வழங்கப்பட வேண்டும். இதில் இதற்குமேல் குறிப்பிடப்பட்ட ஒட்டுமொத்த சூழ்நிலைகளையும், பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் தன்மையையும் கருத்திற்கொண்டு, இந்த வழக்கு நடவடிக்கைகளிலோ அல்லது தேவைப்படுவதாகத் தோன்றும் வேறேதும் உத்தரவிலோ இந்திய தேர்தல் ஆணையத்தை தரப்பினராகச் சேர்க்கும் தேவையிருப்பதாக நாங்கள் அறியவில்லை. ஆகவே, (தரப்பினராகச் சேர்ப்பதற்கான மற்றும் உத்தரவுகளுக்கான) இரண்டு விண்ணப்பங்களும் தீர்வு காணப்படுகின்றன. தீர்ப்புரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.” மெய்ப்பிக்கப்பட்டிருக்காததால், கற்றறிந்த தனியமர் நீதியரசரின் நன்கு ஆராயப்பட்ட உத்தரவை மாற்றுவதில் தலையிடுவது நிராகரிக்கப்படுவதற்குரியதாகும்.

17.2. பொதுக்குழுக் கூட்டத்தை 11.07.2022 அன்று கூட்டியதே சட்டவிரோதமானது, ஆள்வரையற்றது; அக்கூட்டம் அங்கீகரிக்கப்படவில்லை; அதில் எடுக்கப்பட்ட தீர்மானம் இரண்டு முக்கிய காரணங்களுக்காக சட்டப்படி அனுமதிக்கப்படவில்லை என்று சொல்லப்பட முடியாது என்று கடுமையாக வாதிடப்பட்டுள்ளது. முதலாவதாக, பொதுக்குழுக் கூட்டத்தை நடத்துவதற்கான அதிகாரம், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரிடம் மட்டுமே உள்ளது என்பது விதிகள் 19(vii) மற்றும் 20(அ)(viii)-ஐ படிப்பதிலிருந்து தெளிவாகிறது. ஆகவே, பொதுக்குழுத் தலைவர், பொதுக்குழுக் கூட்டத்தை 11.07.2022 அன்று நடத்துவது குறித்து 23.06.2022 அன்று எந்த அறிவிப்பையும் வெளியிடுவதற்கு அதிகாரமும் இல்லை, மேலும் அத்தகைய கூட்டம் எதனையும் அவர் கூட்டியிருக்கவும் முடியாது. மேலும், 11.07.2022 அன்று கூட்டம் நடத்த கோரிக்கை விடுத்து, ஓ.பி.எஸ். அவர்களால் கையெழுத்திடப்படாமல், முன்பின் தெரியாத ஒரு குழுவால் (தலைமையக அலுவலகப் பொறுப்பாளர்கள்) பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்ட 01.07.2022-ஆம் தேதியிடப்பட்ட எழுத்துமூலமான அறிவிப்பு, கட்சியின் துணைவிதிகளின் கீழ் அவ்வாறு செய்ய அதிகாரமற்ற நபர்களால் வெளியிடப்பட்டிருப்பதால் அது செல்லுபடியற்றதாகும். அத்தகைய கேள்விகள் கடந்த காலத்தில் எழுப்பப்பட்டிருப்பதைக் கருத்திற்கொண்டு, (மேற்கண்ட) எஸ். திருநாவுக்கரசு வழக்கில், கோரிக்கை விடுப்பவர்கள் பொதுக்குழுக் கூட்டத்தை நடத்தவேண்டும் எனத் துணைவிதிகளின் வகையம் குறிப்பிடவில்லை என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது; மேலும் பொதுச் செயலாளர் கோரிக்கை மீது போதுமான அளவில் விரைந்து செயலாற்றவில்லை எனில், அச்சமயத்தில் நீதிமன்றத்தை அணுகுவதே ஒரே வழியாகும் எனவும் பணிந்துரைக்கப்படுகிறது. இதே மற்றும் இதுபோன்ற கோட்பாடுகளின் அடிப்படையில், ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் கூட்டத்தை நடத்தத் தவறினால், நீதிமன்றத்தின் தலையிடுதலை நாடுவதே ஒரே வழி என்றாலும், கூட்டத்தைக் கூட்டுவதற்கு அதிகாரமற்ற நபர்களால் அவ்வாறு செய்ய முடியாது என்பதாகும். இரண்டாவதாக, கட்சியின் துணைவிதிகளின் விதி 19(vii)-இன் கீழ் வரையறுக்கப்பட்டவாறு 15 நாள் கால அவகாசம் அளிக்கும் கட்டளையை 01.07.2022-ஆம் தேதியிடப்பட்ட அறிவிப்பு பின்பற்றவில்லை; மேலும், பொதுக்குழு உறுப்பினர்களுக்கு கூட்டத்திற்கான எழுத்துப்பூர்வ அழைப்பிதழ்களை அனுப்புவது அ.இ.அ.தி.மு.க.இன் நீண்டகால வழக்கமாகும். கூட்டத்தின்போது அவைத் தலைவரால் வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூட்டம் நடக்கும் இடம் போன்ற முக்கிய விவரங்கள் இல்லை, இது "ஷேக்ள்டன் அவர்களின் கூட்டம் நடத்துவதற்கான சட்டமும், நடைமுறையும்"7 என்ற அதிகாரப்பூர்வ நூலில் வகுத்துரைக்கப்பட்ட அறுதியிடப்பட்ட சட்டக் கோட்பாடுகளுக்கு முரணானது என்றும் பணிந்துரைக்கப்படுகிறது.

17.3. மேலும், இந்த வழக்குகளிலுள்ள வாய்ப்புநலம், வேண்டுரைக்கப்பட்டவாறு உறுத்துக்கட்டளை வழங்குதலுக்கு சார்பாக உள்ளது என்று மேல்முறையீட்டாளர்களுக்கான கற்றறிந்த வழக்குரைஞர் வாதிட்டுள்ளார். பொதுக்குழுவிலுள்ள பெரும்பான்மையினர் எனக் கூறப்படுபவர்களின் விருப்பம், கட்சியின் ஒட்டுமொத்த அடிப்படை உறுப்பினர்களின் விருப்பத்தை பிரதிபலிக்கவில்லை என்றும், கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் ஒற்றைத் தலைமை ஆட்சிக்குத் திரும்ப விரும்புகின்றனர் என்று தெரிவிக்க எந்த விவரமும் எதிர்மேல்முறையீட்டாளர்களால் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை என்றும் பணிந்துரைக்கப்படுகிறது. மேலும், வாய்ப்புநலம் என்ற பிரச்சினை, உரிமை வழக்கில், வாதிகளால் நிலைநாட்டப்பட்ட வழக்கு முகாந்திரத்தின் தன்மையைக்கொண்டு பரிசீலிக்கப்பட வேண்டுமேயன்றி, எதிர்ப்புக்குள்ளான உத்தரவில் உயர் நீதிமன்றத்தின் நீதியராயத்தால் செய்யப்பட்டுள்ளவாறு, அப்பிரச்சினையை விலக்குவதல்ல என்று பணிந்துரைக்கப்படுகிறது. இடைக்கால உறுத்துக்கட்டளை வழங்குகையில், ‘சூழ்நிலைக்கேற்ற நீதி‘ என்ற 7 மேடலின் கார்ட்ஸ், ஜான் பியூக்-ஸ்மித்-ஆல் பதிப்பிக்கப்பட்டது, 13-ஆவது பதிப்பு, தாம்சன் ராய்டர்ஸ் ப.41-இல் கோணத்திலிருந்து வாய்ப்பு நலத்தை சீர்தூக்கிப் பார்க்கவேண்டும் என்று பணிந்துரைக்க, கர்நாடக மாநில அரசு -எதிர்- ஆ.பி. மாநில அரசு மற்றும் பலர்: (2000) 9 எஸ்.சி.சி. 572 என்ற வழக்கில் இந்த நீதிமன்றத்தின் தீர்முடிவின் ஒரு பத்தி மீதும், சூர்ய நாத் சிங் மற்றும் பலர் -எதிர்- கேத்து சிங் (இறந்தவர்), சார்பாற்றுநர்கள் மூலமாக மற்றும் பலர்: 1994 சப்ளி. (3) எஸ்.சி.சி. 561 என்ற வழக்கின் மற்றொரு தீர்முடிவின் மீதும் சார்வுறப்பட்டுள்ளது.

17.4. மேலும், இடைக்கால உறுத்துக்கட்டளை வேண்டுரைக்கப்பட்டவாறு வழங்கப்படாவிட்டால், 11.07.2022 அன்று நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைத் தொடர்ந்து, மேல்முறையீட்டாளரான ஓ.பி.எஸ். அவர்களுக்கும், அவரது தரப்பிலுள்ளவர்களுக்கும் அல்லது கட்சியின் அடிப்படை உறுப்பினர்களாக சொல்லப்படுபவர்களான அதே நிலையிலுள்ளவர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத ஊறு ஏற்படும் என்றும் வாதிடப்பட்டுள்ளது. கட்சியிலிருந்து இந்த வெளியேற்றத்துடன் அதன் தலைமை அமைப்பில் செய்யப்பட்ட பிற முக்கியமான மாற்றங்களைச் செயல்படுத்திய வகையில், கட்சியின் விவகாரங்களில் பங்கேற்பதிலிருந்து ஓ.பி.எஸ். அவர்களை விலக்குவதோடு, பாதுகாப்பான இடைக்கால உத்தரவு இல்லாதநிலையில் வழக்கின் இறுதி தீர்ப்பு வருவதற்குள் கட்சி அமைப்பில் செய்யப்படும் மாற்றங்கள் திரும்பப்பெறப்படாமலிருக்கும்.

17.5. மேலும், ஒரு விருப்புரிமை நடவடிக்கையாக, இடைக்கால உறுத்துக்கட்டளை வழங்குதல், வாய்ப்புநலத்தைச் சீர்தூக்கிப் பார்த்தல் மற்றும் வழக்கு முகாந்திரம் ஆகியவற்றின் அடிப்படையில், மேல்முறையீட்டாளர்களுக்கான கற்றறிந்த வழக்குரைஞர், அசிஸ்டென்ட் கலெக்டர் ஆஃப் சென்ட்ரல் எக்சைஸ், சந்தன் நகர், மேற்கு வங்கம் -எதிர்- டன்லப் இந்தியா லிமிடெட் மற்றும் பலர்: (1985) 1 எஸ்.சி.சி. 260, தல்பத் குமார் மற்றும் ஒருவர் -எதிர்- வி. பிரகலாத் சிங் மற்றும் பலர்: (1992) 1 எஸ்.சி.சி. 719 மற்றும் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் பேங்க் லிமிடெட் -எதிர்- கல்கத்தா ஸ்டீல் கம்பெனி மற்றும் பலர்: (1993) 2 எஸ்.சி.சி. 199 என்ற வழக்குகளின் தீர்முடிவுகளின் மீது சார்ந்துநின்றார்.

18. 02.09.2022-ஆம் தேதியிடப்பட்ட மேற்படி உத்தரவுக்கு ஆதரவாக எதிர்மேல்முறையீட்டாளர்கள் சார்பாக வலியுறுத்தப்பட்ட எதிர்வாதங்களையும் பயனுள்ள வகையில் பின்வருமாறு சுருக்கமாகக் கூறலாம்:

18.1. இடைக்கால உறுத்துக்கட்டளையை ஏற்பது அல்லது நிராகரிப்பது என்பது விருப்புரிமையைச் சார்ந்ததே என்ற தீர்முடிவில் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் வகுமுறைக்கூறு 136-இன் கீழ் தலையிட வேண்டியதில்லை என்று எதிர்மேல்முறை-யீட்டாளர்களுக்கான கற்றறிந்த மூத்த வழக்குரைஞர்கள் பணிந்துரைத்துள்ளனர். 11.07.2022 அன்று பொதுக்குழுக் கூட்டத்தை நடத்துவதற்கு எதிரான விண்ணப்பங்களில் கோரப்பட்ட பரிகாரங்கள் ஏற்கெனவே முடிவடைந்துவிட்டன என்றும், எனவே பரிகாரங்கள் நடைமுறையில் பயனற்றவையாக உள்ளன என்றும் வாதிடப்பட்டுள்ளது. உறுத்துக்கட்டளை வழங்குதல் அல்லது மறுத்தல் குறித்த விடயத்தில், உயர் நீதிமன்றத்தால் செயலுறுத்தப்பட்ட விருப்புரிமை, வெளிப்படையான தவறாலோ அல்லது முரணாலோ அல்லது வெளிப்படையான அநீதியாலோ பாதிப்படைகிறபோதுதான், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் வகுமுறைக்கூறு 136-இன் கீழ் உச்ச நீதிமன்றத்தால் தலையிடப்பட்டு பரிசீலிக்கப்பட முடியும் என்று பணிந்துரைக்க, சீமா அர்ஷத் ஜாகிர் மற்றும் பலர் -எதிர்- முனிசிபல் கார்ப்பரேஷன் ஆஃப் கிரேட்டர் மும்பை மற்றும் பலர்: (2006) 5 எஸ்.சி.சி. 282 மற்றும் ஸ்கைலைன் எஜுகேஷன் இன்ஸ்டிடியூட் (இந்தியா) பிரைவேட் லிமிடெட் -எதிர்- எஸ்.எல். வாஸ்வானி மற்றும் ஒருவர்: (2010) 2 எஸ்.சி.சி 142 என்ற வழக்குகளில் இந்த நீதிமன்றத்தின் தீர்முடிவுகள் சார்வுறப்பட்டுள்ளன. 02.09.2022-ஆம் தேதியிடப்பட்ட எதிர்ப்புக்குள்ளான உத்தரவு, அத்தகைய எந்தவித குறைபாட்டாலும் பாதிக்கப்படவில்லை என்பதால் தலையீடு ஏதும் கோரப்படவில்லை.

18.2. விதிகள் 5, 5(vii), 19(i), 19(viii) மற்றும் 43 ஆகியவற்றிலிருந்து தெளிவாகத் தெரிவதைப்போன்று, கட்சியில் பொதுக்குழுதான் மேலான அதிகாரம் படைத்தது என்றும் வாதிடப்பட்டுள்ளது. ஆகவே, பொதுக்குழு, துணைவிதிகளில் குறிப்பிடப்படாத அதிகாரங்கள் உட்பட, துணைவிதிகளைத் திருத்தம் செய்வதற்கும், சேர்ப்பதற்கும் அல்லது நீக்குவதற்கும் தடையற்ற அதிகாரங்களைக் கொண்டுள்ளது; மேலும், இந்த உயரிய அதிகாரத்தன்மையால்தான், கட்சியில் உறுப்பினராக சேருவதற்கான ஒரு நிபந்தனையாக, ஒருவர் பொதுக்குழுவின் முடிவுக்குக் கட்டுப்பட வேண்டும். ஒரு பதவியை உருவாக்கவும், அகற்றவும், மாற்றவும் பொதுக் குழுவுக்கு அதிகாரம் உள்ளது என கே. இராஜேந்திரன் மற்றும் பலர் -எதிர்- தமிழ் நாடு மாநில அரசு மற்றும் பலர்: (1982) 2 எஸ்.சி.சி. 273--இல் இந்நீதிமன்றத்தின் தீர்முடிவு மீது சார்ந்துநின்று பணிந்துரைக்கப்பட்டுள்ளது.

18.3. முக்கியமாக, துணைவிதிகளின் விதி 19(vii)-ஐ பொறுத்தவரை, 01.07.2022 அன்று அனுப்பப்பட்ட அறிவிப்பு உரிய அறிவிப்பு என்ற தகுதியைப் பெறுகிறது என்றும், துணைவிதிகள், கூட்டம் பற்றிய அறிவிப்பு குறித்து கூறுகிறதேயன்றி, உறுப்பினர்களுக்கான அறிவிப்பு குறித்து அல்ல என்றும், கூட்டத்தைக் கூட்டுவதற்கு எழுத்துப்பூர்வ அறிவிப்பு அனுப்புதல் குறித்து துணைவிதிகள் குறிப்பிடவில்லை என்றும், அகராதிபடி ‘அறிவிப்பு‘ என்ற சொல்லுக்கு தகவலளித்தல் என்பதுதான் அதன் பொருளேயன்றி, அது எழுத்துப்பூர்வ அறிவிப்பு என்பதாகவே பொருள்படவில்லை என்றும், வழக்கமான பொதுக்குழு கூட்டத்திற்குதான் 15 நாட்கள் அறிவிப்பு கொடுக்கவேண்டுமேயன்றி சிறப்புக் கூட்டத்திற்கு அல்ல என்றும் வாதிடப்பட்டுள்ளது. மேலும், தமிழ் பதிப்பு துணை விதிகளில், விதி 19(vii)-இன் முதல் பகுதியில் 'மேற்கூறிய' என்ற சொற்றொடர், வழக்கமான கூட்டத்திற்கு 15 நாட்கள் அறிவிப்பு கொடுக்க வேண்டுமேயன்றி, சிறப்பு அல்லது நடத்தக் கோரப்படும் கூட்டத்திற்கு அல்ல என்பதைத் தெளிவுபட குறிப்பிடுவதாகவே உள்ளது என்றும் பணிந்துரைக்கப்பட்டுள்ளது. 23.06.2022 அன்று அவைத் தலைவரால் அறிவிக்கப்பட்டபடி, நிகழ்வு குறித்து கட்சியினருக்கு தெரிவித்திருக்கும்போது, முறையான அறிவிப்பு, நடவடிக்கையைப் பாதிக்காது என்றும் பணிந்துரைக்கப்படுகிறது. இந்த வாதுரைகளுக்கு, நீல்கந்தா சித்திரமப்பா நிங்கஷெட்டி -எதிர்- காசிநாத் சோமண்ணா நிங்கஷெட்டி மற்றும் பலர்: ஏ.ஐ.ஆர். 1962 எஸ்.சி. 666 என்ற வழக்கின் தீர்முடிவின் மீது சார்வுற்று ஆதரவு அளிக்கப்பட்டுள்ளன.

18.4. கட்சியின் செயல்பாடற்ற தன்மைக்கு வழிகோலிய ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரின் மாறுபட்ட மற்றும் முரண்பாடான கருத்துகளின் காரணமாக ஏற்பட்ட செயல் முடக்கம் தொடர்பாக, பி. என். விஸ்வநாதன் மற்றும் ஒருவர் -எதிர்- டிபின்ஸ் பேரிடெஸ், அஸ்பெஸ்டாஸ் அண்டு பெயின்ட்ஸ் லிமிடெட்: (1953) 66 லா வீக்லி 124 என்ற வழக்கின் தீர்முடிவின் மீது எதிர்மேல்முறையீட்டாளர்களுக்கான கற்றறிந்த வழக்குரைஞர் சார்வுற்றார், அதில் கழகம் அதன் கடமைப்பணிகளை நிறைவேற்ற இயலாதபோது, பொதுக்குழு பங்குதாரர்கள் கழகத்தின் கடமைப்பணிகளை நிறைவேற்ற அதிகாரம் கொண்டிருந்தனர் எனத் தீர்மானிக்கப்பட்டது. ஒரு கட்டமைப்பிற்குள் வெற்றிடம் ஏற்பட்டு, அங்கு ஏதேனும் செய்யப்பட்டால், அது அந்த கட்டமைப்பிற்குள் அனுமதிக்கத்தகாது என்பது வரையிலும் அத்தகையதொரு நடவடிக்கை செல்லுபடியாகும் என்று பணிந்துரைக்கப்பட்டுள்ளது. தற்போதைய வழக்கில் அடையப்பெற்ற நிலைப்பாட்டைக் கருத்திற்கொண்டு, (மேற்கண்ட) எஸ். திருநாவுக்கரசு வழக்கின் மேற்படி முடிவு பொருந்தாது, ஏனெனில், அதில், அ.தி.மு.க-லிருந்து நீக்கப்பட்ட உறுப்பினர் ஒருவர், அப்போதைய பொதுச் செயலாளரால் அழைக்கப்பட்ட பொதுக்குழு கூட்டத்திற்கு இணையான ஒரு கூட்டத்தைக் கூட்ட முயன்றார், அப்படியிருக்க, இந்த வழக்கில் பொதுக்குழுவின் இணை கூட்டம் எதுவும் எவராலும் நடத்தப்பட்டிருக்கவில்லை என்றும் பணிந்துரைக்கப்படுகிறது.

18.5. டி.பி. டேவர் -எதிர்- லாட்ஜ் விக்டோரியா எண். 363 எஸ்.சி. பெல்காம் மற்றும் பலர்: (1964) 1 எஸ்.சி.ஆர். 1 என்ற வழக்கில் இந்நீதிமன்றத்தின் தீர்முடிவு மீது சார்வுற்று, கழகத்தின் உள்விவகாரங்கள் அல்லது நிர்வாகம் தொடர்பான விடயங்களில் நீதிமன்றம் சாதாரணமாக மெதுவாகவே தலையிடும்; இக்கோட்பாடுகளுக்கேற்ப உள்ள உயர் நீதிமன்ற நீதியராயத்தின் எதிர்ப்புக்குள்ளான உத்தரவு தலையீட்டைக் கோரவில்லை.

19. எதிர்வாதங்களில், 23.06.2022 வரை, கட்சி உறுப்பினர்களிடையே ஒற்றைத் தலைமை முறைக்கு திரும்புவதற்கான ஒரு முணுமுணுப்பு பேச்சும் இல்லை என்றும், பஞ்சாயத்து தேர்தலின்போதும் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் கூட்டாக கட்சிப் பணிகளை சுமூகமாக நிறைவேற்றினர் என்றும் மேல்முறையீட்டாளர்களுக்கான கற்றறிந்த மூத்த வழக்குரைஞர் பணிந்துரைத்துள்ளார். எனவே, "செயல்பாட்டு முடக்கம்" என்ற வாதம் நேர்மையற்றதும் தவறானதுமாகும்.

19.1. மேலும், 01.12.2021 அன்று துணை விதிகளில் செய்யப்பட்ட திருத்தங்களைத் தொடர்ந்து, பொதுக்குழு, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரை விட பொதுக்குழு உயர்ந்ததல்ல என்பதால், கட்சியின் மொத்த அடிப்படை உறுப்பினர்களை கொண்ட வாக்காளர் தொகுதியால் நேரடியாக வாக்களிப்பதன் மூலம் ஒருங்கிணைப்பாளரும் இணை ஒருங்கிணைப்பாளரும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மேலும், கட்சியின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறை விதிகள் ஏதேனும் மாற்றங்களைச் செய்ய அல்லது தளர்வு செய்ய துணைவிதிகளின் விதி 45 அவர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது. ஆகவே, கட்சியின் உறுப்பினர்கள் அதன் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவதால், கட்சி உறுப்பினரே உயர்ந்தவர் என்ற வாதம், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்குமே பொருந்துகிறது.

19.2. பொதுக்குழுவால் 01.12.2021 அன்று கொண்டுவரப்பட்ட திருத்தங்களுக்கு ஏற்புறுதி அளிக்கப்படாததால், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டன என்று கருதப்படுமானால், 01.12.2021 அன்று செய்யப்பட்ட திருத்தங்களுக்குப் பிறகு நடத்தப்பட்ட பிற அலுவலகப் பொறுப்பாளர்களின் தேர்தல்களும் இரத்து செய்யப்படும் என்றும், எப்படியிருந்தாலும், துணைவிதிகளின் விதி 20(அ)(vii)-இன்படி, அதில் குறிப்பிட்டுள்ளவாறு பொதுக்குழுக் கூட்டத்தைக் கூட்ட மற்ற அலுவலகப் பொறுப்பாளர்களுக்கு அதிகாரம் இல்லை என்றும் மேல்முறையீட்டாளர்களுக்கான கற்றறிந்த வழக்குரைஞர் பணிந்துரைத்துள்ளார்.

20. நாங்கள் எதிரெதிர் வாதங்களை ஆழ்ந்து பரிசீலித்ததோடு, பொருந்தத்தக்க சட்டத்தின் அடிப்படையில் வழக்கு ஆவணத்தையும் ஆய்வு செய்துள்ளோம்.

20.1. மேற்கொண்டு செல்லும் முன், இம்மேல்முறையீடுகளின் பரவலான வரம்புகள் குறித்து சில கருத்துகள் அவசியமெனத் தோன்றுகின்றன. கற்றறிந்த தனியமர் நீதியரசர் அவர்களால் பிறப்பிக்கப்பட்ட 17.08.2022-ஆம் தேதியிடப்பட்ட உத்தரவுக்கு வழிகோலிய உரிமையியல் வழக்குகளின் விடயப்பொருளையும், உயர் நீதிமன்ற நீதியராயத்தால் பிறப்பிக்கப்பட்ட 02.09.2022-ஆம் தேதியிடப்பட்ட உத்தரவையும், ஒட்டுமொத்த சூழ்நிலைகளையும் கருத்திற்கொண்டு, 11.07.2022 அன்று நடைபெற்ற கேள்விக்குள்ளான கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் உள்ளடக்கம் குறித்து எந்தக் கட்சியினராலும் வைக்கப்படும் வாதங்களைப் பொறுத்தவரையில், அதுகுறித்து வழக்குகள் தாக்கல் செய்தோ அல்லது வாதுரைகளில் ஏதும் திருத்தங்கள் செய்தோ எதிர்க்கப்படவில்லை, மேலும் 11.07.2022 அன்று நடைபெற்ற மேற்படி கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படும் முடிவுகளின் சாரம், பொருளடக்கம் மற்றும் நற்கூறுகள் தொடர்பான அம்சம் எதனையும் ஏற்றுக்கொண்டு கருத்துரைக்கப்படுமானால், அது நடைமுறையில் உரிமையியல் வழக்குகளின் வழக்குப்பொருளின் வரம்புக்கு மேலாகவுங்கூட கடந்து செல்லும். அதாவது, 02.09.2022-ஆம் தேதியிடப்பட்ட உத்தரவுக்கு எதிரான இந்த மேல்முறையீடுகளில் தீர்மானிக்கப்பட வேண்டிய உண்மையான கேள்வி என்பது 11.07.2022-ஆம் தேதியிடப்பட்ட கூட்டத்தை நடத்துவதற்கு எதிரான தற்காலிக உறுத்துக்கட்டளைக்கான வேண்டுரையைப் பொறுத்தே இருக்கும். இந்தக் கட்டமைப்பான வரையறைக்குள், 02.09.2022-ஆம் தேதியிடப்பட்ட எதிர்ப்புக்குள்ளான உத்தரவு ஏதும் தலையீட்டைக் கோருகிறதா? என்பது குறித்த கேள்வியைத் தீர்மானிப்பதற்கு நாம் எதிரெதிரான வாதங்களை ஆராயலாம்.

21. தொடர்புடைமை வாதங்கள் குறித்து விவாதிக்கையில், அடுத்துவரவிருக்கும் விவாதத்தின் அளவுகோலினையும், வரம்புகளையும் வரையறுக்கும் பொருட்டு, இம்மேல்முறையீடுகளில் மேற்கோள் காட்டப்பட்ட ஒருசில பயனுள்ள தீர்முடிவுகளை நாம் குறித்துக் கொள்ளலாம்.

21.1. (மேற்கண்ட) எஸ். திருநாவுக்கரசு என்ற வழக்கில் உயர் நீதிமன்ற நீதியராயம் அ.இ.அ.தி.மு.க. கட்சியின் துணை விதிகளின் வகையத்தை விரிவாக விளக்கி, கோரிக்கை விடுத்தவர்கள் பொதுக்குழுக் கூட்டத்தைக் கூட்டுவதைக் குறித்து துணை விதிகளின் வகையம் குறிப்பிடவில்லை என்றும், பொதுச் செயலாளர் (தற்போது ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரால் மாற்றீடு செய்யப்பட்டது) கூட்டத்தைக் கூட்டவில்லையெனில், அதற்கு ஒரே வழி நீதிமன்றத்தின் தலையீட்டைக் கோருவதேயாகும், அதைத் தவிர, அவ்வாறு செய்வதற்கு அதிகாரமற்ற நபர்களால் கூட்டம் கூட்டப்பட முடியாது என்றும் தீர்மானித்தது என்று பணிந்துரைக்கும் பொருட்டு, மேல்முறையீட்டாளர்களுக்கான கற்றறிந்த வழக்குரைஞரால் அவ்வழக்கு குறிப்பீடு செய்யப்பட்டுள்ளது. மேற்படி தீர்முடிவின் தொடர்புடைய பத்திகள் கீழ்வருமாறு:- "69. கட்சியின் விதி 20(v)-இன்படி, கட்சியின் பொதுச் செயலாளர் பொதுக்குழுக் கூட்டத்தைக் கூட்ட தகுதி பெற்றவராவார். விதி 19(viii), கட்சியின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தை கூட்ட வேறு எவருக்கும் அதிகாரம் அளிக்கவில்லை. கோரிக்கை கடிதம் அனுப்பப்படவில்லை என்று கற்றறிந்த தனியமர் நீதியரசர் சங்கதிகளின்பேரில் தீர்மானித்துள்ளதோடு, வாதி, விதி 19(viii)-இன்படி, பொதுக்குழுக் கூட்டத்தை கூட்டியிருந்தார் என்று மற்றபடியாகவும் தீர்மானித்துள்ளார். கோரிக்கை கடிதம் வாதிக்கு வழங்கப்படவில்லை என்று கற்றறிந்த தனியமர் நீதியரசரால் பதிவு செய்யப்பட்ட காண்முடிவிலிருந்து மாறுபடுவதற்கு எங்களுக்கு நற்காரணம் ஏதுமில்லை. கோரிக்கைக் கடிதம், வாதிக்கு வழங்கப்படவில்லை என்ற கருத்தை நாங்கள் எடுத்தால், பொதுக்குழுக் கூட்டத்தைக் கூட்ட பிரதிவாதிக்கு அதிகாரம் ஏதுமில்லை என்பதாகும். வாதி, பொதுச் செயலாளர் என்ற முறையில் கூட்டத்தைக் கூட்டவில்லையெனில், பொதுக்குழுக் கூட்டத்தைக் கூட்டக் கோரும் உறுப்பினர்களால் அக்கூட்டத்தைக் கூட்டுவதற்கான வகையம் எதுவும் விதி 19(viii)-இல் வனையப்பட்டிருக்கவில்லை.

70. இது தொடர்பாக, பிரதிவாதிக்கான கற்றறிந்த மூத்த வழக்குரைஞரும், தரப்பினராகச் சேர்க்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான கற்றறிந்த வழக்குரைஞரும், கருப்பசாமி பாண்டியன் மற்றும் 6 நபர்கள் -எதிர்- அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் இரண்டு நபர்கள் (உ.வ. எண் 28/1988-இல் 20.1.1988 அன்று தீர்வு செய்யப்பட்ட விண்ணப்ப எண் 119/1988) என்ற வழக்கில் இந்த நீதிமன்றத்தின் கற்றறிந்த தனியமர் நீதியரசரின் உத்தரவின் மீது சார்வுற்றனர். எங்களது கருத்துப்படி, அது, விதி 19(viii)-இன் கீழ் பொதுச் செயலாளர் கூட்டத்தைக் கூட்டத் தவறினால், கோரிக்கை விடுக்கும் உறுப்பினர்கள் கூட்டத்தைக் கூட்டலாம் என்ற அறுதியுரைக்கான தீர்வறிக்கை அல்ல என்பதாகும். மேற்படி உத்தரவில், நீதிமன்றம், ஒரு ஆணையரை நியமித்ததால், கூட்டத்தைக் கூட்ட மறுத்துவிட்டது. ஆனால், பொதுச் செயலாளர் ஒரு கூட்டத்தைக் கூட்ட மறுத்தால், கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் எவரும் தங்கள் பெரும்பான்மையை நிரூபித்த பிறகு ஒரு கூட்டத்தைக் கூட்டி எந்த முடிவையும் எடுப்பதற்கு எப்போதும் வாய்ப்புள்ளது என்று கருத்துரைக்கப்பட்டது. எங்களது கருத்துப்படி, இந்த உத்தரவு, ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைகளில் அவ்வழக்கின் சங்கதிகளை உள்ளடக்குகிறது. விதி 19(viii)-இன்படி, பொதுச் செயலாளர் ஒரு கூட்டத்தைக் கூட்டத் தவறினால், கோரிக்கை விடுக்கும் உறுப்பினர்கள் கூட்டத்தைக் கூட்டலாம் என்பதை நாங்கள் மாற்றாகவுங்கூட ஒப்புக்கொள்ளவில்லை.

71. விதி 20(v)-ல் கட்சியின் பொதுச் செயலாளாருக்கு, செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தைக் கூட்டுவதற்கான அதிகாரங்களும் பொறுப்புகளும் இருத்தல் வேண்டும் என்று விதி 20(v)-இல் குறிப்பிடப்பட்டுள்ளது. விதி 19(viii), பொதுக் குழுவின் சிறப்புக் கூட்டத்தை கூட்டுவதற்கான கோரிக்கையைப் பெற்ற 30 நாட்களுக்குள் அக்கோரிக்கையின்பேரில், அக்கூட்டத்தைக் கூட்டுவதற்கு பொதுச் செயலாளாரை நிர்ப்பந்திக்கிறது. பொதுக்குழுத் தலைவர் இல்லாதநிலையில், அக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களில் ஒருவர் கூட்டத்திற்கு தலைமை வகிக்க வேண்டும் என விதி 19(viii)-இல் பொதுக்குழு கூட்டத்திற்கு தலைமை வகிப்பதற்கு எனக் குறிப்பிடதொரு வகையம் வகைசெய்யப்பட்டுள்ளது. தலைவர் இல்லாத நிலையில், உறுப்பினர்களில் ஒருவர், மைய செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்திற்கு தலைமை வகித்து, நடத்துவார் என விதி 23(ii) கூறுகிறது. தலைவர் இல்லாத நிலையில் கூட்டங்களுக்கு தலைமை வகிப்பதற்கான வகையங்கள் கட்சி விதிகளிலேயே வனையப்பட்டிருக்கிற போது, ஒரு கூட்டத்தை கூட்டுவது தொடர்பாக விதி 19(viii)-இல் இதேபோன்றதொரு வகையம் வனையப்பட்டிருக்கலாம்.

72. விதியின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில், விதி 19(viii)-ஐ இணக்கமானமுறையில் பொருள்கொள்ளலாம் என்பதும், பொதுச் செயலாளர் கூட்டத்தைக் கூட்டவில்லை என்றால், கோரிக்கை விடுக்கும் உறுப்பினர்களை ஆதரவின்றி விட்டுவிட முடியாது, மேலும் வழக்கமான முறையில், கோரிக்கை விடுத்ததும், அவர்கள் ஒரு கூட்டத்தைக் கூட்டுவதற்குரியவர்களாவர், மேலும், குறிப்பிட்ட காலத்தில் பொதுச் செயலாளரால் கூட்டம் கூட்டப்படாவிட்டால், அவர்களே அத்தகைய ஒரு கூட்டத்தைக் கூட்டிக்கொள்ளலாம் என்பதும் பிரதிவாதிக்கான கற்றறிந்த மூத்த வழக்குரைஞரின் வாதமாகும். பல ஆண்டுகளுக்குப் பிறகு கூட்டத்திற்கான தேதியை நிர்ணயித்து, கோரிக்கையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் கூட்டத்தைக் கூட்டுவாரேயானாலுங்கூட, அது ஒரு நெறியற்ற சூழ்நிலையை உருவாக்கும். இது தொடர்பாக, ஒரு கூட்டத்தைக் கூட்டுவது என்பது கூட்டத்தை நடத்துவதாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் எனக் கற்றறிந்த வழக்குரைஞர் பணிந்துரைத்தார். ஏற்கெனவே கண்டபடி, பொதுக்குழுக் கூட்டம் குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது கூட்டப்பட வேண்டும். பொதுச் செயலாளர், கூட்டத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் கூட்டி, சில ஆண்டுகளுக்குப் பிறகு கூட்டத்தை நடத்தத் திட்டமிட்டிருந்தால், அத்தகையதொரு நிலைமையில், அது எப்போதுமே நியாயமற்றது என்றும், அது விதியின் நோக்கத்தையே முறியடிக்கிறது அல்லது இருக்கின்ற வேறு காரணங்கள் எவற்றையாவது கூறி அது எதிர்த்துரைக்கப்படலாம். இது தொடர்பாக ஒரு குறிப்பிட்ட வகையத்தை வனைவதற்காக, கட்சியின் உறுப்பினர்கள் விரும்பினால், அதற்கேற்ப விதியை தாராளமாக நன்கு திருத்தம் செய்து கொள்ளலாம்.

73. பொதுக்குழுக் கூட்டம் நடத்தும் தேதிக்கு 15 நாட்களுக்கு முன்னதாக அறிவிப்பு கொடுத்து, ஆறு மாதங்களுக்கொரு முறை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று விதி 19(vii) கூறுகிறது.ஆனால் அதே விதிகளின் விதி 19(viii)-இல், கோரிக்கை விடுக்கப்பட்டால், பொதுச் செயலாளர் அத்தகைய கோரிக்கையைப் பெற்றுக்கொண்ட தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. விதிகள் வனையப்பட்டபோது, ஒரு கூட்டத்தைக் கூட்டுவதற்கும், ஒரு கூட்டத்தை நடத்துவதற்கும் உள்ள தெளிவான வேறுபாடும், தனிச்சிறப்பும் கவனத்தில் கொள்ளப்பட்டது. மேல்முறையீட்டின் கீழான உத்தரவின் 38 முதல் 41 வரையிலான பத்திகளில் கற்றறிந்த தனியமர் நீதியரசர், பல்வேறு தீர்முடிவுகளைக் குறிப்பிட்டு, ஒரு கூட்டத்தைக் கூட்டுதல் என்பது கூட்டத்திற்கு அழைப்பு விடுப்பதாகும் என்று கருத்துரைத்துள்ளார். அதை நாங்களும் ஒப்புக்கொள்கிறோம். ஏற்கெனவே கண்டவாறு, மற்றபடியாகவும் வாதி தாமே கூட்டத்தைக் கூட்டியிருந்தார். பிரதிவாதி 19.5.1997-ஆம் தேதியன்று கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என்ற முகாந்திரத்தில், அவருக்கு பொதுக்குழுக் கூட்டத்தைக் கூட்டுவதற்கு எந்த உரிமையும் இல்லை.

74. வாதியின் கூற்றுப்படி, அத்தகையதொரு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் தேவையில்லை என்றாலும், அத்தகையதொரு கூட்டம் கோரிக்கையின்பேரில் கூட்டப்படவில்லை என்றபோதிலும், வாதியால் கூட்டப்பட்ட கூட்டத்தில் பங்கேற்று, தங்கள் குறைகளைத் தெரிவிக்க கோரிக்கை விடுக்கும் உறுப்பினர்களை எதுவும் தடை செய்யவில்லை. பொதுக்குழுக் கூட்டத்தைக் கூட்ட வாதியால் கோரிக்கையே பெறப்படாதபோதும், பிரதிவாதி 19.05.1997 அன்றே கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, அவருக்கு கூட்டத்தைக் கூட்ட எந்த உரிமையும் இல்லாதபோதும், பொதுச் செயலாளர் மட்டுமே கூட்டத்தைக் கூட்டுவதற்கு உரியவர் என்கிறபோதும் அச்சூழ்நிலைகளின் முகாந்திரத்தில், 3.6.1997 அன்று நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தைக் கூட்டிய பிரதிவாதியின் செயல் அங்கீகரிக்கப்படாததும், கட்சியின் விதிகளுக்கு புறம்பானதுமாகும் என்ற கற்றறிந்த தனியமர் நீதியரசரின் காண்முடிவுடன் ஒத்துப்போக எங்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை."

21.2. (மேற்படி) வாண்டர் லிமிடெட் வழக்கில், மேல்முறையீட்டாளர்களுக்கான கற்றறிந்த வழக்குரைஞரால் வலுவாகச் சார்வுறப்பட்ட ஒரு தீர்முடிவில், வழக்கமாக, விருப்புரிமை தன்னிச்சையாகவும், ஏறுமாறாகவும் அல்லது முரணாகவும் அல்லது அறுதியிடப்பட்ட சட்டக் கோட்பாடுகளுக்கு எதிராகவும் செயலுறுத்தப்பட்டுள்ளதாகக் காட்டப்படும் நேர்வுகளைத் தவிர, மேல்முறையீட்டு நீதிமன்றம், முதல்நிலை நீதிமன்றத்தால் செயலுறுத்தப்படும் விருப்புரிமையில் தலையிடாமல், அதற்கே உரிய விருப்புரிமையைப் பதிலமைக்கிறது என்ற கோட்பாட்டை இந்நீதிமன்றம் விளக்கியது. இந்த நீதிமன்றம் கீழ்க்கண்டவாறு கருத்துரைத்து, தீர்மானித்துள்ளதாவது:- "9. வழக்கமாக, இருக்கின்ற சட்ட உரிமை வாதியால் வலியுறுத்தப்பட்டு, அது பறிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறபோதான நிலையில், அவையிரண்டும் எதிர்க்கப்பட்டு, அவை விசாரணையில் சான்றின் அடிப்படையில் நிறுவப்படும் வரையில் ஒரு வழக்கிடை உறுத்துக்கட்டளை வழங்குவதற்கான வேண்டுரை நிலையற்றதாகவே இருக்கும். இந்தக் கட்டத்தில் நீதிமன்றம், தற்காலிகமானதும் விருப்புரிமை சார்ந்ததுமான வழக்கிடை பரிகாரத்தின் இந்த வகையான சில நன்கு அறுதியிடப்பட்ட நிர்வாகக் கோட்பாடுகளின் அடிப்படையில் செயல்படுகிறது. வழக்கிடை உறுத்துக்கட்டளையின் நோக்கம் கூறுவதாவது, ".......வாதியின் உரிமைகளைப் பறிப்பதனால் ஏற்படும் தீங்கிலிருந்து அவரைப் பாதுகாப்பதற்காக, விசாரணையின்போது அவரது சார்பாக நிச்சயமற்ற தீர்வு காணப்படுமானால், அந்த நடவடிக்கையில் வசூலிக்கத்தக்க இழப்பீடுகளைக் கொண்டு அவருக்கு போதுமான அளவில் ஈடுசெய்துவிட முடியாது. பிரதிவாதி, அவருக்குரிய சட்ட உரிமைகளைப் பயன்படுத்துதைத் தடுப்பதிலிருந்து ஏற்படக்கூடிய பாதிப்புக்காக அவருக்கு போதுமான அளவில் இழப்பீடு அளிக்கப்பட முடியாததன்பேரில், அவருக்குரிய தேவை பாதுகாக்கப்படவேண்டும் என்பதை முன்னிட்டு அத்தகைய பாதுகாப்புக்கான தேவை மதிப்பிடப்பட வேண்டும். "நீதிமன்றம், ஒருவரின் தேவையை மற்றொருவரின் தேவையுடன் மதிப்பிட்டு, ‘வாய்ப்புநலத்தைச் சீர்தூக்கிப் பார்த்து" தீர்மானிக்க வேண்டும்." வழக்கிடை பரிகாரம் அதுகாறும் உள்ள நிலையைப் பாதுகாக்கும் நோக்கம் கொண்டதாகும், தரப்பினரின் உரிமைகள் வழக்கு முகாந்திரத்தின் அடிப்படையில் தோன்றலாம். மேலும், பிரதிவாதி தனது செயலை இனிமேல்தான் தொடங்க வேண்டுமா? அல்லது அவர் ஏற்கெனவே அதைச் செய்ய தொடங்கிவிட்டாரா? என்பதை உரிய பரிசீலனையாகக் கொண்டு, பிரதிவாதி ஒருவர் தனது சட்ட உரிமையாக எதைக் கருதுகிறாரோ, அதைப் பயன்படுத்துவதிலிருந்து தடை செய்வதிலும், வாதி எதைத் தடுக்கவேண்டும் என விரும்புகிறாரோ அதையும், நீதிமன்றம் மதிப்பிடுகிறது, பிந்தியவற்றுக்குரிய பரிசீலனைகள், பிரதிவாதி தனது செயலை இனிமேல்தான் தொடங்க வேண்டுமா? என்னும் சூழ்நிலையில் பயன்படுத்துவதிலிருந்து ஏதோவொரு வகையில் வேறுபடுகின்றன என்பதைக் காட்டுகின்றன. ***** ***** ***** 14..... அத்தகைய மேல்முறையீடுகளில், மேல்முறையீட்டு நீதிமன்றம், முதலேற்பு நீதிமன்றத்தின் விருப்புரிமை செலுத்துதலில் தலையிடாது, மேலும் தன்னிச்சையாகவோ அல்லது ஏறுமாறாகவோ அல்லது முரணாகவோ விருப்புரிமை செலுத்தப்பட்டுள்ளதாகக் காண்பிக்கப்படுகிறவிடத்து அல்லது நீதிமன்றம், வழக்கிடை உறுத்துக்கட்டளைகள் வழங்குதல் அல்லது மறுத்தலை முறைப்படுத்துகின்ற அறுதியிடப்பட்ட சட்டக் கோட்பாடுகளைப் புறக்கணித்திருக்கிறவிடத்து, அதற்குரிய விருப்புரிமையைப் பதிலீடு செய்யும். விருப்புரிமை அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு எதிரான மேல்முறையீடு, கொள்கை அளவிலான ஒரு மேல்முறையீடாகக் கூறப்படுகிறது. கீழமை நீதிமன்றத்தால் சான்றாதாரத்தின் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவு நியாயமானதாக இருக்கக்கூடுமெனில், மேல்முறையீட்டு நீதிமன்றம் சான்றாதாரத்தை மறுமதிப்பீடு செய்து, அந்த நீதிமன்றத்தால் எடுக்கப்பட்ட முடிவிலிருந்து வேறுபடும் முடிவு ஒன்றை எடுக்காது. மேல்முறையீட்டு நீதிமன்றம், விசாரணை கட்டத்தில் வழக்கைப் பரிசீலித்திருந்தால் மாறான முடிவுக்கு வந்திருக்கக்கூடும் என்ற அடிப்படையிலேயே மேல்முறையீட்டின் கீழ் விருப்புரிமை செலுத்துவதில் தலையிடுவது பொதுவாகவே நியாயப்படுத்தப் படுவதில்லை. விசாரணை நீதிமன்றத்தால் நியாயமான மற்றும் நேர்மையான முறையில் விருப்புரிமை பயன்படுத்தப்பட்டிருந்தால், மேல்முறையீட்டு நீதிமன்றம் மாறுபட்ட கருத்தை எடுத்திருக்கக்கூடும் என்ற சங்கதி, விசாரணை நீதிமன்றத்தின் விருப்புரிமை பயன்படுத்துதலுடன் தலையிடுவதை நியாயப்படுத்துதலாகாது. இந்தக் கோட்பாடுகளைக் குறிப்பிட்டுக் காட்டிய பிறகு, பிரிண்டர்ஸ் (மைசூர்) பிரைவேட் லிமிடெட் -எதிர்- போத்தன் ஜோசப் (1960) 3 எஸ்.சி.ஆர். 713: (எஸ்.சி.ஆர். 721) என்ற வழக்கில் நீதியரசர் திரு. கஜேந்திரகட்கர் தீர்மானித்துள்ளதாவது: "..... இக்கோட்பாடுகள் நன்கு நிறுவப்பட்டுள்ளன, ஆனால் சார்லஸ் ஓசென்டன் & கோ. -எதிர்- ஜானாட்டன்: 1942 ஏ.சி.130 என்ற வழக்கில் விஸ்கவுன்ட் சைமன் அவர்களால் கருத்துரைக்கப்பட்டுள்ளவாறு, ‘......கீழமை நீதிமன்ற நீதிபதியால் தனது விருப்புரிமையைப் பயன்படுத்தி பிறப்பிக்கப்படும் ஓர் உத்தரவு மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் நேர்மாறாக்குவது குறித்த சட்டம் நன்கு நிறுவப்பட்டுள்ளது, மேலும் ஏதும் சிரமம் எழுகிறதென்றால் அது ஒரு தனிப்பட்ட வழக்கில் நன்கு நிறுவப்பட்ட கோட்பாடுகளைப் பயன்படுத்துவதன் காரணமாகவே இருக்கும்‘." மேல்முறையீட்டு தீர்ப்புரை, இக்கோட்பாட்டைப் புறந்தள்ளியதாகத் தெரியவில்லை."

21.3. (மேற்கண்ட) கர்நாடக மாநில அரசு என்ற வழக்கு முக்கியமாக மாநிலங்களுக்கு இடையேயான நீர்ப் பிரச்சினைகளை உள்ளடக்கிய ஒரு வழக்காகும், அதன் குறிப்பிட்ட பத்தியில், உறுத்துக்கட்டளை வழங்கும் விடயத்தில் வாய்ப்புநலத்தை அல்லது வாய்ப்புக்குறைவைச் சீர்தூக்கிப் பார்ப்பது மற்றொரு தேவைப்பாடாக இருக்கிறபோது, நிர்ணயிக்கப்பட்ட விதிகளோ அல்லது கருத்துகளோ இருக்காது; மேலும் பரிகாரம் என்பது சூழலின் நியதியை ஒரு வழிகாட்டு காரணியாகக் கொண்டு ஒவ்வொரு வழக்கின் சங்கதிகள் மற்றும் சூழ்நிலைகளின் மீது சார்ந்திருக்கும் எனப் பின்வருமாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது:- "168........ எனினும், பொதுவாக, உறுத்துக் கட்டளை மறுக்கப்பட்டால், தரப்பினரின் வழக்கின் வலிமையைக் கருத்திற்கொண்டு, வாதி ஈடு செய்ய முடியாத இழப்பு அல்லது தீங்குக்கு உள்ளாவார் என்ற கண்ணோட்டத்தில் உறுத்துக்கட்டளை வழங்குதல் குறித்த பிரச்சினையைப் பார்க்க வேண்டும். வாய்ப்புநலத்தை அல்லது வாய்ப்புக்குறைவைச் சீர்தூக்கிப் பார்ப்பது மற்றொரு தேவைப்பாடாக இருக்கிறபோது, நிர்ணயிக்கப்பட்ட விதிகளோ அல்லது கருத்துகளோ இருக்காது; மேலும் பரிகாரம் என்பது ஒவ்வொரு வழக்கின் சங்கதிகள் மற்றும் சூழ்நிலைகளின் மீது சார்ந்துநின்று எப்போதும் நெகிழ்வுத்தன்மையுடையதாகவே இருந்து வருகிறது. சூழலின் நியதி ஒரு வழிகாட்டு காரணியாக இருக்கவேண்டும்........"

21.4. (மேற்கண்ட) சூர்ய நாத் சிங் வழக்கில், இந்த நீதிமன்றம், உறுத்துக்கட்டளை வழங்குதல் விருப்புரிமை குறித்த விடயமாக இருந்தாலும், அது நீதியின் குறிக்கோளை முன்னெடுக்கும் அறுதியிடப்பட்ட சட்டக் கோட்பாடுகளின் அடிப்படையில் இருக்க வேண்டும்; அது மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் திருத்தப்படுவதற்கு உட்பட்டதாகும் என்று தீர்மானித்தது. நீதிமன்றம் கூறியுள்ளதாவது:- "2.......... உறுத்துக்கட்டளை வழங்குதல் விருப்புரிமையானது என்றாலும், அது நீதியின் குறிக்கோளை முன்னெடுக்கும் அறுதியிடப்பட்ட சட்டக் கோட்பாடுகளின் அடிப்படையில் பயன்படுத்தப்பட வேண்டும். அது மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் திருத்தப்படுவதற்கு உட்பட்டதாகும்......."

21.5. (மேற்கண்ட) டன்லப் இந்தியா லிமிடெட் என்ற வழக்கில், பொது வருவாய் குறித்த விடயங்கள் தொடர்பாக விளக்கப்பட்டுள்ளபோதிலும், வாய்ப்புநலத்தைச் சீர்தூக்கிப் பார்த்தல் மற்றும் ஈடு செய்ய இயலாத ஊறு தொடர்பான பிரச்சினைகளை உரியமுறையில் பரிசீலிப்பதற்கான தேவைகளை இந்த நீதிமன்றம் பின்வருமாறு விளக்கியது:- "5. இடைக்கால உத்தரவு வழங்கும் வழக்கத்தை நிறுத்துவது குறித்து நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம், இது வாய்ப்புநலத்தைச் சீர்தூக்கிப் பார்ப்பது, பொது நலன் மற்றும் பிற உரிய பெருந்திரளான பரிசீலனைகள் ஆகியவை குறித்து அக்கறை கொள்ளாமல் வழக்கு முகாந்திரம் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது என்னும் காரணத்தைத் தவிர, வேறு காரணமின்றி மனுவில் கோரப்படும் முக்கிய பரிகாரத்தை நடைமுறையில் வழங்கிவிடுகிறது......... நீதியின் நலன் கருதி, இடைக்கால உத்தரவுகள் பிறப்பிக்கப்பட வேண்டும் எனக் கோரும் வழக்குகளும் நிச்சயமாக உள்ளன. கடுமையான சட்ட மீறல்களும், அநீதிகளும் எங்கெல்லாம் நடக்கின்றனவோ அல்லது நடக்கவிருக்கிறதோ, அங்கெல்லாம் குறுக்கிட்டு, உரிய இடைக்கால பரிகாரம் வழங்குவது நீதிமன்றத்தின் சட்டக் கடமையாகும். இடைக்கால பரிகார மறுப்பு, பொதுமக்களுக்கு தீங்கு விளைவிப்பதாகவோ, ஈடு செய்ய முடியாத வகையில் தனிப்பட்ட கடுமையான ஊறு ஏற்படுத்துவதாகவோ அல்லது பொது நிர்வாகத்தின் பாரபட்சமற்ற தன்மையில் குடிமக்களின் நம்பிக்கையைக் குலைப்பதாகவோ இருந்தால், பொது அதிகாரத்திற்கு எதிராக நீதிமன்றம் இடைக்கால பரிகாரம் வழங்குவதை நன்கு நியாயப்படுத்தலாம். ஆனால், பொது அதிகார அமைப்புகள் முறையாக செயல்பட்டு, பொது நலனுக்கு உரிய மாண்புடன் உண்மையாக இருப்பதாக சட்டம் கருதுமானால், தரப்பினர்கள், பாதிப்படைந்ததாக, தொல்லை ஏற்பட்டதாக அல்லது தீங்கு விளைந்ததாகக் கூறி நீதிமன்றத்திற்கு வந்துள்ளனர் என்பதும், வழக்கு முகாந்திரம் காட்டப்பட்டுள்ளது என்பதுமான காரணத்தைத் தவிர, வேறு காரணம் ஏதுமின்றி பரந்து விரிந்த செயல்விளைவு கொண்ட இடைக்கால உத்தரவுகளை அல்லது நிர்வாகச் சுமையான தொல்லைத் தரும் உத்தரவுகளை அல்லது பொது வருவாயை வசூலிப்பதைத் தடுக்கின்ற உத்தரவுகளைப் பிறப்பிப்பதில் நீதிமன்றம் மிகுந்த விழிப்புடன் இருக்கவேண்டும். கடுமையான மற்றும் கண்டிப்பான விதிகள் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். ஆனால், விவேகம், விருப்புரிமை மற்றும் விழிப்புணர்வு ஆகியவை தேவைப்படுகின்றன. வழக்கு முகாந்திர இருப்பைத் தவிர வேறு பல முக்கிய பரிசீலனைகளும் உள்ளன. வாய்ப்புநலத்தைச் சீர்தூக்கிப் பார்ப்பது குறித்த பிரச்சினையும் உள்ளது. ஈடு செய்ய முடியாத ஊறு என்ற பிரச்சினையும் உள்ளது. பொது நலன் குறித்த கேள்வியும் உள்ளது. பரிசீலனைக்குரிய அத்தகைய பல காரணிகள் உள்ளன...."

21.6. (மேற்கண்ட) தல்பத் குமார் வழக்கில், இந்த நீதிமன்றம் உறுத்துக்கட்டளை வழங்குவதில் அல்லது மறுப்பதில் நீதிய விருப்புரிமையைப் பயன்படுத்துவதற்கான கோட்பாடுகளை பின்வருமாறு விளக்கியது:- "4. உரிமை வழக்கில் பிரச்சினைக்குரிய சொத்து எதுவும் தொடர்பாக, பிரதிவாதி, வாதியின் உரிமையைப் பறிப்பதாகவோ அல்லது வாதிக்கு வேறுவகையில் தீங்கிழைப்பதாகவோ பிரதிவாதி அச்சுறுத்துகிறார் என உரிமை வழக்கு எதிலும் பிரமாணப் பத்திரத்தின் வாயிலாகவோ அல்லது பிறவாறோ மெய்ப்பிக்கப்படுகிறவிடத்து, உரிமை வழக்கில் பிரச்சினைக்குரிய சொத்து எதுவும் தொடர்பாக, வாதியின் உரிமையைப் பறித்தல் அல்லது வாதிக்கு வேறுவகையில் தீங்கிழைத்தல் அல்லது.... அத்தகைய செயலைத் தடுப்பதற்கு தற்காலிக உறுத்துக்கட்டளை ஒன்றை உத்தரவிடலாம் அல்லது அதனை நிறுத்திவைக்கும் மற்றும் தடுக்கும் நோக்கத்திற்காக உரிமை வழக்கைத் தீர்வு செய்யும் வரையில் அல்லது மேற்கொண்டு உத்தரவுகள் இடப்படும் வரையில் தக்கதெனக் கருதுகின்ற அத்தகைய வேறு உத்தரவைப் பிறப்பிக்கலாம்........ உறுத்துக்கட்டளை என்பது ஒரு தரப்பினர் ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்வதற்கும் அல்லது செய்வதைத் தடுப்பதற்குமான ஒரு நீதிய செயல்முறையாகும். எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய ஊறினைத் தடுப்பதற்காக வழக்காளிக்கு தடுப்பு பரிகாரம் வழங்குவதே இதன் இயல்பு. அதாவது, நீதிமன்றம், இடைக்கால உறுத்துக் கட்டளை வழங்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி, அவ்வப்போது உள்ள நிலையில் உரிமை வழக்கு விடயத்தை தொடர்ந்து வைத்திருப்பதாகும். உறுத்துக்கட்டளை வழங்குதல், ஒரு விருப்புரிமை பரிகாரம் என்பது அறுதியிடப்பட்ட சட்டமாகும். அதனைப் பயன்படுத்துவது என்பது (1) உரிமை வழக்கில் கடுமையாக எதிர்க்கப்படவேண்டிய பிரச்சினை விசாரிக்கப்படுவதற்கும், நீதிமன்றத்தின் முன்பாக உள்ள சங்கதிகளின் அடிப்படையிலான ஒரு செயல், வாதியால்/பிரதிவாதியால் கோரப்படும் பரிகாரத்திற்குரியதாக இருக்கின்ற சாத்தியக்கூறு இருப்பதற்கும் (2) தீங்கின் வகைகளிலிருந்து தரப்பினரைப் பாதுகாக்க நீதிமன்றத்தின் தலையீடு அவசியமானது என்று நீதிமன்றம் திருப்தியடைவதற்கும் உட்பட்டதாகும். அதாவது, வழக்கு விசாரணையின்போது சட்டப்படியான உரிமை நிலைநாட்டப்படுவதற்கு முன்பு ஈடு செய்ய முடியாத ஊறு அல்லது சேதம் ஏற்படக்கூடும், மற்றும் (3) உறுத்துக்கட்டளையை நிறுத்தி வைப்பதால் ஏற்படக்கூடிய அதிகப்படியான சிரமம் அல்லது தீங்கு அல்லது அசௌகரியம், அதை வழங்குவதால் ஏற்படக்கூடியவற்றை விட அதிகமாக இருக்கும்.

5. ஆகவே, வாதி, தனக்கு சாதகமாக "வழக்கு முகாந்திரம் உள்ளது" என சாட்சியம் அளிப்பதன் மூலமாகவோ அல்லது பிரமாண பத்திரத்தின்படியாகவோ அல்லது வேறுவகையாகவோ மெய்ப்பிக்கும் பொறுப்பு உள்ளதால், அது விசாரணையில் தீர்ப்பளிக்கப்பட வேண்டியதாகிறது. முதல் நோக்கு உரிமை இருத்தல், அவரது சொத்து அல்லது உரிமை அனுபவத்தை மீறுதல் ஆகியவை தற்காலிக உறுத்துக்கட்டளை வழங்குவதற்கான ஒரு நிபந்தனையாகும். முகாந்திர வழக்கு என்பதை, முதல் நோக்கு உரிமைமூலத்துடன் குழப்பிக் கொள்ளக்கூடாது, அது விசாரணையில் சாட்சியத்தின் அடிப்படையில் நிரூபிக்கப்பட வேண்டும். வழக்கு முகாந்திரம் என்பது உண்மையில் எழுப்பப்பட வேண்டிய முக்கியமான பிரச்சினையாகும், அதனை விசாரித்து நற்கூறுகளின்பேரில் முடிவு காண்பது அவசியமாகும். வழக்கு முகாந்திரம் உள்ளது என்னும் மனநிறைவே உறுத்துக்கட்டளை வழங்குவதற்கு போதுமானதல்ல. மேலும், நீதிமன்றத்தின் தலையீடு இல்லாவிட்டால், தீர்வழி கோரும் தரப்பினருக்கு "சீர்செய்யவியலாத பாதிப்பு" ஏற்படும் என்றும், உறுத்துக்கட்டளை வழங்குவதைத் தவிர தரப்பினருக்கு வேறு எந்த பரிகாரமும் இல்லை என்றும், கைது செய்யப்படுவதினால் அல்லது வெளியேற்றப்படுவதினால் ஏற்படும் விளைவுகளிலிருந்து அவருக்கு பாதுகாப்பு தேவை என்றும் நீதிமன்றம் மனநிறைவளிக்க வேண்டும். ஈடுசெய்ய முடியாத பாதிப்பு என்பதற்கு அப்பாதிப்பைச் சீர்செய்வதற்வதற்கு இயல்பான சாத்தியம் கண்டிப்பாக இல்லை என்பதாக பொருள்கொள்ளவில்லை என்றாலும், அப்பாதிப்பு இழப்பீடு மூலம் போதுமான அளவில் ஈடுசெய்ய முடியாத அளவுக்கு முக்கியமான ஒன்றாக இருக்க வேண்டும் என்பதாகவே பொருள்படுகிறது. உறுத்துக்கட்டளை வழங்குவதற்கு கண்டிப்பாக மூன்றாவது நிபந்தனையான "வாய்ப்புநலத்தைச் சீர்தூக்கிப் பார்த்தல்" சாதகமாக இருக்க வேண்டும். உறுத்துக்கட்டளை மறுக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஏற்படக்கூடிய தீங்கு அல்லது ஊறின் கணிசமான அளவைக் கண்டறிவதோடு, உறுத்துக்கட்டளை வழங்கப்பட்டால் மற்றத் தரப்பினருக்கு ஏற்படக்கூடியவற்றையும் ஒப்பிட்டுப் பார்த்து நீதிமன்றம், உறுத்துக்கட்டளை வழங்குகையில் அல்லது மறுக்கையில், சீரிய நீதிய விருப்புரிமையைப் பயன்படுத்தவேண்டும். பாதிப்புக்குரிய சாத்தியக்கூறுகள் அல்லது பாதிப்பு நேரிடக்கூடிய சாத்தியக்கூறுகள் குறித்து மதிப்பிடுவதன் அடிப்படையிலும், வழக்கு நிலுவையிலிருக்கையில், அவ்வழக்கு விடயம் தற்போதுள்ள நிலையில் தொடர்ந்து இருந்துவர வேண்டும் என நீதிமன்றம் கருதினாலும் உறுத்துக்கட்டளை பிறப்பிக்கப்படும். ஆதலால், நீதிமன்றம், நடப்பிலிருக்கும் உரிமை வழக்கில் இடைக்கால உறுத்துக் கட்டளை பரிகாரத்தை வழங்குவதில் அல்லது மறுப்பதில் அதன் சீரிய நீதிய விருப்புரிமையைப் பயன்படுத்த வேண்டும்."

21.7. (மேற்கண்ட) அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் பேங்க் லிமிடெட் வழக்கில் நீதிமன்றத்தின் விருப்புரிமையின்பேரில் வழங்கப்படும் விளம்புகை மற்றும் உறுத்துக்கட்டளை குறித்து இந்த நீதிமன்றம் பின்வரும் குறிப்பிட்ட பத்தியில் கருத்துரைத்து தீர்மானித்துள்ளதாவது:- "22. 1963-ஆம் ஆண்டின் குறித்தவகை பரிகாரச் சட்டத்தின் பிரிவு 34-இன் கீழ் உரிமைகள் அல்லது தகுநிலை விளம்புகை என்பது நீதிமன்ற விருப்புரிமையில் ஒன்றாகும் என்பதில் சந்தேகம் இல்லை. அதேபோல, அச்சட்ட வகையத்தின் விளம்புகை மற்றும் உறுத்துக்கட்டளை பரிகார வழங்கல் அல்லது மறுத்தல் விருப்புரிமை சார்ந்ததாகும். வாதி பரிகாரத்தை ஓர் உரிமையாகக் கோர முடியாது. அது சட்டத்தின் சீரிய கோட்பாடுகளின்படியும், மறுத்திட இயலா நீதியக் கடப்பாட்டின்படியும் வழங்கப்பட வேண்டும். நீதிமன்றமே தன்னை ஒரு அநீதிக்கான கருவியாகவோ அல்லது ஒடுக்குமுறைக்கான சாதனமாகவோ மாற்றிக்கொள்ள முடியாது. நீதிமன்றம், தனது விருப்புரிமை அதிகாரத்தைப் பயன்படுத்துகையில், நீதி மற்றும் நடுநிலை கோடாமை குறித்த நன்கு அறுதியிடப்பட்ட கோட்பாடுகளை மனதிற்கொண்டு, நீதியின் குறிக்கோளையும் கருத்திற்கொண்டு விருப்புரிமையைப் பயன்படுத்த வேண்டும், ஏனென்றால், நீதியே அதிகார முத்திரையாகும், மேலும் அது மெய்ப்பாடற்ற இடத்தில் வழங்கப்பட முடியாது, வர்த்தக பரிவர்த்தனைகள் தொடர்பான விளம்புகை மற்றும் உறுத்துக்கட்டளை வழங்குதல், நேர்மையற்ற மற்றும் நம்பிக்கைத் துரோகத்திற்கு வழிகோலும். இதற்குமாறாக, பரிகாரம் மறுத்தல் அல்லது வழங்குதல் என்பது பொதுவாக வணிக நடத்தையில் நேர்மையை ஊக்குவிக்கிறது, மூலதனம் தங்குதடையின்றி கிடைப்பதை எளிதாக்குகிறது, ஒப்பந்ததாரர்களுடன் உடனடி இணக்கத்தை ஏற்படுத்துகிறது, நீடித்த வணிக வளர்ச்சி மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக நீதிமுறையான தீர்ப்புக்கு மதிப்புக் கொடுப்பதை மனதில் ஆழப்பதிய வைக்கிறது. விளம்புகை அல்லது உறுத்துக்கட்டளை பரிகாரம் அல்லது இரண்டையும் வழங்குதல் அல்லது மறுத்தலுக்கு முன்பாக, நீதிமன்றம், நீதியின் குறிக்கோளை நிறைவேற்ற, ஒவ்வொரு வழக்கின் சாதக, பாதகங்களை மதிப்பிட்டு, சங்கதிகளையும் சூழ்நிலைகளையும் அவற்றின் சரியான கண்ணோட்டத்தில் பரிசீலித்து விருப்புரிமையைப் பயன்படுத்த வேண்டும். வழங்கப்பட்ட விளம்புகை பரிகாரம் நியாயமற்றதும், சட்டவிரோதமானதுமாகும் என்று இச்சங்கதியின் பின்புல நிலவரத்திலிருந்து தீர்மானிப்பதற்கு எங்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை. "இது தங்குதடையற்ற மூலதனத்தைத் தடுத்து, வணிகத் தொழில் வளர்ச்சியை சீர்குலைத்து, நீதி வழியிலிருந்து நெறிதிறம்பிச் செல்ல முனைந்துள்ளது."

21.8. (மேற்கண்ட) சீமா அர்ஷத் ஜாகீர் என்ற வழக்கில், இந்த நீதிமன்றம் உறுத்துக்கட்டளை வழங்குதல் அல்லது மறுத்தல் குறித்த விடயம் விருப்புரிமை சார்ந்தது என்றும், அந்த விருப்புரிமை, தன்னிச்சையாக, ஏறுமாறாக அல்லது முரணாக பயன்படுத்தப்பட்டிருந்தது என்றாலன்றி அல்லது அறுதியிடப்பட்ட சட்டக் கோட்பாடுகளைப் புறக்கணித்து எதிர்ப்புக்குள்ளான உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தவிடத்து அரசமைப்புச் சட்டத்தின் வகுமுறைக்கூறு 136-இன் கீழ் தலையீடு செய்வதற்கு சாதாரணமாக கோருவதல்ல என்பதை மீண்டும் வலியுறுத்தியது. மேற்சொன்ன வழக்கில், மேல்முறையீட்டு நீதிமன்றம் வழக்கில் தலையிட்டு, விசாரணை நீதிமன்றத்தின் உறுத்துக்கட்டளையை நீக்கியது நியாயமானது என்று கருத்துரைத்து இந்நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாவது:- "29. விருப்புரிமை தன்னிச்சையாகவும், ஏறுமாறாகவும் அல்லது முரணாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அல்லது ஆய்வின் கீழ் உள்ள நீதிமன்ற உத்தரவு அறுதியிடப்பட்ட சட்டக் கோட்பாடுகளைப் புறக்கணித்துள்ளது என்பதாகவும் காட்டப்படும் நேர்வுகளைத் தவிர, இந்நீதிமன்றம் வகுமுறைக்கூறு 136-இன் கீழ் அதிகாரவரம்பைப் பயன்படுத்தும் வகையில், விருப்புரிமையைப் பயன்படுத்தி விசாரணை நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தால் தற்காலிக உறுத்துக்கட்டளை வழங்கப்படும் வழக்குகளில் தலையிட்டு, அதற்கே உரிய விருப்புரிமையை மாற்றீடு செய்யாது என்றும் இந்நீதிமன்றம் கருத்துரைத்தது.

30. வாதியால் பின்வரும் கட்டளைக்கோரிக்கைகள் மெய்ப்பிக்கப்படுகிறபோதுதான் தற்காலிக உறுத்துக்கட்டளை வழங்குவதற்கு நீதிமன்றத்தின் விருப்புரிமை பயன்படுத்தப்படுகிறது: (i) வாதுரைக்கப்பட்டவாறான வழக்கு முகாந்திரம் இருந்தால், அது, தற்காலிக உறுத்துக்கட்டளை பிறப்பித்து வாதியின் உரிமைகளைப் பாதுகாப்பதை இன்றியமையாததாக்குகிறது. (ii) வாதியின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேவையை, பிரதிவாதியின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேவையுடன் அல்லது பிரதிவாதிக்கு நேரிடக்கூடிய உரிமை பறிப்புடன் ஒப்பிடப்படுகிறபோது அல்லது மதிப்பிடப்படுகிறபோது, வாய்ப்புநல சமநிலை வாதிக்கு சாதகமாகவே சாய்கிறது. தற்காலிக உறுத்துக்கட்டளை வழங்கப்படாவிட்டால், வாதிக்கு ஈடு செய்ய முடியாத ஊறு ஏற்படும் வாய்ப்பு தெளிவாகவே உள்ளது. மேலும், தற்காலிக உறுத்துக்கட்டளை என்பது நேர்மையான பரிகாரமாக இருப்பதால், வாதியின் நடத்தை குறைகூறத்தக்கதாக இல்லாமல், அவர் நீதிமன்றத்தை கறையற்ற கைகளுடன் அணுகிறபோதுதான் அந்தப் பரிகாரத்தை வழங்கும் விருப்புரிமை பயன்படுத்தப்படும்.

32. கீழமை நீதிமன்றம் அதன் விருப்புரிமையைப் பயன்படுத்துகையில், தன்னிச்சையாக, ஏறுமாறாக அல்லது முரணாக செயல்படுகிறவிடத்து, மேல்முறையீட்டு நீதிமன்றம் தலையிடும். "சான்றாதாரம் இல்லை" எனும்போது தற்காலிக உறுத்துக்கட்டளை வழங்கி விருப்புரிமையைப் பயன்படுத்துதல் அல்லது உரிய ஆவணங்களை முற்படுத்துவதைத் தவிர்த்து தற்காலிக உறுத்துக்கட்டளை வழங்க மறுத்தல் என்பன தன்னிச்சையான, ஏறுமாறான அல்லது முரணான செயல்பாடுகளுக்கான எடுத்துக்காட்டுகள் ஆகும். "சான்றாதாரம் இல்லை" ("சான்று இல்லை" போன்றது) என்ற அடிப்படையில் நாம் செயல்படுவதைக் குறிப்பிடும்போது, முற்றிலும் சான்றாதாரம் இல்லாத நேர்வுகளை மட்டுமின்றி உரிய சான்றாதாரம் இல்லாத அல்லது ஒட்டுமொத்தமாக எடுக்கப்படும் சான்றாதாரம் விருப்புரிமையை நியாயமாக ஆதரிக்கும் திறனற்றிருக்கும் நேர்வுகளையும் நாம் குறிப்பிடுகிறோம். இந்த வழக்கில், வழக்கு முகாந்திரத்தை மெய்ப்பிக்க "சான்றாதாரம் இல்லை" என்பதால் உயர் நீதிமன்றம் அதன் மேல்முறையீட்டு அதிகாரவரம்பில், இந்த வழக்கில் தலையிட்டு, விசாரணை நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தற்காலிக உறுத்துக்கட்டளையை நீக்கியதில் நியாயப்படுத்தப்பட்டது.

33. இந்த ஏழு மேல்முறையீடுகளிலும் உயர் நீதிமன்ற உத்தரவுடன் தலையிடுவதற்கு எந்த காரணத்தையும் நாங்கள் காணவில்லை. அதன்படி, நாங்கள் இந்த சி.அ.ம.ஐ நற்கூறு ஏதும் இல்லாததால் தள்ளுபடி செய்கிறோம். மாற்று ஏற்பாடுகளைச் செய்ய மனுதாரர்களுக்கு 15 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்படுகிறது. தரப்பினர்கள் அவரவர்களுக்குரிய செலவுத்தொகையை ஏற்கவேண்டும்.

21.9. (மேற்கண்ட) ஸ்கைலைன் கல்வி நிறுவனம் என்ற வழக்கில், இந்நீதிமன்றத்தின் மூவர் அமர்வு, உறுத்துக்கட்டளை குறித்த வழக்கில், அரசமைப்புச் சட்டத்தின் வகுமுறைக்கூறு 136-இன் கீழ் நீதிமன்றம் சாதாரணமாக தலையீடு செய்யாது எனக் கருத்துரைக்கையில் கீழ்க்கண்டவாறு மீண்டும் விளக்கியுள்ளதாவது:- "19. நாங்கள் இந்த முழு வழக்கையும் கவனமாகப் பரிசீலித்துள்ளோம். "எதிர்மேல்முறையீட்டாளர்களால் நிறுவப்பட்ட பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு "ஸ்கைலைன்" என்ற வார்த்தையை அவர்கள் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கான மேல்முறையீட்டாளரின் வேண்டுரையின் நிலைக்குந்தன்மையின் அல்லது அதற்கு மாறானதன்மையின்பேரில் தீர்ப்புப் பகருவதற்கு முன்பாக, மேல்முறையீட்டாளரால் தாக்கல் செய்யப்பட்ட உரிமை வழக்கின் விசாரணை நிலுவையிலிருப்பதாலும், தரப்பினர்களால் எழுப்பப்பட்ட பிரச்சினைகள் இன்னும் முடிவு செய்யப்படாததாலும், உயர் நீதிமன்றம், மறுக்கப்படாத சங்கதிகளின் மற்றும் கற்றறிந்த தனியமர் நீதியரசர் முன்பாக வைக்கப்பட்ட சான்றாதாரத்தின் அடிப்படையிலேயே தற்காலிக உறுத்துக்கட்டளைக்கான மேல்முறையீட்டாளரின் வேண்டுரையை சரியாகப் பரிசீலித்து முடிவு செய்தது, மேலும் தற்காலிக உறுத்துக்கட்டளைக்கான வேண்டுரையை ஏற்க மறுப்பதில் உயர் நீதிமன்றத்தால் பயன்படுத்தப்பட்ட விருப்புரிமையானது, வெளிப்படையான பிழை அல்லது முரணால் பாதிக்கப்பட்டு, அநீதி இழைக்கப்பட்டுள்ளதை வெளிப்படுத்துகிறது என்ற முடிவுக்கு இந்நீதிமன்றம் வந்தாலன்றி, அரசமைப்புச் சட்டம் வகுமுறைக்கூறு 136-இன் கீழ் அதிகாரத்தைச் செலுத்துவதற்கான தேவை இருக்காது.

22. மேற்குறிப்பிடப்பட்ட தீர்ப்புரைகளின் தொடர்புடைமை என்னவென்றால், முதல்நிலை நீதிமன்றம், தற்காலிக உறுத்துக்கட்டளை பரிகாரத்தை வழங்க அல்லது வழங்க மறுக்க அதன் விருப்புரிமையைப் பயன்படுத்துகிறது மற்றும் அவ்வாறு பயன்படுத்தப்படும் விருப்புரிமை, நீதிமன்றத்தின் முன்பாக வைக்கப்பட்ட சான்றாதாரத்தின் மெய்யான பரிசீலனையின் அடிப்படையிலானது, மேலும், நம்பத்தக்க காரணங்களால் வலுவூட்டப்படுகின்றன என்றால், வழக்கு முகாந்திரம், வாய்ப்புநல சமநிலை, சீர்ப்படுத்த முடியாத ஊறு மற்றும் நேர்மைநெறி ஆகிய பிரச்சினைகளின்பேரில் ஒரு மாறுபட்ட கருத்தெடுக்க மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு இயலுமெனில் வழக்கைப் புதிதாகப் பரிசீலிக்கப்படுவதன்பேரில் மட்டுமே மேல்முறையீட்டு நீதிமன்றம் தலையிட விரும்பாது."

21.10. (மேற்கண்ட) நீலகந்தா சித்ராமப்பா நிங்கஷெட்டி என்ற வழக்கில் நிகழ்ச்சி குறித்து தரப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தபோது, முறைப்படியான அறிவிப்பு, நடவடிக்கையைப் பாதிக்காது என்றும், இக்காலமுறையான அறிவிப்பு, கண்டிப்பாக எழுத்துமூல அறிவிப்பாகாது என்றும் இந்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இந்த நீதிமன்றம் மற்றவற்றுக்கிடையே கருத்துரைத்து தீர்மானித்துள்ளதாவது:- "8. பொதுவர் தீர்ப்புச் சட்டம், 1940 (சட்டம் 10/1940), பிரிவு 14, உட்பிரிவு (1), பொதுவர்கள் அல்லது பொதுநடுவர்கள், தீர்ப்பு வழங்கியும், கையொப்பமிட்டும், தரப்பினர்களுக்கு எழுத்துமூல அறிவிப்பு கொடுக்க வேண்டும் என வேண்டுறுத்துகிறது. தீர்ப்பு முன்னிடப்பட்ட பிறகு தீர்ப்பு முன்னிடப்பட்டதைக் குறித்து நீதிமன்றம் தரப்பினர்களுக்கு அறிவிப்பு கொடுக்க வேண்டும் என அப்பிரிவின் உட்பிரிவு (2) வேண்டுறுத்துகிறது. அறிவிப்பு கொடுப்பது தொடர்பாக இந்த இரண்டு துணைப்பிரிவுகளின் வகையங்களில் உள்ள வேறுபாடு குறிப்பிடத்தக்கதாகும், மேலும், தீர்ப்பு முன்னிடப்படுவதைக் குறித்து நீதிமன்றம் தரப்பினர்களுக்கு கொடுக்க வேண்டிய அறிவிப்பு எழுத்து மூலமான அறிவிப்பாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதை தெளிவாகக் காட்டுகிறது. அறிவிப்பு வாய்மொழியாகவும் கொடுக்கப்படலாம். வாய்மொழியாக அறிவிப்பு கொடுக்கப்பட்டால், அறிவிப்பை முறையாக வழங்குதல் அல்லது அதனைத் தரப்பினருக்கு கொடுப்பதில் அறிவிப்பு அனுப்புதல் குறித்த கேள்வி எழாது. தீர்ப்பு முன்னிடப்படுவது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு அறிவிப்பு கொடுப்பது குறித்து பிரிவு 14-இன் உட்பிரிவு (2)-இன் தேவைகளுக்கு ஏற்ப ஒரு தீர்ப்பு முன்னிடப்பட்டுள்ளது என்று தகவல் தெரிவிப்பது போதுமானது. "அறிவிப்பு" என்பது "எழுத்து மூலமான தகவல்" என்பதாகவே பொருள் அல்ல. ஆக்ஸ்போர்டு கன்சைஸ் அகராதியின்படி, "அறிவிப்பு" என்பதற்கு "தகவல், செய்தி, முன்னறிவிப்பு" என்று பொருள்படுகிறது மற்றும்" "அறிவிப்புக் கொடுக்கவும், அறிவிப்பைப் பெற்றுக்கொள்ளவும்" போன்ற சொற்றொடர்களிலும் இந்தப் பொருள் உள்ளது, மேலும் இது ஏதோவொன்றைக் குறித்த முறையாக தகவலளித்தல் அல்லது ஏதோவொன்றைச் செய்வதற்கான அறிவுறுத்தல்கள்" என்றும் பொருள்படுகிறது மற்றும் "அடுத்த அறிவிப்பு வரும் வரை பொறுப்பிலிருந்து விலகியிருக்கும் அறிவிப்பு" போன்ற சொற்றொடர்களிலும் அத்தகைய பொருள் உள்ளது". பிரிவு 14-இன் உட்பிரிவு (2)-இல் உள்ள “அறிவிப்பு கொடுத்தல்" என்ற சொற்றொடர், தீர்ப்பு முன்னிடப்படுவதைக் குறித்த தகவல் கொடுத்தல் என்பதாகவே பொருள்படுகிறது, இது நிச்சயமாக 21-2-1948 அன்று தரப்பினர்களின் வழக்குரைஞர்கள் மூலம் கொடுக்கப்பட்டது என நாங்கள் கருதுகிறோம். உரிமையியல் நடைமுறை சட்டத்தின் கட்டளை 3, விதி 5-இன்படி, வழக்குரைஞருக்கு அறிவிப்பு என்பது தரப்பினருக்கான அறிவிப்பாகும், இதில் எந்தவொரு தரப்பினரின் வழக்குரைஞருக்கும் சார்வு செய்யப்படும் நீதிமுறைக் கட்டளை எதுவும், எந்தத் தரப்பினருக்காக வழக்குரைஞர் சார்பாற்றுகிறாரோ, அந்தத் தரப்பினருக்கு உரியமுறையில் தெரியப்படுத்தி அறிவிக்கப்பட்டதாக அனுமானிக்கப்படவேண்டும் மற்றும் நீதிமன்றம் வேறுவிதமாக உத்தரவிட்டிருந்தாலன்றி, அது நேரடியாகத் தரப்பினரிடம் கொடுக்கப்பட்டது அல்லது அவருக்கு சார்வு செய்யப்பட்டது போன்ற எல்லா நோக்கங்களையும் பொறுத்தமட்டில் பயனுடையதாய் இருக்கும் என்று வகைசெய்யப்பட்டுள்ளது. **** **** ****

10. காலவரையறைச் சட்டத்தின் பிரிவு 158-இன் 3-ஆவது கலத்தில் "அறிவிப்பைச் சார்வு செய்யும் நாள்” என்ற சொற்றொடர் “முறைப்படியாகச் சார்வு செய்யப்படும் எழுத்து மூலமான அறிவிப்பு” என்றுதான் பொருள்கொள்வதாக புரிந்துகொள்வதற்கு எந்த அடிப்படையையும் நாங்கள் காணவில்லை. சட்டமன்றம் “அறிவிப்பு” என்ற வார்த்தையைப் பயன்படுத்தியபோது, அது ஒரு முறையான தகவல் மட்டுமல்ல, முறைசாரா தகவலையும் குறிக்கிறது என்பதைக் கருத்திற்கொள்ளவேண்டும். அதேபோல, அறிவிப்பு சார்வுசெய்தல் என்பது ஆக்கபூர்வமான அல்லது முறைசாரா அறிவிப்பை உள்ளடக்கும் என்னும் சங்கதியைக் கருத்திற்கொள்ள வேண்டும். அதன் நோக்கம், "அறிவிப்பு" மற்றும் "சார்வு செய்தல்" என்ற வார்த்தைகளின் பிந்தைய பொருளை நீக்குவதாக இருந்தால் அது மிகவும் வெளிப்படையாக இருக்கவேண்டும் எனக் கூறப்படுகிறது. இங்கு அவ்வாறு செய்யப்படவில்லை. மேலும், தீர்ப்பு முன்னிடப்பட்டுள்ளதை முழுமையாக அறிந்திருந்தாலும், முறைப்படியான அறிவிப்பு இல்லை என்னும் காரணத்தின்பேரில் எச்சமயத்திலும் அத்தீர்ப்பின் அடிப்படையிலான தீர்ப்பாணையை எதிர்த்துரைக்கும் அவரது உரிமை, தீர்ப்பு முன்னிடப்பட்டதை ஆட்சேபிப்பதற்கு இல்லவேயில்லை என்றாலும் அவர் அடுத்தடுத்த நடவடிக்கைகளில் பங்கேற்றுள்ளாார், இச்சொற்றொடரை, பாதிக்கப்படும் கட்சிக்கு முறைப்படியாக சார்வு செய்யப்பட்ட ஓர் எழுத்துமூலமான அறிவிப்பாகவே பொருள்கொண்டால், அது அத்தரப்பினருக்கு ஒரு தீர்வைக் காட்டும். "இத்தகைய ஒரு முடிவு, தரப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு தீர்ப்பாயத்தால் பிரச்சினைக்கு விரைவாக முடிவு காணப்படும் எனும் இந்தப் பொதுவர் தீர்ப்பு நடைமுறையில் அமைந்துள்ள முழு நோக்கத்தையும் பயனற்றதாக்கிவிடும்."

21.11. (மேற்கண்ட) டி.பி.டேவர் என்ற வழக்கில் இந்த நீதிமன்றத்தில் மூவர் அமர்வு, ஒரு சங்கத்தின் உள் நிர்வாகம் தொடர்பான விடயங்களில் நீதிமன்றங்கள் பொதுவாக தலையிடுவதில்லை என்று கருத்துரைத்து, தீர்மானித்துள்ளதாவது:- "8. மேற்சொன்ன விவாதத்திலிருந்து பின்வரும் கோட்பாடுகளைத் திரட்டலாம். (1) மெசொனிக் குழுவின் உறுப்பினர், அக்குழுவின் விதிகளுக்கு கட்டுப்பட்டவர்; மேலும் விதி, வெளியேற்றுவதற்கு வகை செய்கிறதென்றால், அவர் விதிகளில் வகைசெய்யப்பட்டுள்ள முறையில்தான் வெளியேற்றப்பட வேண்டும். குழு, கட்டாயமாக விதிமுறைகளுக்கேற்ப செயல்படவேண்டியதாகும், ஒரு குறிப்பிட்ட விதிமுறை கட்டாயமானதா? அல்லது பரிந்துரையானதா? என்பதை, அதுகுறித்து நன்கு அறுதியிடப்பட்ட விதிகளின் பொருள்விளக்கத்தைக் கருத்திற்கொண்டு, ஒவ்வொரு வழக்கிலும் தீர்வு செய்யப்பட வேண்டும். (3) ஓர் உரிமையியல் நீதிமன்றத்தின் அதிகாரவரம்பே வரையறைக்குட்பட்டதாகும்; அது அத்தகைய அமைப்பின் முடிவுகளுக்கு வெளிப்படையாகவே மேல்முறையீட்டு நீதிமன்றமாக அமர முடியாது, மேற்படி அமைப்பு அதிகார வரம்பின்றி செயல்பட்டாலோ அல்லது நன்னம்பிக்கையுடன் செயல்படாவிட்டாலோ அல்லது மேற்குறிப்பிடப்பட்ட தீர்முடிவுகளில் விளக்கப்பட்டுள்ளபடி இயற்கை நீதியின் கோட்பாடுகளை மீறி செயல்பட்டாலோ அந்த அமைப்பின் உத்தரவை நீக்கறவு செய்யலாம்."

22. மேற்சொன்னவற்றைத் தவிர, யூனியன் ஆஃப் இந்தியா மற்றும் பலர் -எதிர்- தி/ள். ராஜ் குரோ இம்பெக்ஸ் எல்.எல்.பி. மற்றும் பலர்: 2021 எஸ்.சி.சி. ஆன்லைன் எஸ்.சி. 429 என்ற வழக்கில் இந்நீதிமன்றத்தால் குறிப்பிடப்பட்டுள்ள மற்றும் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ள இடைக்கால பரிகாரம் வழங்குதல் குறித்த விடயங்கள் தொடர்பான கோட்பாடுகளையும் நாம் குறித்துக்கொள்ளலாம், அவை பின்வருமாறு:- "194. இதில் இதற்குமுன் விவாதிக்கப்பட்டபடி, விருப்புரிமையைப் பயன்படுத்துவதற்கான பொதுவான கோட்பாடுகளுடன், இடைக்கால பரிகாரம் குறித்த குறிப்பிட்ட விடயங்களின் சில அம்சங்கள் குறித்தும் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும். இடைக்கால பரிகாரம் வழங்குதல் குறித்த விடயங்களில், வழக்காளருக்கு ஆதரவாக வழக்கு முகாந்திரம் இருக்கிறது என்பதான நீதிமன்றத்தின் மனநிறைவு மட்டும் போதுமானதல்ல என்பதே அடிப்படையாகும். மற்ற கூறுகளான வாய்ப்புநல சமநிலை அல்லது ஈடுசெய்ய முடியாத ஊறு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு ஆகியவை வெற்று சம்பிரதாயங்கள் அல்ல, அவை அவற்றுக்குரிய தொடர்புடைமையைக் கொண்டுள்ளன. மேலும், இடைக்கால பரிகார வழக்கில், நீதிமன்றம் அதன் விருப்புரிமையைப் பயன்படுத்தி, ஒரு குறிப்பிட்ட நடைமுறையைப் பின்பற்றுகையில், இடைக்கால பரிகாரத்தை வழங்கும் அல்லது மறுக்கும் சமயத்தில், இறுதியாக முக்கிய வழக்கின் தீர்முடிவு, பின்பற்றப்படும் நடைமுறைக்கு எதிராகச் செல்லுமானால், அது அநீதிக்குள்ளாகக்கூடிய நிலையை மதிப்பிடவேண்டியதாகிறது. பிலிம்ஸ் ரோவர் இன்டர்நேஷனல் லிமிடெட் - எதிர்- கேனன் பிலிம் சேல்ஸ் லிமிடெட்: (1986) 3 ஆல் இ.ஆர். 772-இல் மேலமை நீதிமன்றத்தின் தீர்முடிவில் பயன்பெறும்படியான குறிப்பிடப்பட்டுள்ள தொடர்புடைய கோட்பாட்டை நாம் குறிப்பிடலாம், அது கீழ்க்கண்டவாறு:— ".......தடையுறுத்துக் கட்டளையாக இருந்தாலும் அல்லது வலியுறுத்துக் கட்டளையாக இருந்தாலும், அந்த வழக்கிடை உறுத்துக் கட்டளைகளை வழங்குதல் குறித்த முதன்மையான குழப்பம் என்னவென்றால், விசாரணையில் தனது உரிமையை நிலைநாட்ட தவறும் (விசாரணை நடந்து அதில் தோல்வியடையக்கூடிய) ஒரு தரப்பினருக்கு நீதிமன்றம், உறுத்துக்கட்டளை ஒன்றை வழங்குதலில் அல்லது மாற்றாக, விசாரணையில் வெற்றிப்பெறுகின்ற (அல்லது வெற்றியடையக்கூடிய) ஒரு தரப்பினருக்கு உறுத்துக்கட்டளை வழங்கத் தவறியதில் "தவறான" முடிவு கண்டிருக்கலாம் என்ற பொருள்வரையறையின்படி தீங்கிற்கு ஆளாகக்கூடிய நிலை உள்ளது. ஆகவே நான் விவரித்துள்ள பொருளில் "தவறு" என முடிவு எடுக்கப்பட்டிருந்தால், எந்த வழிமுறையாக இருந்தாலும் நீதிமன்றம், எதில் குறைந்தபட்ச அநீதிக்குள்ளாகக்கூடிய நிலை உள்ளதோ அதனை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது அடிப்படைக் கோட்பாடாகும். இந்த இரண்டு வகையான வழக்கிடை உறுத்துக்கட்டளைகளை வழங்குவதற்கான வழிகாட்டுதல்கள் இக்கோட்பாட்டிலிருந்து பெறப்பட்டுள்ளன. (தடித்த எழுத்துக்களில் வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளது)

195. மேற்சொன்ன தீர்முடிவில் பல்வேறு விளக்கங்களைக் குறிப்பிடுகையில், இந்த நீதிமன்றம், தோராப் கவாஸ்ஜி வார்டன் -எதிர்- கூமி சோராப் வார்டன்: (1990) 2 எஸ்.சி.சி 117 என்ற வழக்கில் கருத்துரைத்துள்ளதாவது:- "16. முழுமையான பரிகாரம் வழங்கப்படலாம் அல்லது சட்டவிரோதமாகச் செய்யப்படும் செயல்களைச் செய்யாமலிருக்க வற்புறுத்தப்படலாம் அல்லது முறையீடு செய்யும் தரப்பினரிடமிருந்து தவறாக எடுத்துக்கொண்டதை மீட்டளிக்கப்படலாம் எனும்போது, இறுதி கேட்புகை வரையில், நடப்பிலிருக்கும் பிரச்சினைக்கு முன்னதாக உள்ள எதிர்க்கப்படாத நிலையில் இருக்கின்ற அதுகாறும் உள்ள நிலையைத் தொடர்ந்து பேணிவர அல்லது மீட்டளிக்க வழக்கிடை வலியுறுத்துக்கட்டளைகள் பரிகாரம் பொதுவாக இவ்வாறு வழங்கப்படுகின்றன. ஆனால், அத்தகையதோர் உறுத்துக் கட்டளையை, வழக்கு விசாரணையில் தனது உரிமையை நிலைநாட்டத் தவறுகிற அல்லது தவறக்கூடிய ஒரு தரப்பினருக்கு வழங்குவதால், அது எவருக்கு வழங்கப்படுகிறதோ அந்தத் தரப்பினருக்கு மாபெரும் அநீதியோ அல்லது ஈடுசெய்ய முடியாத ஊறோ விளையலாம் அல்லது அதற்கு மாற்றாக, வெற்றியடைகிற அல்லது வெற்றியடையக்கூடிய தரப்பினருக்கு அதனை வழங்காவிட்டால் அதே அளவிலான மாபெரும் அநீதியோ அல்லது ஈடுசெய்ய முடியாத ஊறோ விளையலாம் என்பதால் நீதிமன்றங்கள் சில வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளன. பொதுவாக கூறப்படும் வழிகாட்டுதல்களாவன: (1) வாதிக்கு வலுவான வழக்கு விசாரணை உள்ளது. அதாவது, பொதுவாக ஒரு தடை உறுத்துக்கட்டளைக்குத் தேவைப்படும் வழக்கு முகாந்திரத்தை விட இது உயர்ந்த தரம் கொண்டதாக (2) பொதுவாக பணத்தால் ஈடுசெய்ய இயலாத அல்லது கடுமையான ஊறினைத் தடுப்பது அவசியமாகும். (3) வாய்ப்புநல சமநிலை, அத்தகைய பரிகாரத்தை நாடும் ஒருவருக்கு சாதகமாக இருக்கும்.

17. ஒவ்வொரு வழக்கின் சங்கதிகள் மற்றும் சூழ்நிலைகளின் அடிப்படையில் வழக்கிடை வலியுறுத்துக்கட்டளை வழங்குவது அல்லது மறுப்பது, ஒரு நேர்மைநெறியான பரிகாரமாக இருப்பதால், அது இறுதியாக நீதிமன்றத்தின் சீரிய நீதிசார் விருப்புரிமையைப் பயன்படுத்துவதன் மீதே அமையவேண்டும். மேற்கண்ட வழிகாட்டுதல்கள், விரிவான, முழுமையான அல்லது வரம்பற்ற விதிகளோ அல்ல என்றாலும், நடவடிக்கை தேவைப்படும் விதிவிலக்கான சூழ்நிலைகளும் இருக்கலாம், அத்தகைய உறுத்துக் கட்டளைகளை வழங்குதல் அல்லது மறுத்தலுக்கான முன்நிபந்தனையாக அவற்றைப் பயன்படுத்தினால், அது நீதிசார் விருப்புரிமையை சீரியமுறையில் பயன்படுத்துவதாக இருக்கும். (தடித்த எழுத்துக்களில் வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளது)

196. மேற்கூறிய கோட்பாடுகளை மனதிற்கொண்டு, தற்போதுள்ள வழக்குகளின் ஆரம்பநிலையில் குறிப்பிட வேண்டிய சாதாரண வினாக்களுள் ஒன்று இடைக்கால பரிகாரம் இறக்குமதியாளர்களுக்கு (நீதிப்பேராணை மனுதாரர்கள்) மறுக்கப்பட்டு, அவர்கள் நீதிப்பேராணை மனுக்களில் இறுதியாக வெற்றியடைந்தாலும் அவர்கள் ஈடுசெய்யவியலா பாதிப்புக்குள்ளாக நேரிடுமா? என்பதேயாகும். அவர்களுக்கு பாதிப்பு என்பது சிறிய அளவிலான இலாப இழப்பாக இருக்கக்கூடுமென்றால், இது பணரீதியாகத்தான் எப்போதும் மதிப்பிடப்படும்பட்சத்தில், பொதுவாக ஈடுசெய்யவியலாத ஒன்றாகக் கருதப்பட முடியாது என்னும் இக்கேள்விக்கான நேரடியான பதில் அதைத் தெளிவாக்கக்கூடும். மற்றொன்று சாதாரணமானதென்றாலும் பொருத்தமானதான கேள்வி யாதென்றால் வாய்ப்புநல சமநிலை என்ற கூறு தொடர்புடையதாக இருக்கும்; இறக்குமதியாளர்களுக்கு பாதிப்பு தரக்கூடிய தொல்லை என்பது பிரச்சினைக்குரிய அறிவிக்கைகளேயாகும், அவை மேல்முறையீட்டாளருக்கு பாதிப்பேற்படுத்தக்கூடிய குறைந்தபட்ச தொல்லைதரக்கூடிய (தேசிய நலனில் அதன் இறுதியான தாக்கத்தை ஏற்படுத்தும்) அறிக்கைகள் நிறுத்திவைக்கப்பட்டால், இந்திய சந்தைகள் அளவுக்கு அதிகமான இறக்குமதி செய்யப்பட்ட பருப்பு/தானிய வகைகளுடன் நிரம்பிவழிய அனுமதிக்கப்பட்டுவிடும்."

23. 1.12.2021-ஆம் தேதியன்றான திருத்தத்திற்கு முன்னதாக இருந்ததும் 11.7.2022 அன்றான கேள்விக்குள்ளான கூட்டத்திற்கு முன்னதாகவே இருந்ததுமான கட்சியின் துணைவிதிகளில் குறிப்பிட்ட ஒரு சில பயன்தரக்கூடிய வகையங்கள் கீழ்க்கண்டவாறு எடுகுறிப்பிடப்பட்டுள்ளன:- "விதி 5 - உறுப்பினர் நிலை **** **** **** (vii) உறுப்பினர்களுக்கு, கட்சி விடயங்கள் தொடர்பாக நீதிமன்ற வழக்கு நடவடிக்கைகளின் உதவியை நாடுவதற்கு உரிமையில்லை. கட்சியின் உறுப்பினர் எவரும், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரின் முடிவுக்கு எதிராக நீதிமன்ற வழக்கு நடவடிக்கைகளை நாடி செல்வாராயின் அவர் (ஆண்/பெண்) கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்படுவர். கட்சியின் விடயங்கள் தொடர்பாக பொதுக்குழு எடுக்கும் முடிவே இறுதியானது, மேலும் இந்த நிபந்தனையை பின்பற்றுவர்கள்தான் உறுப்பினராகச் சேர்த்துக்கொள்ளப்படுவதற்கு தகுதியானவர்களாவர். கழகத்தின் உறுப்பினர்களான அனைவரும் பொதுக்குழுவின் முடிவுக்கு கட்டுப்பட்டவர்களாவர். *** *** *** விதி 18: செயல்பாடுகளும், பொறுப்புகளும் (i) மேற்குறிப்பிடப்பட்ட கட்சியின் வெவ்வேறு மட்டத்திலுள்ள பிரிவுகளின் அலுவல் பொறுப்பிலுள்ளவர்களின் பொறுப்புகளும் செயல்பாடுகளும் பின்வருமாறு: (ii) தலைவர்: இவர் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டங்களுக்கு தலைமைத் தாங்கி நடத்துவார். அவர் இல்லாதபோது, உறுப்பினர்களுள் ஒருவர் கூட்டத்திற்கு தலைமைத்தாங்கி நடத்தவேண்டும். (iii) செயலாளர்: கட்சியின் செயலாளர் பிரிவு, நிர்வாகப் பொறுப்பேற்பதுடன், சம்பந்தப்பட்ட செயற்குழு கூட்டத்தின் முடிவுகளை நிறைவேற்றும் செயற்குழு கூட்டத்தைக் கூட்டும் நிலையில் செயலாளர் இல்லாத அந்த அவசரநிலையில், அவரால் எடுக்கப்படும் முடிவுகளுக்கு பதினைந்து நாட்களுக்குள் செயற்குழு கூட்டத்தின் ஒப்புதலுறுதியைப் பெற்றுவிடவேண்டும். ஆய்வுக்காக தணிக்கைக் குழுவால் கோரப்படும் கோப்பு எதனையும் அவர் சமர்ப்பிக்கவேண்டும். (vi) கட்சியின் ஒரு பிரிவிலுள்ள அலுவல் பொறுப்பாளர்கள் தற்காலிகமாக இல்லாதிருந்தால் அல்லது வெளியேற்றப்பட்டிருந்தால், செயற்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும் நபர், ஒரு மாதத்திற்குள் கட்சி அமைப்பின் முறையான அலுவல் பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படும் வரையில் தற்காலிக அடிப்படையில் செயல்பாடுகளைக் கவனித்துவருவர். விதி-19: மைய அமைப்பின் பொதுக்குழு (i) அ.இ.அ.தி.மு.க.-இன் பொதுக்குழு என்பது தலைவர், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர்கள், பொருளாளர், கட்சித் தலைமையக செயலாளர்கள், மைய செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் பொதுக்குழு உறுப்பினர்கள், தணிக்கைக்குழு உறுப்பினர்கள், சொத்து பாதுகாப்புக்குழு மற்றும் பாராளுமன்றக்குழு ஆகியவற்றைக் கொண்டதாகும். பொதுக்குழு, கழகத்தின் அனைத்து அதிகாரங்களும் கொண்ட கட்சியின் உச்சநிலையான குழுவாகும். (ii) ஒன்றிய கழகங்களின் செயலாளர்கள், நகராட்சிக் கழகங்கள் மற்றும் நகர்ப்புற கழகங்களின் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், தமிழ் நாட்டிலுள்ள மாவட்ட கழகத்தின் தலைவர், உதவி செயலாளர் மற்றும் பொருளாளர், மேலும் மாநில கழகங்களின் செயலாளர்கள் மற்றும் பிற மாநிலங்களிலுள்ள மாநில கழகங்களின் தலைவர், உதவி செயலாளர், பொருளாளர் ஆகியோர் அவரவருக்குரிய பதவிகளின்படி பொதுக் குழுவின் உறுப்பினர்களாக இருத்தல்வேண்டும். (iii) அந்தந்த மாவட்டத்தின் மொத்த சட்டமன்றத் தொகுதிகளுக்கு சமமான எண்ணிக்கையில் ஒவ்வொரு மாவட்ட கழகத்திலிருந்து பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படவேண்டும். மற்றவற்றைப் பொறுத்த வரையில், பாண்டிச்சேரி உள்ளிட்ட பிற மாநிலத்தில் அந்தந்த மாநில கழகங்களில் பதிவு செய்யப்பட்ட மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரால் பொதுக்குழு உறுப்பினர்கள் முடிவு செய்யப்பட வேண்டும். (iv) கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் சேர்ந்து, கட்சியின் உறுப்பினர்களிலிருந்து 100 உறுப்பினர்களுக்கு மிகாமல் மைய அமைப்பு பொதுக் குழுவுக்கு உறுப்பினர்களை நியமித்துக்கொள்ளலாம். (v) மைய அமைப்பின் (தலைமையகம்) பொதுக்குழு கூடி மைய அமைப்பின் தலைவரைத் தேர்ந்தெடுத்தல்வேண்டும். (vi) மைய அமைப்பின் பொதுக்குழுக் கூட்டத்திற்கு தலைவர் தலைமை வகிக்கவேண்டும். அவர் இல்லாவிட்டால் பொதுக்குழுக் கூட்டத்திற்கு தலைமை வகிக்க பொதுக்குழு உறுப்பினர்களுள் ஒருவரை தற்காலிகமாக நியமிக்கலாம். (vii) பொதுக்குழு கூட்டம் ஆண்டுக்கு ஒருமுறையோ அல்லது ஒருங்கிணைப்பாளராலும், இணை ஒருங்கிணைப்பாளராலும் அவசியம் எனக் கருதப்படும்போதெல்லாம் கூட்டம் கூட்டுவதற்கு 15 நாட்களுக்கு முன்னதாக அறிவிப்பு கொடுத்துக் கூட்டப்படவேண்டும். கூட்டத்தின் குறைந்தபட்ச எண்ணிக்கை, மொத்த பொதுக்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையில் ஐந்தில் ஒரு பங்காக இருக்கவேண்டும். ஐந்தில் ஒரு பங்கு பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தைக் கூட்டுவதற்கு ஒருங்கிணைப்பாளரையும் இணை ஒருங்கிணைப்பாளரையும் கோரினால், ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் அத்தகைய கோரிக்கையைப் பெற்ற 30 நாட்களுக்குள் அவ்வாறு செய்யவேண்டும். (viii) பொதுக்குழு கட்சியின் கொள்கைளையும் நிகழ்ச்சிகளையும் வகுத்து, அவற்றைச் செயற்படுத்தும் உச்ச அதிகாரம் கொண்டதாகும். பொதுக்குழுவின் முடிவே இறுதியானது மற்றும் கட்சியின் அனைத்து உறுப்பினர்களையும் கட்டுப்படுத்துவதாகும். (ix) பொதுக்குழுவின் பதவிகாலம் ஐந்து ஆண்டு காலமாகும். எனினும் புதிய பொதுக்குழு கூட்டம் கூட்டும்வரையில் இந்தப் பதவிகாலம் நீட்டிக்கப்படும். விதி 20 – பொதுச் செயலாளர் கட்சி உறுப்பினர்களின் மற்றும் கட்சி அணியினரின் விருப்பப்படி, புரட்சித்தலைவி டாக்டர் ஜெ. ஜெயலலிதா, கட்சியின் நிரந்தர பொதுச் செயலாளராக இருக்கவேண்டும், மேலும் அப்பதவிக்கு வேறெவரும் தேர்ந்தெடுக்க/நியமிக்கப்படமாட்டார். பொதுச் செயலாளர் பதவி இரத்து செய்யப்படுகிறது. விதி 20(அ): ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் (i) ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் தொடர்ந்து ஐந்தாண்டு காலம் கட்சியில் அடிப்படை உறுப்பினர்களாக இருக்க வேண்டும். (ii) ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படவேண்டும். (iii) துணைவிதி (ii)-இன்படி, தேர்ந்தெடுக்கப்படும் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் 5 ஆண்டுகாலம் பதவி வகிக்கவேண்டும். (iv) ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் விதிகள் மற்றும் ஒழுங்குமுறை விதிகளின்படி கூட்டாக தங்களது கடமைகள், கடப்பாடுகள் மற்றும் பணிகளை செய்து/நிறைவேற்றி தங்களது அதிகாரங்களைச் செலுத்தவேண்டும். (v) கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும், கட்சியின் ஒட்டுமொத்த நிருவாகத்திற்கும் பொறுப்புடையவர்களாவர். (vi) ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர், தலைவர், பொருளாளர், தலைமையகச் செயலர்கள், மாவட்டச் செயலர்கள் மற்றும் நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் ஆகியோரைக் கொண்ட மைய அமைப்பின் செயற்குழுவை ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் அமைப்பர். (vii) ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரின் பதவிகாலத்தின்போது. ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரால் நியமிக்கப்படும் மைய செயற்குழு உறுப்பினர்கள், பொருளாளர் மற்றும் தலைமையகச் செயலர்கள் ஆகியோர் அப்பதவியை வகிப்பர். ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரின் பதவிகாலம் முடிவடைவதற்கு முன்பாக ஏதேனும் காரணத்திற்காக அப்பதவி காலியாக இருக்குமானால், புதிய ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்கும்வரையில் முந்தைய ஒருங்கிணைப்பாளராலும், இணை ஒருங்கிணைப்பாளராலும் நியமிக்கப்பட்ட அலுவல் பொறுப்பாளர்கள் அப்பதவியை வகித்து தொடர்ந்து செயல்படுவர். (viii) செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டங்களைக் கூட்டவும், பொது மற்றும் செயற்குழுக்களால் முடிவெடுக்கப்படுகின்றவாறு கட்சியின் கொள்கைகளையும், நிகழ்ச்சிகளையும் செயற்படுத்தவும், கழகக் கட்சிக்கான தேர்தல்களையும், இடைத்தேர்தல்களையும் நடத்தவும், தணிக்கைக் குழுவின் மூலம் அனைத்துப் பிரிவு கட்சிகளின் கணக்குகளை ஆய்வு செய்யவும், அனைத்து மட்டங்களிலும் கழகக் கட்சியின் வரவுசெலவினை பொருளாளர் மூலமாகவும், சுயமாகவும் நிருவகிக்கவும், கட்சி அலுவலகம், கட்சியின் அசையும் மற்றும் அசையாச் சொத்துகளை நிருவகிக்கவும், கட்சி சொத்துகள் தொடர்பாக எழுகின்ற சட்டப்படியான நடவடிக்கைகளில் கட்சியை பிரதிநிதித்துவம் செய்யவும், அவற்றைப் பாதுகாக்க கட்சி சார்பாக தேவையான சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கவும் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் அதிகாரங்களையும், பொறுப்புகளையும் கொண்டிருக்கவேண்டும். கட்சி உறுப்பினரை அல்லது அதன் அலுவல் பொறுப்பாளரை தற்காலிகமாக உடனடியாக நீக்குதல் உள்ளிட்ட கட்சியின் நலன், கட்சியின் ஒழுங்குமுறை, கொள்கைகள் மற்றும் நிகழ்ச்சிகளை முன்னிட்டு ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் கட்சி கூட்டங்களுக்கு தலைமை வகித்து, கட்சி விதிகளை, ஒழுங்குமுறை விதிகளை அல்லது சட்டத்தை மீறும் கட்சி உறுப்பினர்கள் மற்றும் அதன் அலுவல் பொறுப்பாளர்கள் மீது கட்சி விதிகளுக்கேற்ப அனைத்து விதமான ஒழுங்குமுறை நடவடிக்கைகளை எடுப்பர். ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும், கட்சி உறுப்பினர்களால் பரிந்துரைக்கப்படும் ஒழுங்குமுறை நடவடிக்கைகளின் பேரில் இறுதி முடிவெடுக்கும் உச்ச அதிகாரமுடையவர்களாக இருத்தல் வேண்டும், மேலும் கட்சி கொள்கைகள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு உறுதுணையாக இருந்துவரவும், கழக கட்சியை மேம்படுத்தி பாதுகாக்கவும் அனைத்து நடவடிக்கைகளை எடுக்கும் ஒட்டுமொத்த அதிகாரமும் கொண்டிருத்தல் வேண்டும். (ix) ஒருங்கிணைப்பாளருக்கும், இணை ஒருங்கிணைப்பாளருக்கும் முக்கிய அரசியல் நிகழ்வுகள், கொள்கைகள் மற்றும் கட்சியின் செயற்குழு அல்லது பொதுக்குழு ஏதேனும் ஒன்றின் கூட்டத்திற்கு காத்திருந்து, தாமதப்படுத்த இயலாத அவசர நிகழ்ச்சிகள் ஆகியவற்றின்பேரில் அவர் தக்கதென கருதலாகின்ற அத்தகைய நடவடிக்கைகள் எடுக்க அதிகாரமளிக்கப்பட்டுள்ளது. அத்தகைய முடிவுகளுக்கும், நடவடிக்கைகளுக்கும் பொதுக்குழுவால் அதன் அடுத்த கூட்டத்தில் ஒப்புதலுறுதி அளிக்கப்படவேண்டும். எனினும், குழு கூடாதபோது, ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் அத்தகைய அவசர விடயங்களின் அடிப்படையில் பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்துகளைப் பெறுவது அவர்களின் விருப்பத்தைச் சார்ந்ததாகும். (x) ஒருங்கிணைப்பாளருக்கும், இணை ஒருங்கிணைப்பாளருக்கும் சட்டப்படியாக நிறுவப்பட்ட வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களின் நடப்பு கணக்கிலோ அல்லது நிரந்தர வைப்பீடுகளிலோ ஏதேனுமொன்றில் அ.இ.அ.தி.மு.க.-வின் நிதியை வைப்பீடு செய்யவும், கட்சியின் சார்பாக அந்த நிதியை திரும்ப எடுக்கவும், கணக்குகளைக் கையாளவும் அதிகாரமளிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளருக்கும், இணை ஒருங்கிணைப்பாளருக்கும் கட்சியின் சொத்துகளை பிணையம் வைப்பதன்பேரில் மேற்குறிப்பிடப்பட்ட நிறுவனங்களிலிருந்து கட்சியின் பொருட்டு கடன்கள் வாங்குவதற்கும், இவையனைத்தும் கட்சியின் பொருட்டும் கட்சியின் சார்பாகவும் அவசியமென்றால் செய்வதற்கும் அதிகாரமளிக்கப்பட்டுள்ளது. (xi) ஒருங்கிணைப்பாளருக்கும், இணை ஒருங்கிணைப்பாளருக்கும் அவரது சார்பாக வங்கிக் கணக்குகளைக் கையாள அதாவது நிதியை வைப்பீடு செய்ய அல்லது திரும்ப எடுக்க கட்சியின் பொருளாருக்கு அதிகாரமளிக்கவும், இவ்விதியின் துணைவிதி (x)-இல் குறிப்பிடப் பட்டுள்ள கடமைகளைப் பொறுத்தும், அதிகாரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. (xii) அ.இ.அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்வதற்காக தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பப்படும் அங்கீகாரப் படிவத்தில் ஒருங்கிணைப்பாளராலும், இணை ஒருங்கிணைப்பாளராலும் மட்டுமே கையெழுத்திடப்பட வேண்டும். (xiii) தேர்ந்தெடுக்கப்படும் செயல்பாட்டார்கள் தவிர, கிளை அணிகள், ஒன்றிய, நகர, நகர்ப்புற மற்றும் மாவட்ட அணிகள் மற்றும் பிற மாநில அணிகள் ஆகியவற்றுக்கு தேவைப்படும்பட்சத்தில், இணை செயலாளர்கள் அல்லது துணை செயலாளர்களை நியமிக்கும் உரிமையும் ஒருங்கிணைப்- பாளருக்கும், இணை ஒருங்கிணைப்பாளருக்கும் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கட்சியின் எந்தக் கட்டத்திலுமுள்ள அணிகளில் எவற்றிலாவது மூன்றில் ஒரு பங்கு பதவிகளில், பெண்களுக்கு பிரதிநிதித்துவம் கொடுத்து தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால், பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கொடுத்து, ஈடு செய்ய அப்பதவிகளில் பெண்களை நியமிக்கும் அதிகாரங்களும் ஒருங்கிணைப்பாளருக்கும், இணை ஒருங்கிணைப்பாளருக்கும் அளிக்கப்பட்டுள்ளன. விதி-23: தலைவர் (i) பொதுக்குழு உறுப்பினர்கள், கட்சியின் தலைமைக் கழகத் தலைவரைத் தேர்ந்தெடுப்பர். (ii) தலைவர். தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களுக்கு தலைமை தாங்கி, நடவடிக்கைகளை மேற்கொள்வார். தலைவர் இல்லாவிட்டால், உறுப்பினர்களில் ஒருவர் தற்காலிகமாக தலைமை தாங்கி கூட்டங்களை நடத்துவார். விதி-25: தலைமை செயற்குழு (ii) முறையான காரணங்களுக்காக கூட்டம் கூட்டப்பட முடியாவிட்டால், தலைமை செயற்குழு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை கூடவேண்டும். தேவையென அறிந்தால், அ.இ.அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் எந்த சமயத்திலும் கூட்டத்தைக் கூட்டலாம். (iii) வழக்கமான கூட்டங்களுக்கு பதினான்கு நாட்கள் கால அறிவிப்பும், தலைமை செயற்குழு அவசர கூட்டங்களுக்கு ஏழு நாட்கள் கால அறிவிப்பும் வழங்கப்பட வேண்டும். விதி 42: பதவிக்காலம் மாறிவரும் சூழ்நிலைகளுக்கேற்ப மேற்குறிப்பிடப்பட்ட விதிகள் மற்றும் ஒழுங்குமுறை விதிகளிலிருந்து விலக்களிக்க உண்மையான காரணங்கள் இருப்பதாக ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் கருதினால், அதற்கு ஒருங்கிணைப்பாளருக்கும் இணை ஒருங்கிணைப்- பாளருக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. விதி-43: திருத்தங்கள் கட்சி அமைப்பின் விதிகள் எவற்றையும் வகுக்கவும், திருத்தம் செய்யவும் அல்லது நீக்கவும் பொதுக்குழுவுக்கு அதிகாரம் உண்டு. விதி-45: ஒருங்கிணைப்பாளருக்கும் இணை ஒருங்கிணைப்பாளருக்கும் அதிகாரமளித்தல். கட்சியின் மேற்கூறிய விதிகள் மற்றும் ஒழுங்குமுறை விதிகள் எவற்றையும் தளர்த்தவோ அல்லது மாற்றியமைக்கவோ ஒருங்கிணைப்பாளருக்கும், இணை ஒருங்கிணைப்பாளருக்கும் முழுமையாக அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளன."

23.1. இந்த வகையங்களில் சில, 01.12.2021 அன்று செயற்குழுவால் திருத்தம் செய்யப்பட்டது. இவ்வகையங்கள் 01.12.2021 அன்றான மேற்கண்ட திருத்தத்திற்கு முன்பும், பின்பும் உள்ளவாறு ஒப்பீடு செய்து காட்டப்பட்டுள்ளதாவது:- 01.12.2021 அன்றானதிருத்தத்திற்கு முந்தைய துணைவிதிகள் 01.12.2021 அன்றான திருத்தத்திற்கு பிந்தைய துணைவிதிகள் விதி 20(அ) - ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் துணை விதி (ii) விதி 20(அ) - ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் துணை விதி (ii) ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படவேண்டும். ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். மேலும், ஒருங்கிணைப்பாளரும் இணை ஒருங்கிணைப்பாளரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் கூட்டாக ஒற்றை வாக்கு என்பதனடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். விதி 43 – திருத்தங்கள் கட்சி அமைப்பின் விதிகள் எவற்றையும் வகுக்கவும், திருத்தம் செய்யவும் அல்லது நீக்கவும் பொதுக்குழுவுக்கு அதிகாரம் உண்டு. விதி 43 – திருத்தங்கள் கட்சி அமைப்பின் விதிகள் எவற்றையும் வகுக்கவும், திருத்தம் செய்யவும் அல்லது நீக்கவும் பொதுக்குழுவுக்கு அதிகாரம் உண்டு. ஆனால், ஒருங்கிணைப்பாளரும் இணை ஒருங்கிணைப்பாளரும், கட்சியின் அனைத்து அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற விதியை மாற்றவோ அல்லது திருத்தம் செய்யவோ முடியாது, ஏனெனில் அது கட்சியின் அடிப்படை அமைப்பாகத் திகழ்கிறது. விதி 45 – ஒருங்கிணைப்பாளருக்கும் இணை ஒருங்கிணைப்பாளருக்கும் அதிகாரமளித்தல் கட்சியின் மேற்கூறிய விதிகள் மற்றும் ஒழுங்குமுறை விதிகள் எவற்றையும் தளர்த்தவோ அல்லது மாற்றியமைக்கவோ ஒருங்கிணைப்பாளருக்கும், இணை ஒருங்கிணைப்பாளருக்கும் முழுமையான அதிகாரமளிக்கப்பட்டுள்ளன. விதி 45 – ஒருங்கிணைப்பாளருக்கும் இணை ஒருங்கிணைப்பாளருக்கும் அதிகாரமளித்தல் கட்சியின் மேற்கூறிய விதிகள் மற்றும் ஒழுங்குமுறை விதிகள் எவற்றையும் தளர்த்தவோ அல்லது மாற்றியமைக்கவோ ஒருங்கிணைப்பாளருக்கும், இணை ஒருங்கிணைப்பாளருக்கும் முழுமையான அதிகாரமளிக்கப்பட்டுள்ளன. ஆனால், ஒருங்கிணைப்பாளரும் இணை ஒருங்கிணைப்பாளரும், கட்சியின் அனைத்து அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற விதியை தளர்த்தவோ அல்லது மாற்றவோ முடியாது, ஏனெனில் அது கட்சியின் அடிப்படை அமைப்பாகத் திகழ்கிறது.

24. கடந்த கால நிகழ்வுகளை விரைவாகத் தொகுத்துரைப்பது தக்கதாக இருக்கும். துணைவிதிகளின் வகையங்களில், முன்னர், கட்சியின் உயர்ந்த பதவி பொதுச் செயலாளருக்கு ஒதுக்கப்பட்டபோதிலும், 05.12.2016 அன்று கழக கட்சி பல்வேறு மாற்றங்களுக்குட்பட்டு, இறுதியில், 12.09.2017 அன்று துணைவிதிகளில் செய்யப்பட்ட திருத்தத்தின்படி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரால் கூட்டு தலைமைமுறை அமைக்கப்பட்டது. முதன்மையாகப் போட்டியிடும் கட்சிகளான ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். முறையே ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற மேற்படி பதவிகளுக்கு கூட்டாகவும் ஒருமனதாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு, 23.06.2022 அன்றான கூட்டம் கூட்டப்படுவதற்கு முன்பு வரையில் நீண்டகாலம் சேர்ந்து செயல்பட்டனர். எனினும், 23.06.2022-ஆம் தேதியன்றான பொதுக்குழுக் கூட்டத்தில், துணைவிதிகளில் மேற்கொண்டு திருத்தங்கள் செய்வதற்காக - முக்கியமாக உச்ச மட்டத்தில் ஒற்றைத் தலைமை முறைக்கு மாறுவதற்கான முன்மொழிதல் வரவிருந்தநிலையில், அது வழக்குக்கு வழிகோலியது. ஆரம்பத்தில், கழகமும்/கட்சியும், அதன் உறுப்பினர்களும் தீர்மானங்கள் நிறைவேற்றி, கட்சியினை நன்கு நிருவகிப்பதற்காக ஒரு குறிப்பிட்ட துணைவிதி, விதி அல்லது ஒழுங்குமுறை விதியை வகுப்பது கழகம்/கட்சியின் விருப்பத்தைச் சார்ந்தது என்னும் அதேவேளையில், நீதிமன்றம், கழகத்தின்/கட்சியின் உள் விவகாரங்களில் பொதுவாக தலையிடுவதில்லை என்னும் அறுதியிடப்பட்ட சட்டக் கோட்பாடுகளைக் கருத்திற்கொண்டு, உயர் நீதிமன்ற தனியமர் நீதியரசரால் 22.06.2022-ஆம் தேதியிடப்பட்ட உத்தரவு மூலம், முதல் மூன்று உரிமையியல் வழக்குகளான உ.வ. எண்கள் 102/2022, 106/2022 மற்றும் 111/2022-இல், 23.06.2022-ஆம் தேதியன்று கூட்டம் நடத்துவதை முன்னிட்ட இடைக்கால உறுத்துக் கட்டளைக்கான வேண்டுரைகள் நிராகரிக்கப்பட்டன, மேலும், எந்த முடிவும் அவர்களின் கூட்டு விவேகத்திற்குட்பட்டே எடுக்கப்படுவதால், நீதிமன்றம் உறுப்பினர்களை ஒரு குறிப்பிட்ட முறையில் செயல்பட வற்புறுத்த முடியாது, தீர்மானங்களை முடிவு செய்து, நிறைவேற்றுவது பொதுக்குழுவும் அதன் உறுப்பினர்களும்தான் என்பதால், பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதற்கான செயல்முறையில் இந்த நீதிமன்றம் தலையிட முடியாது. இந்த உத்தரவு, ஒரு நீதிமன்ற உள்ளக மேல்முறையீடான மு.பி.மே. எண் 160/2011-இல் எதிர்க்கப்பட்டது, அதில் 23.06.2022-ஆம் தேதியிடப்பட்ட ஓர் உத்தரவின் வாயிலாக உயர் நீதிமன்ற நீதியராயம், மேற்படி குறிக்கப்பெற்ற கூட்டத்தை நடத்த அனுமதித்திருந்தாலும், வரைவு தீர்மானத்திலுள்ள 23 அம்சங்களைத் தவிர, வேறெந்த விசயத்திலும் முடிவெடுக்கக்கூடாது எனக் கூறி தடை விதித்தது. மேற்படி கூட்டத்தில், முன்மொழியப்பட்ட செயற்குறிப்பு விவரங்கள் எடுத்துக்கொள்ளப்படாததால், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தொடர்ந்திருப்பதற்கான திட்டக்குறிப்பு காலாவதியாகிவிட்டது என்பதும் எதிர்மேல்முறை- யீட்டாளர்களின் வழக்காகும். 23.06.2022-ஆம் தேதியன்றான மேற்படி கூட்டம் நடத்துவதற்காக அளிக்கப்பட்ட பல்வேறு காரணங்கள் இழுக்கானவை என்றாலும், அக்கூட்டத்தின் அவைத் தலைவருக்கு, பொதுக்குழுவின் மற்றொரு பொதுக்குழு கூட்டத்தைக் கூட்ட எவ்விதத்திலும் அதிகாரம் இல்லை. 06.07.2022 அன்று, உயர் நீதிமன்ற நீதியராயத்தால் பிறப்பிக்கப்பட்டவாறான, 23.06.2022-ஆம் தேதியிடப்பட்ட மேற்படி உத்தரவுக்கான எதிர்ப்பினை ஆய்வு செய்கையில், இந்த நீதிமன்றம் நிகழ்ந்த நிகழ்வுகளையும், அடுத்த பொதுக்குழுக் கூட்டம் 11.07.2022-ஆம் தேதியன்று நடக்கவிருப்பதாகக் குறிக்கப்பட்டது என்ற சங்கதியையும் கருத்திற்கொண்டு, இந்நீதிமன்றம் அறிவிப்பு அனுப்புகையில், 23.06.2022-ஆம் தேதியிடப்பட்ட எதிர்ப்புக்குள்ளான உத்தரவின் செயல்பாட்டினையும், செயல்விளைவினையும் நிறுத்தி வைத்ததோடு, வழக்கின் சங்கதிகள் மற்றும் சூழ்நிலைகளின்படி தேவைப்படலாகும் வேறேதும் இடைக்கால பரிகாரத்திற்கான வேண்டுரையை ஆராய்வதையும், வேறேதும் உத்தரவுப் பிறப்பிப்பதையும் மேற்படி உரிமையியல் வழக்குகளை விவாதிக்கும் கற்றறிந்த தனியமர் நீதியரசர் அவர்களின் விருப்பத்திற்கே விட்டுவிடும் அதேசமயத்தில், 11.07.2022-ஆம் தேதியன்று நடக்கவிருப்பதாகக் குறிக்கப்பட்ட கூட்டத்தை சட்டப்படி நடத்துவதையும் தெளிவாக்கியது. பின்னர், 11.07.2022-ஆம் தேதியன்றான கூட்டத்தைத் தடுப்பதற்காக, புதிதாகத் தொடுக்கப்பட்ட உரிமையியல் வழக்குகளான உ.வ. எண்கள் 118/2022 மற்றும் 119/2022-இல் உள்ள வேண்டுரைகள், 11.07.2022 அன்று கூட்டம் நடைபெறுவதாகக் குறிக்கப்பட்ட நேரத்திற்குச் சற்று முன்னதாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவில்தான் உயர் நீதிமன்ற கற்றறிந்த தனியமர் நீதியரசரால் நிராகரிக்கப்பட்டன. அதன்படி, 11.07.2022-ஆம் தேதியன்றான கூட்டம், குறிக்கப்பட்ட நேரத்தில் நடத்தப்பட்டு, அதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன, ஆனால், கற்றறிந்த தனியமர் நீதியரசரால் பிறப்பிக்கப்பட்ட 11.07.2022-ஆம் தேதியிடப்பட்ட உத்தரவு, 06.07.2022-ஆம் தேதியிடப்பட்ட இந்த உத்தரவின் நோக்கம் குறித்த தவறான கருத்தின் அடிப்படையில் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் காணப்பட்டதால், இந்த நீதிமன்றம் 27.09.2022-ஆம் தேதியிடப்பட்ட ஓர் உத்தரவு மூலம், வழக்கை மறுபரிசீலனைகாகத் திருப்பியனுப்பியது. அதன்பிறகு 23.06.2022 அன்று இருந்தவாறான முன்பிருந்த நிலையை தொடரப்படவேண்டும் என்றும், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரின் கூட்டிசைவின்றி செயற்குழு அல்லது பொதுக்குழு கூட்டம் நடத்தப்படமாட்டாது என்றும் மற்றவற்றுக்கிடையே கூறி, சில இடைக்கால பரிகாரங்களை வழங்கி மேற்படி புதிதாகத் தாக்கல் செய்யப்பட்ட உரிமையியல் வழக்குகளிலுள்ள இடைக்கால பரிகார விண்ணப்பங்கள் உயர் நீதிமன்ற கற்றறிந்த தனியமர் நீதியரசரால் தீர்வுசெய்யப்பட்டன. எனினும், 17.08.2022-ஆம் தேதியிடப்பட்ட மேற்படி உத்தரவு, உயர் நீதிமன்ற நீதியராயத்தால் 02.09.2022-ஆம் தேதியிடப்பட்ட அதன் எதிர்ப்புக்குள்ளான உத்தரவு மூலம் நீக்கறவு செய்யப்பட்டது. உயர் நீதிமன்ற நீதியராயத்தால் அவ்வாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு இந்நீதிமன்றத்தின் தலையீட்டைக் கோருகிறதா? என்பதே கேள்வியாகும்.

25. இவ்வழக்குகளில் கற்றறிந்த தனியமர் நீதியரசரால் வழங்கப்பட்ட நிரந்தர உறுத்துக்கட்டளை முக்கியமாக மூன்று காரணிகளின் அடிப்படையிலானது என்று 17.08.2022-ஆம் தேதியிடப்பட்ட உத்தரவைக் கூர்ந்தாய்வு செய்ததிலிருந்து தெளிவாகிறது. கட்சியின் துணைவிதிகளின்படி பொதுக்குழு கூட்டம் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரால் மட்டுமே கூட்டப்படமுடியும், அவர்கள் அவ்வாறு செய்யவில்லையென்றால், 11.07.2022 அன்றான கூட்டம் முற்றிலும் அதிகாரப்பூர்வமற்றது. மேலும், மேற்படி 11.07.2022-ஆம் தேதியன்றான கூட்டம், துணைவிதிகளின் விதி 19(vii)-ஆல் கோரப்பட்டவாறு 15 நாட்கள் முன்னறிவிப்பு கொடுத்து கூட்டப்பட்டதல்ல என்பது முந்தியதும் முதலாவதுமானதாகும். இரண்டாவதாக, உறுத்துக்கட்டளை வழங்கவில்லையென்றால், துணைவிதிகளின் வகையங்களுக்கு மாறாக பொதுக்குழு கூட்டத்தை கூட்டியவரான இ.பி.எஸ். அவர்கள் கட்சி உறுப்பினரிலிருந்து வாதியான ஓ.பி.எஸ். அவர்களையும், வேறுசிலரையும் நீக்கிவிட்டதாக மிகவும் சுலபமாகச் சொல்லிவிடும் நிலையில் இருப்பார். மேலும், அவர்கள் முன்மொழியப்பட்ட பொதுச்செயலாளர் தேர்தல்களிலுங்கூட பங்கெடுக்கமுடியாது என்பது கற்றறிந்த தனியமர் நீதியரசரின் கருத்தாகும். கற்றறிந்த தனியமர் நீதியரசரின் கருத்துப்படி, இக்குறிப்பிட்ட சூழலில் வாய்ப்புநல சமநிலையும் சீர்செய்யவியலாத பாதிப்பையும், கட்சியின் அடிப்படை உறுப்பினர்களின் கருத்துகளின் அடிப்படையிலேயே பார்க்கப்படவேண்டும் என்பதாகும். மூன்றாவதாக, ஓ.பி.எஸ். அவர்களும், இ.பி.எஸ். அவர்களும் கூட்டாக ஒருங்கிணைப்பாளராகவும், இணை ஒருங்கிணைப்பாளராகவும் வெற்றிகரமாக செயல்பட்டுக்கொண்டிருந்தபோது, 1.[5] கோடிக்கும் மேல் உறுப்பினர்களைக் கொண்ட கட்சி எப்படி தற்போது நிலவிவரும் பங்கீட்டுமுறையை திடீரென்று மாற்றுவதற்கு முடிவெடுத்தது என்பது கற்றறிந்த தனியமர் நீதியரசரின் கருத்தாகும். 23.06.2022-ஆம் தேதிக்கு முன்பிருந்த நிலையை மீட்டளித்ததோடு, ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் கூட்டாகச் செயல்படவேண்டுமென்பதும், அவர்களின் கூட்டிசைவுடன் கூட்டங்கள் நடத்தப்படவேண்டும் என்பதும், முறையாக விடுக்கும் கோரிக்கையின்பேரில், அவர்கள் பொதுக்குழு கூட்டத்தை நடத்த மறுப்புத் தெரிவிக்கமாட்டார்கள் என்பதும், அவர்கள் பொதுக்குழு கூட்டம் நடத்துவதற்கு தேவையான வழிகாட்டுதல்களைப் பெறுவதற்காக நீதிமன்றத்தை அணுகிக்கொள்ளலாம் என்பதும் கற்றறிந்த தனியமர் நீதியரசரால் வழங்கப்பட்ட இறுதி உறுத்துக்கட்டளை ஆகும்.

26. இதற்கு மாறாக, கற்றறிந்த தனியமர் நீதியரசரால் அவ்வாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கெதிராக நீதிமன்ற உள்ளக மேல்முறையீடுகளை விசாரிக்கையில், உயர் நீதிமன்ற நீதியராயம் முதலாவதாக, 23.06.2022 அன்று பொதுக்குழு கூட்டத்தில் வெளியிடப்பட்ட நிகழ்வுகளைக் கருத்திற்கொண்டதோடு 2190 உறுப்பினர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டது என்னும் சங்கதியையும், 23.06.2022-ஆம் தேதியிடப்பட்ட மேற்படி கூட்டத்தில் வாதியான ஓ.பி.எஸ்.-ம் இருந்தார், அதில், அடுத்த கூட்டம் 11.07.2002 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது என்பதையும் குறித்துக்கொண்டது. உயர் நீதிமன்ற நீதியராயம், ஆவணத்தையும் குறிப்பாக விதி 19(vii)-இன் தமிழ் மற்றும் ஆங்கில பதிப்புகளையும் ஆய்வுசெய்து, ஆண்டுக்கொருமுறை அல்லது அவசியமெனக் கருதப்படும்போதெல்லாம் கூட்டப்படும் முறையான பொதுக்குழு கூட்டத்துக்கு 15 நாள் அறிவிப்பு தேவை என்பது பரிந்துரைக்க வேண்டியதாகத் தெரிகிறது என்றாலும், இது பொதுக்குழுவின் 1/5 உறுப்பினர்களால் கோரப்படும் கூட்டத்துக்கு அல்ல, இதில் கோரிக்கையைப் பெற்ற 30 நாட்களுக்குள் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும்தான் கூட்டத்தைக் கூட்டவேண்டும் என்பதே ஒரே கட்டளை விதியாகும். 23.06.2022 அன்று பொதுக்குழு கூட்டம் நடந்த இடத்தில் அறிவிக்கப்பட்டது குறித்து அவர்கள் அறிந்திருக்கவில்லை என்பது வாதியான ஓ.பி.எஸ்.-இன் வழக்கல்ல என உயர் நீதிமன்றம் கருத்துரைத்தது. ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் பகைமை கொண்டிருந்தனர் என்ற சூழல் மறுக்கமுடியாத சங்கதியாகும், மேலும், விதி 19(vii)-இன் கண்டிப்பான பயன்பாடு எதுவும், முட்டுக்கட்டையாகவே முடிய நேரிடும். இடைக்கால பொதுச் செயலாளர் ஒரு குற்ற வழக்கில் சிறையிலிருப்பதால் கடமைகளை நிறைவேற்றமுடியாது எனும்போது, உறுப்பினர்களால் கோரப்பட்டதன் அடிப்படையில் 12.09.2017 அன்று கூட்டத்தை கழகப் பொறுப்பாளர்கள் கூட்டினர் என்ற கடந்தகால நிகழ்வையும் நீதியராயம் குறிப்பிட்டது. அனைத்து முடிவுகளையும் எடுப்பதற்கு பொதுக்குழுவுக்கே பொதுவிதிகளில் உயர்விடம் அளிக்கப்பட்டுள்ளதையும் நீதியராயம் குறித்துக்கொண்டது. இருந்தாலும், 01.12.2021 அன்றான செயற்குழு கூட்டத் தேர்தலுக்கு, 23.06.2022 அன்று நடந்த பொதுக்குழு கூட்டத்தில் ஒப்புதலுறுதி அளிக்கப்படாததால் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டது எனக் கூறி இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியவரான இணை ஒருங்கிணைப்பாளர்-இ.பி.எஸ்.-இன் நிலைப்பாட்டையும் நீதியராயம் குறித்துக்கொண்டது. இணை ஒருங்கிணைப்பாளர், அவரது பதவியில் அவ்வாறாக தொடர்ந்திருப்பதைத் தவிர்க்க, அதிலிருந்து விலகிக்கொண்டதால், கட்சியில் இணை ஒருங்கிணைப்பாளர் எவருமில்லை என்று நீதியராயம் கருத்துரைத்தது.

26.1. கோரிக்கையை ஒரு புனையப்பட்ட ஆவணமாக சந்தேகித்து கற்றறிந்த தனியமர் நீதியரசர் அளித்த கருத்துகளைப் பொறுத்தவரையில், கூட்டம் நடத்த கோரிக்கை விடுத்து கையொப்பமிட்ட அல்லது கூட்டத்தில் கலந்துகொண்ட உறுப்பினர்களில் எவரும் அத்தகைய கோரிக்கையுடன் முன்வரவில்லை என நீதியராயம் சுட்டிக்காட்டியது. அதைத்தவிர, கூட்டத்தில் கோரிக்கை ஏதும் வைக்கப்படவில்லை என்றோ, கோரிக்கை கடிதம் ஒரு புனையப்பட்ட ஆவணம் என்பதற்கு எந்த உறுதிக்கூற்றும் இல்லை என்றோ வழக்குரையில் வாதிகள் எதுவும் வலியுறுத்தவில்லை. 23.06.2022 மற்றும் 11.07.2022 அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், துணை விதிகளுக்குப் புறம்பானதாகவோ சட்டத்துக்கு முரணானதாகவோ காணப்பட்டாலுங்கூட, ஒரு சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, இவ்விரு கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மாற்றுவதற்கு 5-இல் 1 பங்கு பொதுக்குழு உறுப்பினர்களுக்கு எப்போதும் வழிவகை உள்ளது என்றாலும், 5-இல் 1 பங்கு பொதுக்குழு உறுப்பினர்களால் அத்தகைய கோரிக்கை எதுவும் வைக்கப்படவில்லை, இக்காரணி சீர்செய்யவியலாத பாதிப்பு என்ற கோரிக்கைக்கு எதிராகவே செயல்பட்டது.

26.2. நீதியராயம், தற்காலிக உறுத்துக்கட்டளை வழங்குவதை அல்லது மறுப்பதை கட்டுப்படுத்துகின்ற கோட்பாடுகளைக் குறிப்பிட்டு, ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரின் கூட்டிசைவுடன்தான் கூட்டத்தைக் கூட்டுவதற்காக கற்றறிந்த தனியமர் நீதியரசரால் வழங்கப்பட்ட கட்டளைகள், ஒட்டுமொத்தக் கட்சியையும் சீர்செய்யவியலாத இன்னலுக்கு உள்ளாக்கக்கூடிய நிலைக்கு வழிகோலும். ஏனென்றால் மேல்முறையீட்டாளரான மற்றும் 1-ஆம் எதிர்மேல்முறையீட்டாளரான ஓ.பி.எஸ். அவர்களும் மற்றும் இ.பி.எஸ். அவர்களும் கூட்டாக இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்பேயில்லை என்றும் சுட்டிக்காட்டியது. கற்றறிந்த தனியமர் நீதியரசர் வழங்கிய கட்டளைகள், கட்சியில் ஏற்கெனவே நிலவிவந்த “செயல் முடக்கத்தையையே” ஊக்குவிக்கும் என நீதியராயம் குறிப்பிட்டது.

26.3. இதில் இதற்குமுன்பு தொடர்புடைய பத்திகளிலுள்ள மற்ற அனைத்து விளக்கங்களும், கருத்துரைகளும் உயர் நீதிமன்றத்தால் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதால் நாங்கள் அவற்றை விரிவாகக் கூறவில்லை. உயர் நீதிமன்ற நீதியராயம், 02.09.2022-ஆம் தேதியிடப்பட்ட உத்தரவைப் பிறப்பிக்கையில், கற்றறிந்த தனியமர் நீதியரசரால் பிறப்பிக்கப்பட்ட தற்காலிக உறுத்துக்கட்டளை உத்தரவு எப்படி சீரிய நீதிய கோட்பாடுகளுக்கு எதிரானது என்பதையும், கற்றறிந்த தனியமர் நீதியரசரால் செயலுறுத்தப்பட்ட விருப்புரிமை தன்னிச்சையான தன்மையாலும், முரணான தன்மையாலும் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை போதியளவில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது என்பதையும் தற்போதைய நோக்கத்திற்காகக் கருத்துரைப்பது போதுமானது.

27. எங்களது கருத்துப்படி, உயர் நீதிமன்ற நீதியராயத்தின் நீதிமுறைமையும், காரண விளக்கமும் சட்டத்திற்கேற்பவும் தற்போதைய வழக்கின் சங்கதிகளுக்கேற்பவும் உள்ளன என்பதாகும்.

28. 11.07.2022-ஆம் தேதியன்றான கூட்டம், அதிகாரப்பூர்வமான நபரால் கூட்டப்படவில்லை என்பதாலும், 15 நாட்கள் அறிவிப்பு கொடுக்கப்படாத காரணத்தாலும் 02.09.2022-ஆம் தேதியிடப்பட்ட உத்தரவை எதிர்த்து மேல்முறையீட்டாளர்களின் தரப்பில் வைக்கப்பட்ட முக்கிய வாதத் தொகுப்பு சட்டமுரண்பாட்டால் பாதிப்படைந்துள்ளது. வாதிகளின் சார்பான வழக்கு முகாந்திரம் குறித்து முடிவு காண்கையில், கற்றறிந்த தனியமர் நீதியரசரால் இந்தக் காரணவிளக்கமே பின்பற்றப்பட்டது. மேற்படி காரணவிளக்கமும், இதேபோன்ற வாதங்களும் தவறானவையாதலால் அவை ஏற்கப்பட இயலாது.

28.1. 23.06.2022-ஆம் தேதியன்றான கூட்டத்தைப் பொறுத்தவரையில், அதில் எந்த சந்தேகமுமில்லை அல்லது அதில் எந்தப் பிரச்சினையுமில்லை என்பதை வழக்கின் சங்கதிகள் பெருமளவில் தெளிவாக்கியுள்ளன. மேற்படி கூட்டம் உண்மையில் ஒருங்கிணைப்பாளரலும், இணை ஒருங்கிணைப்பாளராலும் சேர்ந்து கூட்டப்படவேண்டும். அந்தக் கட்டம் வரையில் அவர்கள் ஒன்றிணைந்தே பணிபுரிந்து கொண்டிருந்தனர். ஆயினும், அதன்பிறகு குறிப்பாக துணைவிதிகளைத் திருத்தம் செய்வதற்காக முன்மொழியும்போதும், ஒற்றைத் தலைமைமுறைக்கு மாறும்போதும் அவர்கள் உடனே பிரிந்து விலகிச்சென்றுவிட்டதாகத் தெரிகிறது. எவ்வாறாயினும் 23.06.2022-ஆம் தேதியன்றான கூட்டம், உரியமுறையில் கூட்டப்பட்டதாகும், மேலும் அதைத் தடுக்கும் முயற்சிகள் நீதிமன்றத்தில் வெற்றிப்பெறாது. 23.06.2022-ஆம் தேதியிட்ட கூட்டத்தில் குறிக்கப்பெற்ற அலுவல் நடக்காதபோதுங்கூட, இக்கூட்டத்தில் நிகழ்ந்த அனைத்தையும் புறந்தள்ளிவிடமுடியாது. வாதியான ஓ.பி.எஸ்.-ம் அவரது ஆதரவாளர்களும் அக்கூட்டத்தில் இடம்பெற்றிருந்தனர் என்பதையும் மறுக்கமுடியாது. பொதுக்குழு 2665 உறுப்பினர்களைக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது. இந்த 2665-லிருந்து 2190 உறுப்பினர்கள், பொதுக்குழு கூட்டத்தைக் கூட்டுவதற்காக 23.06.2022 அன்று கோரிக்கை வைத்தனர், மேலும் அவைத் தலைவர் இக்கோரிக்கை கூட்ட நாள் 11.07.2022 அன்று என அறிவித்தார், இக்குறிப்பிட்ட சங்கதிகள் மற்றும் சூழ்நிலைகளின்படி, அத்தகைய அறிவிப்பு, இக்கட்டத்திலேயாவது முற்றிலும் மிகையானதாகக் கூறிவிட இயலாது. அக்குறிப்பிட்ட காலகட்டத்தில், ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் சேர்ந்து செயல்படாதவர்களாகக் காட்டப்பட்டபோது, கட்சியில் செயல்முடக்கம் நிலவிவந்தது, மேலும், ஒரு நிறைவேற்றத்தக்க தீர்வு காணப்படவேண்டும். இக்குறிப்பிடப்பட்ட நிலையில், கோரிக்கை விடுக்கும் நபர்களாலும் அவைத் தலைவராலும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் இக்கட்டத்தில் தேவையில்லாதவை எனவும் அல்லது சட்டத்திற்கு புறம்பானவை எனவும் அறிவித்துவிட இயலாது. அவ்வாறான நிலையில் 11.07.2022-ஆம் தேதியன்று கூட்டம் கூட்டுவது அதிகாரப்பூர்வமற்ற செயலாக எடுத்துக்கொள்ளப் பட்டிருக்கக்கூடாது. கற்றறிந்த தனியமர் நீதியரசர், 17.08.2022-ஆம் தேதியிடப்பட்ட உத்தரவைப் பிறப்பிக்கையில், கடுமையாகத் தவறிழைத்துவிட்டதாகத் தெரிகிறது. மேலும், 11.07.2022 அன்று கூட்டத்தைக் கூட்டியது ஓர் அதிகாரப்பூர்வமற்ற செயலாக எடுத்துக்கொள்ளப்பட்டது எனும்போது மேற்படி உத்தரவு தெளிவாக முரண்பாட்டினால் பாதிக்கப்பட்டதாகும். உயர் நீதிமன்ற நீதியராயம், எங்களுடைய கருத்துப்படி, வழக்கின் சாராம்சத்தையும், உண்மையான நிலவரங்களையும் சரியாக ஆராய்ந்துள்ளது.

28.2. மற்றொரு குறைபாடாகச் சொல்லப்படும் ஒரு தெளிவான 15 நாள் அறிவிப்பு இல்லாமை குறித்தும் 02.09.2002-ஆம் தேதியிடப்பட்ட எதிர்ப்புக்குள்ளான உத்தரவில் உயர் நீதிமன்ற நீதியராயத்தால் சரியாக விவாதிக்கப்பட்டுள்ளது. எங்களது கருத்துப்படி, கட்சியின் அத்தகையதொரு உள்-விவகாரத்தில் நீதிமன்றத்தின் அணுகுமுறை அதுவும் இடைக்கால பரிகாரத்திற்கான வேண்டுரையைப் பரிசீலிக்கையில், அது வழக்கின் சாராம்சத்திலிருந்து விலகிச்செல்லும் நுட்ப குற்றங்குறையுடைய முடிவாக இருக்கக்கூடாது என்பதாகும். நுட்பமான விசயத்தைப் பொறுத்தமட்டில், 15 நாட்கள் அறிவிப்பின் தேவை முறையான கூட்டத்துக்குப் பரிந்துரைக்கக்கூடியதேயன்றி கோரிக்கை விடுக்கப்படும் அல்லது சிறப்புக் கூட்டத்துக்கு அத்தகைய தேவையில்லை என்ற மேற்படி 19(vii)-ஆவது விதியமைப்பை நீதிராயம் சரியாக ஆய்வு செய்துள்ளதாகத் தெரிகிறது.

29. வழக்கு முகாந்திரம் குறித்த கேள்வியைப் பொறுத்தவரையில், கற்றறிந்த தனியமர் நீதியரசரின் பரிசீலனைகள், மேற்கண்டபடி அடிப்படையான குறைபாடுகளால் பாதிக்கப்பட்டிருந்தன; மேலும் வழக்கின் விடயப்பொருளையும் அதன் உட்பொருளையும் ஆராய்வதற்கு நீதியராயத்தின் தலையீடு தேவைப்பட்டது. இதைத்தவிர, வாதிகள் நீதிமன்றத்தில் விவாதிக்கத்தக்க வழக்கையும் வழக்கு முகாந்திரத்தின் சில கூறுகளையும் முன்கொணர முடிந்தது என ஊகித்துக்கொண்டாலுங்கூட, எங்களுடைய கருத்துப்படி, வாய்ப்புச் சமநிலை மற்றும் சீர்செய்யவியலாத பாதிப்பு குறித்து விசாரிக்கையில், கற்றறிந்த தனியமர் நீதியரசரின் அணுகுமுறை முற்றிலும் தவறான கோணத்திலிருந்தது. மேற்கண்டவாறு, உறுத்துக்கட்டளை வழங்காவிட்டால், இ.பி.எஸ். அவர்கள், கட்சி உறுப்பினரிலிருந்து வாதியான ஓ.பி.எஸ். அவர்களையும், வேறு சிலரையும் நீக்கிவிட்டதாக மிகவும் சுலபமாகச் சொல்லிவிடும் நிலையில் இருப்பார், மேலும் அவர்கள் முன்மொழியப்பட்ட பொதுச் செயலாளர் தேர்தல்களிலுங்கூட பங்கெடுக்க முடியாது என்பது கற்றறிந்த தனியமர் நீதியரசரின் கருத்தாகும். கற்றறிந்த தனியரசரின் கருத்துப்படி, இக்குறிப்பிட்ட சூழலில் வாய்ப்புநல சமநிலையும், சீர்செய்யவியலாத பாதிப்பையும், கட்சியின் அடிப்படை உறுப்பினர்களின் அனுகூல கூறுகளின் அடிப்படையிலேயே பார்க்கப்படவேண்டும் என்பதாகும். கற்றறிந்த தனியமர் நீதியரசரின் அத்தகைய கருத்துரைகளும் பரிசீலனைகளும் எங்களது கருத்துப்படி சீரிய நீதியக் கோட்பாடுகளுக்கிணங்க இல்லை. பரிசீலனையின் கீழுள்ள விண்ணப்பங்களைப் பொறுத்தவரையில் வாய்ப்புநல சமநிலை மற்றும் சீர்செய்யவியலாத பாதிப்பு குறித்த கேள்விகள், 11.07.2022 அன்றான கூட்டத்தின் விளைவுகளையோ அல்லது பிரச்சினைகளையோ பொறுத்து ஆராய்ந்துக்கொண்டிருக்கக்கூடாது. மேலும், உரிய விடயங்களை விவாதிப்பதற்கு பொதுக்குழுவுக்கு உள்ள அதிகாரத்தை, கட்சியின் அடிப்படை உறுப்பினரின் எண்ணிக்கையைப் பொறுத்து புறந்தள்ளிவிட்டிருக்கக்கூடாது. கற்றறிந்த தனியமர் நீதியரசர் மேற்குறிப்பிடப்பட்ட தீர்முடிவுகளில் விளக்கப்பட்டவாறான உரிய ஆய்வுகளைக் கருத்திற்கொள்ளவில்லை என்பது முற்றிலும் தெளிவு. இவ்வழக்கில் அரசியல் கட்சியின் உள்-விவகாரத்தைப் பொறுத்தும், வாதிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் தன்மையை ஆராய்ந்தும், வாய்ப்பு சமநிலை, பரிசீலனையின் கீழான விண்ணப்பங்களின்பேரில் இடைக்கால உறுத்துக்கட்டளை எதனையும் வழங்குவதற்கு சாதகமாக இருந்திருக்கவில்லை.

30. வழக்கை முழுமையாக ஆராய்ந்தால், இவ்வழக்கில் கற்றறிந்த தனியமர் நீதியரசர், வாய்ப்புநல சமநிலை மற்றும் சீர்செய்யவியலாத பாதிப்பு தொடர்பான பிரச்சினைகளை சரியான கோணத்தில் ஆராயவில்லை, குறிப்பாக, உத்தரவில் வழங்கப்பட்டிருந்த முறையிலும், கருத்துவடிவிலும் தற்காலிக உறுத்துக்கட்டளை வழங்கியதில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் மற்றும் கருத்துரைக்கப்பட்டிருக்கும் நடைமுறை, இறுதியாக முதன்மை வழக்கின் தீர்முடிவுக்கு எதிராகச் செல்லுமானால், அதற்குரிய சாத்தியக்கூறுகளையும், அநீதிக்குள்ளாகக்கூடிய இடர்நிலையையும் மதிப்பீடு செய்யத் தவறிவிட்டார் எனக் கருத்துரைக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறோம். கற்றறிந்த தனியமர் நீதியரசரால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு, வழக்குகளின் தீர்முடிவு வரும்வரையில் நடைமுறையிலிருந்தால், அது இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள ஓர் அரசியல் கட்சியான கேள்விக்குள்ளான அரசியல் கட்சியின் நலனுக்கு கடுமையான தீங்கினை விளைவிக்கக்கூடும். இத்தன்மையான வழக்கில், பொதுவாக நீதிமன்றம் ஒரு கழகத்தின்/கட்சியின் உள்-விவகாரங்களில் தலையிடாது என்பதும் சிறந்த நிர்வாகத்திற்கான ஒரு குறிப்பிட்ட முடிவெடுப்பது கழகம்/கட்சி மற்றும் அதன் உறுப்பினர்களின் விருப்பத்திற்கு விடப்படுகிறது என்பதுமான ஏற்புடைய சட்டக் கூற்றின் அடிப்படையில் கற்றறிந்த தனியமர் நீதியரசரால் ஆரம்ப கட்டத்தில் 22.06.2022 அன்று இடைக்கால பரிகாரத்திற்கான வேண்டுரை மறுக்கப்படுகையில், குறிப்பிடப்பட்ட எளிய மற்றும் நுட்பமான கருத்தாகும், அதுதான் வழக்கின் சங்கதிகளைப் பொறுத்தவரை சரியான அணுகுமுறையாக இருந்தது என்பதாகும். இவ்வழக்கில், பொதுக்குழுதான் கட்சியின் உயர்நிலையிலிருப்பதாகக் காட்டப்பட்டுள்ளபோது, பொதுக்குழு கூட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு, தற்காலிக உறுத்துக்கட்டளை மூலம் ஆதரவு தெரிவித்திருக்கவோ அல்லது தலையிட்டிருக்கவோகூடாது. இக்குறிப்பிட்ட சங்கதிகள் மற்றும் சூழ்நிலைகளின் தொகுப்பின்படி, (மேற்கண்ட) ஷேக்கிள்டன் அவர்களின் கூட்டங்களின் நடைமுறையும் சட்டமும் என்று நூலிலிருந்து அத்தியாயம் 5-ஐ குறிப்பிட்டு, அதாவது குறிப்பாக கேள்விக்குள்ளான கூட்டம் நடைபெறும் நாள், நேரம் மற்றும் இடம் 23.06.2022 அன்று நடைபெற்ற கூட்டத்தில் உரியமுறையில் அறிவிக்கப்பட்டுள்ளதாகக் காணப்படுகிறபோது கூட்டம் நடைபெறும் நாள், நேரம் மற்றும் இடம் குறித்து முறையான அறிவிப்பு இல்லாததைக் குறித்த மிக நுட்பமான கருத்துரைகள், மேல்முறையீட்டாளர்களின் நோக்கத்தை நிறைவேற்றாது.

31. துணை சட்ட விதிகள், பொதுக்குழு கூட்டத்தை கோரிக்கையாளர்கள் கூட்டுவது குறித்து குறிப்பிடவில்லை என்றும், ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் சேர்ந்து கூட்டத்தைக் கூட்ட தவறுவார்களேயானால், அதனுடைய சொந்த குறைபாடுகளுக்காக நீதிமன்றத்தின் தலையீட்டைக் கோருவதுதான் ஒரே வழி என்றும் மேல்முறையீட்டாளர்களின் சார்பான வாதம், (மேற்கண்ட) எஸ். திருநாவுக்கரசு என்ற வழக்குத் தீர்முடிவின் அடிப்படையிலானது. மேற்படி வழக்கின் எதிர்ப்புக்குள்ளான உத்தரவில், நீதியராயத்தால் சரியாகக் கண்டவாறு, கட்சியிலிருந்து நீக்கப்பட்ட உறுப்பினர் ஒருவர், அப்போதைய செயலாளரால் கூட்டப்பட்ட கூட்டத்துக்கு இணையான பொதுக்குழு கூட்டத்தைக் கூட்டினார். இக்குறிப்பிட்ட சூழலில், நீதிமன்றம், இணையான கூட்டம் கூட்டியதை முன்னிட்டு, பொதுச் செயலாளருக்கு ஆதரவாக இடைக்கால உறுத்துக்கட்டளை வழங்கியது. இந்த வழக்கில், பொதுக்குழுவின் இணை கூட்டம் எதுவும் எந்த உறுப்பினர்களாலும், கூட்டப்படவுமில்லை அல்லது கோரப்படவுமில்லை. கூட்டம் கூட்டப்படவில்லையென்றால் கோரிக்கையாளர்கள் நீதிமன்றத்திற்குச் செல்வதைத் தவிர வேறுவழியில்லை எனப் பொதுவாக வகுத்துரைத்துவிடமுடியாது என உயர் நீதிமன்ற நீதியராயம் சரியாகக் கருத்துரைத்துள்ளது. கடந்த காலத்தில், இடைக்கால பொதுச் செயலாளர் 2017-ஆம் ஆண்டில் செயல்படாதபோது, கழகப் பொறுப்பாளர்கள் கோரிக்கை பெற்றதன் அடிப்படையில் கூட்டத்தைக் கூட்ட முயற்சி எடுத்தனர். தற்போதைய நிலைமையிலுங்கூட, முன்னதாக பொதுச் செயலாளரால் வகிக்கப்பட்ட பதவி, கூட்டாக ஒருங்கிணைப்பாளருக்கும், இணை ஒருங்கிணைப்பாளருக்கும் ஒதுக்கி கொடுக்கப்பட்டும் ஒருங்கிணைப்பாளராலும், இணை ஒருங்கிணைப்பாளராலும் இணைந்து கூட்டாகச் செயல்பட முடியவில்லை என்பது சந்தேகத்திற்கிடமின்றி உள்ளவிடத்து, இது, உயர் பதவி வகிப்பவர் செயல்படும் நிலையிலில்லாத அச்சூழலுக்கு ஒத்திருக்கிறது. ஒரு நடைமுறைப்படுத்தத்தக்க தீர்வு தெளிவுறக் கண்டறியப்படவேண்டும்; மேலும் ஒரு தீர்வு அது பயன்படுத்தப்படுகிறபோது, கழகத்தின் அல்லது கட்சியின் துணைவிதிகளின் ஆற்றலுக்கும், அதன் வழக்கமான செயல்பாட்டு முறைகளுக்கும் மற்றவகையில் ஊறுவிளைக்கவில்லை எனக் கண்டறியப்பட்டு பயன்படுத்தப்படுகிறபோது, 11.07.2022 அன்று பொதுக்குழு கூட்டம் கூட்டுவதற்கான அவைத் தலைவரின் அறிவிக்கையும், அதைத்தொடர்ந்து கட்சி தலைமையக கழகப் பொறுப்பாளர்களால் விடுக்கப்பட்ட அறிவிப்பும் முற்றிலும் அதிகாரப்பூர்வமற்றது எனக் கூறிவிட முடியாது.

32. மேற்கூறியவற்றைத் தவிர, 17.08.2022-ஆம் தேதியிடப்பட்ட எதிர்ப்புக்குள்ளான உத்தரவிலுள்ள கற்றறிந்த தனியமர் நீதியரசரிடம் நடப்பிலிருந்த மற்ற பரிசீலனைகளை, கற்றறிந்த தனியமர் நீதியரசர், சீரிய மற்றும் பொருந்தத்தக்க நீதியக் கோட்பாடுகளுக்கு புறம்பாக மேல்நடத்தியுள்ளார் என்பதைத் தெளிவாக்கியுள்ளன. நடைமுறையில் சாத்தியமற்றதை நிறைவேற்றும்படி சட்டமும் குறிப்பிடவில்லை, நடைமுறையில் சாத்தியமற்றதை நிறைவேற்றுவதற்காக நீதிமன்றத்தாலும் எந்தக் கட்டளையும் பிறப்பிக்கப்படுவதுமில்லை என்பதை மறுக்கமுடியாது. ஓ.பி.எஸ். அவர்களும், இ.பி.எஸ். அவர்களும் ஒருங்கிணைப்பாளராகவும், இணை ஒருங்கிணைப்பாளராகவும் ஒன்றிணைந்து வெற்றிகரமாகச் செயல்பட்டுவந்தபோது 1.[5] கோடிக்கு மேல் உறுப்பினர்களைக் கொண்ட ஒரு கட்சி எவ்வாறு திடீரென பங்கீட்டுமுறையில் செயல்பட்டுவந்ததை மாற்ற முடிவெடுத்தது என கற்றறிந்த தனியமர் நீதியரசர் கருத்துத் தெரிவித்தார். எங்களது கருத்துப்படி, நீதிமன்றத்தில் தீர்வுக்காகக்கூட அத்தகையதொரு கேள்வி கூறுகள் எழுவது உகந்ததல்ல என்பதைப் பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறோம். ஒரு கழகமாக இருந்தாலும் அல்லது ஓர் அரசியல் கட்சியாக இருந்தாலும் எந்தக் கூட்டுக்குழுவாக இருந்தாலும் அது அதன் விவகாரங்களை நிருவகித்துக்கொள்ளும், மேலும் ஆட்சிக்குழு அதனுடைய விதிகள், ஒழுங்குமுறை விதிகள் அல்லது துணைவிதிகளில் உரிய மாற்றமாக எதைக் கொண்டுவந்தாலும் அவையாவும் அந்தக் கூட்டுக்குழு மற்றும் ஆட்சிக்குழுவின் வரம்புக்குள் நன்கு பொருந்துவனவாகும். எவ்வாறாயினும், நீதிமன்றத்திலுள்ள விண்ணப்பங்களைப் பொறுத்தவரையில் ஒரேயொரு தொடர்புடைய கேள்வி யாதென்றால் 11.07.2022 அன்றான கூட்டத்தைக் கூட்டியதன் செல்லுந்தன்மை குறித்தேயாகும். கற்றறிந்த தனியமர் நீதியரசர், மொத்தத்தில் முக்கியமற்ற பரிசீலனைகளின் அடிப்படையில் இறுதிமுடிவுகளுக்கு வித்திட்ட அத்தகைய விரிவான பகுதிகளை முழுவதுமாக விளக்கியுள்ளதாகத் தெரிகிறது.

33. 23.06.2022-க்கு முன்னதாக இருந்த நிலவரத்தை மீட்டளித்து கற்றறிந்த தனியமர் நீதியரசரால் இறுதி உறுத்துக்கட்டளை பிறப்பிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது, இதனுடன் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் கூட்டாகச் செயல்படவேண்டும்; கூட்டங்கள், அவர்களின் கூட்டிசைவுடன் நடத்தப்படவேண்டும்; முறையாகக் கோரிக்கை விடுப்பதன்பேரில் அவர்கள், பொதுக்குழு கூட்டத்தைக் கூட்ட மறுக்கக்கூடாது; அவர்கள் பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதற்கு தேவையான அறிவுறுத்தல்களைப் பெறுவதற்காக நீதிமன்றத்தை அணுகவேண்டும். கற்றறிந்த தனியமர் நீதியரசரால் பிறப்பிக்கப்பட்ட உறுத்துக்கட்டளை, அவருக்கு முன்பாக உள்ள விண்ணப்பங்களின் நோக்கத்திற்கு அப்பாற்பட்டதாகவும், காலங்கடந்ததாகவும் இருந்துவந்தது என்ற சங்கதியைத் தவிர, மேற்படி உறுத்துக்கட்டளை கட்சியில் செயல்முடக்கத்தைதான் நிலைபெறச் செய்வதோடு கற்றறிந்த தனியமர் நீதியரசரால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எந்தக் கோணத்திலிருந்தும் ஆதரவு தெரிவிக்கமுடியாது, ஆதலால் நீதியராயம் எங்களது கருத்துப்படி சரியாகவே தலையிட்டுள்ளது.

34. உரிமை வழக்குத் தாக்கல் செய்து இடைக்கால பரிகாரம் கோருகையில், கட்சியும் அதன் ஆட்சி/செயற்குழுக்களும், ஒருங்கிணைப்பாளராலும், இணை ஒருங்கிணைப்பாளராலும் மட்டுமே கூட்டாக பிரதிநிதித்துவம் செய்யப்படவேண்டும் என்ற இந்த வாதிகளின் கூற்றுப்படி அரசியல் கட்சியான அ.இ.அ.தி.மு.க-ம், அதன் பொதுக்குழுவும் மற்றும் அதன் தலைமை செயற்குழுவும் “ஒருங்கிணைப்பாளராலும், இணை ஒருங்கிணைப்பாளராலும்” பிரதிநிதித்துவம் செய்யப்படவேண்டும் என்றமுறையில் வாதியான ஓ.பி.எஸ். அவர்களும், மற்ற வாதியுங்கூட வழக்கின் தரப்பினர்களாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் நாம் தீர்ப்புக்கூறுகையில் கருத்துரைக்கலாம். அவர்கள் ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். முறையே ஒருங்கிணைப்பாளராகவும், இணை ஒருங்கிணைப்பாளராகவும் ஒரு குழுவாக இணைந்து செயல்பட ஒன்றுசேர்ந்து நிற்பதில்லை அல்லது ஒன்றிணைந்திருப்பதில்லை என்பதை மறுக்கமுடியாது என்கிறபோது, வாதிகள் தரப்பிலான இந்த முயற்சியே குறைபாடுடையதாகிறது. வாதிகளின் தரப்பிலான முயற்சி, உண்மை நிலவரங்களுக்கேற்ப இல்லை.

35. இவ்வழக்குகளை முடிப்பதற்கு முன், 11.07.2022-ஆம் தேதியன்றான கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதாகச் சொல்லப்படும் தீர்மானங்களின் செல்லுந்தன்மையையும், ஏற்புடைமையையும் எதிர்த்து மேல்முறையீட்டாளர்கள் சார்பாக பல்வேறு வாதங்கள் வைக்கப்பட்டுள்ளபோதிலும், அதனை எதிர்த்து, எதிர்மேல்முறையீட்டாளர்கள் மேற்படி முடிவுகளை/தீர்மானங்களை நியாயப்படுத்த முயன்றுள்ளனர், ஆனால் நாங்கள் அந்த வாதங்கள் எவற்றையும் விவாதிக்க விரும்பவில்லை. இதற்கான காரணம் யாதென்றால், 11.07.2022 அன்றான கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் நிரந்தர உறுத்துக்கட்டளைக்கான விண்ணப்பங்களின் வழக்குப்பொருளாக இல்லை, அவை இந்த நீதிமன்றத்தால் மறுபரிசீலனைக்காக மீட்டளிக்கப்பட்டு, 17.08.2022-ஆம் தேதியிடப்பட்ட உத்தரவின் மூலம் கற்றறிந்த தனியமர் நீதியரசரால் இறுதியாகத் தீர்மானிக்கப்பட்டது, பின்னர் கற்றறிந்த தனியமர் நீதியரசரின் உத்தரவுக்கெதிரான நீதிமன்ற உள்ளக மேல்முறையீடுகள் 02.09.2022 அன்று நீதியராயத்தால் அனுமதிக்கப்பட்டன. நாங்கள் நீதியின் நலன்கருதி, மேற்படி தீர்மானங்கள் குறித்த தொடர்புடைய அம்சங்கள் யாவற்றையும் வெளிப்படையாகவும் கண்டிப்பாக சட்டத்திற்கிணங்கவும் விவாதிக்கப்படுவதற்கு விடுகிறோம்; மேலும் வழக்காடும் கட்சிகளின் ஆட்சேபணைகளும், மறுதலிப்புகளும் வெளிப்படையாக 35.[1] இவ்வழக்கின் சூழ்நிலைகளையும், இம்மேல்முறையீடுகளின் நோக்கத்தையும் கருத்திற்கொண்டு, இவ்வழக்குகளில் தாக்கல் செய்யப்பட்ட தரப்பினர் சேர்ப்பு விண்ணப்பங்கள் எவற்றையும் விவாதிப்பது அவசியமில்லை என நாங்கள் அறிகிறோம், மேலும் உரிய நீதிமன்றத்தில் பரிகாரம் கோருவதற்குள்ள உரிமையில் சட்டப்படியாக குறைபாடு ஏதும் ஏற்பட்டால், அந்த விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் சட்டப்படி உரிய தீர்வினை நாடிப் பெறுவதற்கான வாய்ப்புள்ளதையும் நாங்கள் தெரிவித்துக்கொள்கிறோம்.

36. இதில் இதற்குமேலே என்ன விவாதிக்கப்பட்டுள்ளதோ, அதற்காக சி.அ.ம. (உ) எண்கள் 15753/2022 மற்றும் 15705-15706/2022-லிருந்து எழுகின்ற மேல்முறையீடுகள், 02.09.2022-ஆம் தேதியிடப்பட்ட எதிர்ப்புக்குள்ளான உத்தரவை உறுதி செய்கையில், தள்ளுபடி செய்யப்படவேண்டியவை ஆகும்.

37. மற்ற மேல்முறையீடுகளைப் பொறுத்தவரை, அவற்றில் 23.06.2022-ஆம் தேதியிடப்பட்ட மேற்கூறிய உத்தரவு எதிர்ப்பிலுள்ளது. அவ்வுத்தரவின் செயல்பாடும், விளைவும் 06.07.2022 அன்று இந்நீதிமன்றத்தால் நிறுத்திவைக்கப்பட்டது. குறிப்பிட்டுள்ளபடி, 23.06.2022-ஆம் தேதியிடப்பட்ட அவ்வுத்தரவு மற்றவகையாகவுங்கூட அதன் முக்கியத்துவத்தை இழந்துவிட்டது. எனினும், ஆவணங்களிலுள்ள பிரச்சினைகளைத் தீர்வுசெய்யும்பொருட்டு, 23.06.2022-ஆம் தேதியிடப்பட்ட மேற்படி உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடுகளைத் தீர்வு செய்வதற்கு 06.07.2022-ஆம் தேதியிடப்பட்ட இடைநிறுத்த உத்தரவை உறுதிசெய்வது தக்கதென நாங்கள் கருதுகிறோம்.

38. முடிப்பதற்கு முன், இத்தீர்ப்புரையிலுள்ள கருத்துரைகள் எவையும், இம்மேல்முறையீடுகளுடன் தொடர்புகொண்ட நடப்பிலுள்ள உரிமையியல் வழக்குகளில் எந்தப் பரிசீலனைக்கும் தகுதியுடையதாக இல்லை என்பதையும், மேற்படி உரிமை வழக்குகள், அவற்றுக்கே உரிய தகுதிகளின் அடிப்படையிலும், சட்டப்படியாகவும் மேல்நடத்தப்படவேண்டும் என்பதையும் நாங்கள் தெளிவாக்குகிறோம்.

39. அதற்கேற்பவும், மேற்படியானவற்றைக் கருத்திற்கொண்டும்:

1. சி.அ.ம. (உ) எண்கள் 15753/2022 மற்றும் 15705-15706/2022-லிருந்து எழுகின்ற மேல்முறையீடுகள் தள்ளுபடி செய்யப்படுகின்றன, மேலும், மு.பி.மே. எண்கள் 227/2022, 231/2022 மற்றும் 232/2022-இல் உயர் நீதிமன்ற நீதியராயத்தால் பிறப்பிக்கப்பட்ட 02.09.2022-ஆம் தேதியிடப்பட்ட உத்தரவு உறுதி செய்யப்படுகிறது.

2. 06.07.2022-ஆம் தேதியிடப்பட்ட இடைக்கால உத்தரவை உறுதிசெய்கையில் சி.அ.ம. (உ) எண்கள் 11237/2022, 11579/2022 மற்றும் 11578/2022-லிருந்து எழுகின்ற மேல்முறையீடுகளும் தீர்வு செய்யப்படும்.

3. இம்மேல்முறையீடுகளிலுள்ள தரப்பினர்கள் அவரவருக்குரிய செலவுத்தொகையை தாமே ஏற்கவேண்டும்.

4. மேலும், நடப்பிலுள்ள விண்ணப்பங்கள் யாவும் தீர்வு செய்யப்படும். மாண்புமிகு நீதியரசர் தினேஷ் மகேஷ்வரி மாண்புமிகு நீதியரசர் ஹிரிஷிகேஷ் ராய் புது தில்லி 23.02.2023