S. Adhilakshmi v. State of Tamil Nadu

Supreme Court of India · 15 Mar 2023 · 2023 INSC 237
Krishna Murari; Sudhanshu Dhulia
Criminal Appeal No 804 of 2023 @ SLP (Crl) No 9978 of 2022
2023 INSC 237
criminal petition_allowed Significant

AI Summary

The Supreme Court quashed criminal proceedings against a registered medical practitioner for possession of drugs, holding that statutory exemptions and procedural delays barred prosecution under the Drugs and Cosmetics Act.

Full Text
Translation output
2023 INSC 237
வெளியிடக்கூடியது
இந்திய உச்ச நீதிமன்றம்
குற்றவியல் மேல்முறையீட்டு அதிகாரவரம்பு
குற்றவியல் மேல்முறையீடு எண் 804/2023
(சிறப்பு அனுமதி மனு (குற்றவியல்) எண் 9978/2022-லிருந்து எழுகிறது)
எஸ். ஆதிலக்ஷ்மி … மேல்முறையீட்டாளர்(கள்)
-எதிர்-
மாநில அரசு சார்பாளராக
மருந்துகள் ஆய்வாளர், … எதிர்மேல்முறையீட்டாளர்(கள்)
தீர்ப்புரை
மாண்புமிகு நீதியரசர் திரு. சுதன்ஷு துலியா:
அனுமதி வழங்கப்பட்டது.
JUDGMENT

2. இங்குள்ள மேல்முறையீட்டாளர், பதியப்பட்ட மருத்துவர், தற்போது சென்னையிலுள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில் இணை மருத்துவப் பேராசிரியராகவும், தோல் மருத்துவ துறைத் தலைவராகவும் பணியாற்றி வருகின்றார். கடந்த காலத்தில், அவர், இராயப்பேட்டை மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகவும் மருத்துவராகவும் பணியாற்றியுள்ளார். அவர் தனது அலுவல் பணிமுறையாக மருத்துவம் பார்க்காதபோது தனிப்பட்ட முறையில் மருத்துவம் பார்க்க சட்டத்தின் கீழ் அனுமதிக்கத்தக்கதாகும். மேல்முறையீட்டாளர், சென்னையிலுள்ள வில்லிவாக்கம், ரெட்ஹில்ஸ் சாலை (வடக்கு), எண் 87-இல் அமைந்துள்ள வளாகத்தில் தனிப்பட்ட முறையில் தனியாளாக மருத்துவம் பார்த்து வந்தார். அங்கு, அவர் நோயாளிகளைச் சந்தித்து, ஆலோசனை வழங்கி, பரிசோதனை செய்து வந்தார்.

3. மேற்படி வளாகத்தில், வில்லிவாக்கம் சரக மருந்து ஆய்வாளரால் 16.03.2016 அன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வறிக்கையின்படி அவருடைய வளாக உள் அறையில், கீழ்க்காணும் மருந்துகள், மருந்து ஆய்வாளரால் கண்டறியப்பட்டது. எண் பெயர் அளவு அதிகபட்ச விலை

1. டெனிடால் லோஷன் 50 மி.லி. 1 198.50

2. சலிகோ லோஷன் 30 மி.லி. 4 75/30 மி.லி.

3. ஏ-சிஎன் ஜெல் 20 கிராம் 1 98/20 கிராம்

4. டெபிர் ஜெல் 10 கிராம் 9 47.90/10 கிராம்

5. சோல்டாப்-எஸ்.6% லோஷன் (30 மி.லி.) 4 125/30 மி.லி.

6. மைகோடின் கிரீம் 15 கிராம் 3 115/15 கிராம்

7. மோப்ரி 2% ஆயின்மென்ட் 4 75.60/5 கிராம்

8. மோம்டாப்-எஸ் ஆயின்மென்ட் (10 கிராம்) 1 145/10 கிராம்

9. ஈஎஸ்எம் கிரீம் (10 கிராம்) 4 76/10 கிராம்

10. நூ-வொய்டிஃபைட் ஆயின்மென்ட் (20 கிராம்) 7 40/20 கிராம்

11. மோம்சோன் கிரீம் (15 கிராம்) 3 82/15 கிராம்

12. சுதீஃப் கிரீம் (10 கிராம்) 4 99/10 கிராம்

13. கேப் ஜெல் (15 கிராம்) 1 156/15 கிராம்

22,033 characters total

14. கெனோசோல் கிரீம் (30 கிராம்) 2 130/30 கிராம்

15. சோல்டாப்-எஸ் 3% ஆயின்மென்ட் 1 125/30 கிராம்

16. சைலோ ஏசி ஜெல் 2.5% (20 கிராம்) 1 99.74/30 கிராம்

17. கெட்சி கிரீம் (30 கிராம்) 1 99.47/30 கிராம்

18. கெடாஃப் லோஷன் (60 மி.லி.) 2 150/60 மி.லி. மருந்து ஆய்வாளர் மருந்துகளின் சில விற்பனை இரசீதுகளையும் குறிப்பிட்டுக் காட்டினார், அவை பின்வருமாறு: வ. எண் இரசீது எண் & தேதி மருந்துகளின் பெயர் விற்பனை செய்யப்பட்ட அளவு

1. 409 & 24.02.2016 மைகோடின் கிரீம் நுஃபோஸ் பவர் செர்ட்ரெஸால்-எல் டேப்லெட்ஸ் 10 மாத்திரைகள்

2. 423 & 09.03.2016 செர்டிவெரா லோஷன் ஈஎஸ்எம் கிரீம் ஐலார் ஆர் டேப்லெட்ஸ் செட்ரெஸால் எல் டேப்லெட்ஸ்

3. 426 & 11.03.2016 அடிக்சைட் டேப்லெட்ஸ் கேப் ஜெல் ஏஎஃப்கே லோஷன் கேன் சோப் சிட் கேர் டேப்லெட்ஸ் 2 அட்டைகள் 2 அட்டைகள்

4. 424 & 0903.2016 பீ ஸ்காப் லோஷன் 1 ஃபார் டேப்லெட்ஸ் லோக்சிப் டேப்லெட்ஸ்

5. 428 & 11.03.2016 கல்டிவெரா லோஷன் மோம்சோன்கிரீம் செட்ரெஸால்-எல் டேப்லெட்ஸ்

4. அதன்பிறகு, மருந்து ஆய்வாளர், வழக்குத் தொடர அனுமதி பெறுவதற்காக, தமிழ்நாடு, மருந்துகள் கட்டுப்பாட்டு இயக்குநர், சென்னை அலுவலகத்தில் 22.09.2016 அன்று விண்ணப்பித்தார், அதற்கு 23.01.2018 அன்று அனுமதி வழங்கப்பட்டது. பின்னர், அவர், 1940-ஆம் ஆண்டு மருந்துகள் மற்றும் அழகுச் சாதனப்பொருட்கள் சட்டப்பிரிவு 27(ஆ)(II)-இன் கீழ் தண்டிக்கத்தக்க குற்றத்திற்காக, மேல்முறையீட்டாளருக்கு எதிராக எழும்பூர் X-ஆம் பெருநகர நடுவர் நீதிமன்றத்தின் முன்பாக சட்டப்பிரிவு 18(இ)-இன் கீழ் முறையீட்டைத் தாக்கல் செய்தார்.

5. இந்நடவடிக்கைகளால் மனக்குறையுற்று, மேல்முறையீட்டாளர், குற்றவியல் நடவடிக்கைகளை செல்லுபடியற்றதாக்குவதற்காக மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1973, பிரிவு 482-இன் கீழ் விண்ணப்பித்தார். அவருடைய மனு, கற்றறிந்த தனியமர்வு நீதியரசரால் 21.06.2022 அன்று தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் மனக்குறையுற்று, மேல்முறையீட்டாளர், கற்றறிந்த தனியமர்வு நீதியரசரின் உத்தரவிற்கெதிராக, இந்நீதிமன்றத்தின் முன்பாக சிறப்பு அனுமதி மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

6. 1940-ஆம் ஆண்டு மருந்துகள் மற்றும் அழகுச் சாதனப்பொருட்கள் சட்டப்பிரிவு 18-இன் கீழ், குறிப்பிட்ட மருந்துகள் மற்றும் அழகுச் சாதனப்பொருட்களின் உற்பத்தி, விற்பனை, இன்ன பிறவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரிவு 18 கீழ்க்காணுமாறு தெரிவிக்கிறது:

18. குறிப்பிட்ட மருந்துகள் மற்றும் அழகு சாதனப்பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கான தடை - இதன் பொருட்டு, மாநில அரசால் அரசிதழின் அறிவிக்கை மூலம் நிர்ணயிக்கப்படும் அந்த நாள் முதல், எந்த நபரும் தானாகவோ அல்லது தனது தரப்பில் வேறு நபரின் மூலமாகவோ- (அ)..................................... (ஆ) இச்சட்டத்தின் ஏதேனும் வகையங்கள் அல்லது அதன் கீழ் வகுக்கப்பட்ட ஏதேனும் விதிகளுக்குப் புறம்பாக இறக்குமதி செய்யப்பட்ட அல்லது உற்பத்தி செய்யப்பட்ட ஏதேனும் மருந்தினை [அல்லது அழகுச் சாதனப்பொருளை] [விற்கவோ அல்லது இருப்பு வைக்கவோ அல்லது காட்சிப்படுத்தவோ அல்லது சலுகை விற்பனைக்காகவோ] அல்லது விநியோகிக்கவோ கூடாது; (இ) இந்த அத்தியாயத்தின் கீழ் அந்த நோக்கங்களுக்காக வழங்கப்படும் உரிமத்தின் கீழ் அல்லது அதன் நிபந்தனைகளுக்கேற்ப அல்லாது ஏதேனும் மருந்தினை [அல்லது அழகுச் சாதனப்பொருளை][விற்பனைக்காகவோ அல்லது விநியோகிக்கவோ உற்பத்தி செய்தல் அல்லது விற்பனை செய்தல் அல்லது இருப்புவைத்தல் அல்லது காட்சிப்படுத்துதல் அல்லது சலுகை விற்பனை செய்தல்] அல்லது விநியோகித்தல் கூடாது: வரம்புரையாக, இப்பிரிவிலுள்ள எதுவும், ஆய்வு அல்லது சோதனை அல்லது பகுப்பாய்வு நோக்கத்திற்காக ஏதேனும் மருந்தை சிறிய அளவில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்குட்பட்டு உற்பத்தி செய்வதற்குப் பொருந்தாது: மேலும், வரம்புரையாக (மைய அரசு) வாரியத்துடன் கலந்தாலோசித்த பின்னர், அரசிதழில் அறிவிக்கை மூலம், அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் நிபந்தனைகளுக்குட்பட்டு, நிர்ணயிக்கப்பட்ட தரத்தில் அல்லாத மருந்து எதனையும் அல்லது மருந்து வகைகளையும் [விற்பனை அல்லது விநியோகம் செய்வதற்கு உற்பத்தி செய்தல், விற்பனை செய்தல், விற்பனைக்காக இருப்புவைத்தல் அல்லது காட்சிப்படுத்துதல் அல்லது சலுகை விற்பனை செய்தல்] அல்லது விநியோகிக்கவோ அனுமதிக்கலாம். பிரிவு 18(இ)–ஐ மீறுவதற்கான தண்டனையானது, பிரிவு 27(ஆ)(ii)-இல் வகை செய்யப்பட்டுள்ளது, அது பின்வருமாறு:

27. இந்த அத்தியாயத்திற்கு புறம்பாக மருந்துகள் உற்பத்தி செய்தல், விற்பனை செய்தல் போன்றவற்றுக்கான தண்டம் - எவரேனும் தாமாகவோ அல்லது தனது தரப்பில் வேறு நபர் மூலமாகவோ, (அ) xxxxxxxxxxxxxxxxxxxxx (ஆ) மருந்து எதனையும் -

(i) xxxxxxxxxxxxxxxxxxxxxx

(ii) பிரிவு 18(இ)-இன் கீழ் கோரப்படுகின்றவாறு, உரிய உரிமம் ஏதுமின்றி, விற்பனைக்காக அல்லது விநியோகம் செய்ய உற்பத்தி செய்யவோ அல்லது விற்கவோ அல்லது இருப்புவைக்கவோ அல்லது காட்சிப்படுத்தவோ அல்லது சலுகை விற்பனையோ அல்லது விநியோகிக்கவோ செய்வாரெனில், அவர், [மூன்றாண்டுகளுக்கு குறையாத ஆனால் ஐந்தாண்டுகள் வரை நீட்டிக்கக்கூடிய ஒரு கால அளவுக்கு சிறைத்தண்டனையும், ரூபாய் ஓர் இலட்சத்திற்கு குறையாத அல்லது பறிமுதல் செய்யப்பட்ட பொருளின் மதிப்பில் மூன்று மடங்கும், இதில் எது அதிகப்படியானதோ] அந்த அளவுக்கு தண்டமும் விதித்து தண்டிக்கப்பட வேண்டும்: வரம்புரையாக, நீதிமன்றம், தீர்ப்புரையில் பதியப்படும் நிறைவான போதிய அல்லது சிறப்பு காரணங்களுக்காக, (மூன்றாண்டுகளுக்கும் குறையாத ஒரு கால அளவுக்கு சிறைத்தண்டனையும் மற்றும் ஒரு இலட்சத்திற்கும் குறைவான தண்டமும்) விதித்து தண்டனையளிக்கலாம்;

7. பிரிவு 18 (இ)-இன் கீழான தடை என்பது விற்பனை நோக்கங்களுக்காக மருந்துகளை உற்பத்தி செய்தல், விநியோகித்தல், இருப்புவைத்தல் அல்லது காட்சிப்படுத்துதல் ஆகியவற்றின் மீதானது என்பதை நாம் காணலாம். தற்போதைய வழக்கில் குற்றச்சாட்டு யாதெனில், மேல்முறையீட்டாளர், “விற்பனைக்காக” மருந்தை “இருப்பு வைத்திருந்தார்” என்பதாகும். ஒட்டுமொத்த வலியுறுத்தல்களும், இம்மருந்துகளின் “விற்பனையின்” மீதானதாகும். இது, தமிழ்நாடு, மருந்துகள் கட்டுப்பாட்டு இயக்குநர் அலுவலகத்திலிருந்து மருந்து ஆய்வாளரால் கோரப்பட்ட அனுமதியிலிருந்து தெளிவாகிறது, அதில், 23.01.2018-ஆம் தேதியிடப்பட்ட அனுமதி கடிதத்தின்படி, "மருந்துகள் மற்றும் அழகு சாதனப்பொருட்கள் சட்டப்பிரிவு 18(இ)-க்குப் புறம்பாக, உரிய உரிமமின்றி, விற்பனைக்காக மருந்துகளை இருப்பு வைத்திருந்து விற்கப்பட்டுள்ளது, அது சட்டப்பிரிவு 27(ஆ)(ii)-இன் கீழ் தண்டிக்கத்தக்கதாகும்." அதற்காக மேல்முறையீட்டாளர் மீது வழக்குத் தொடரப்படவேண்டும் என அவர் கூறியிருந்தார். இவ்வாறாக, அரசுத்தரப்பின் கூற்றின்படி, மேல்முறையீட்டாளர், மருந்துகளை இருப்புவைத்து, அவற்றை விற்றார் என்பதாகும். மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரும், உயர் நீதிமன்றமும் கவனிக்கத் தவறிய சங்கதி யாதெனில், மேல்முறையீட்டாளர் ஒரு பதிவு செய்யப்பட்ட மருத்துவர் மற்றும் அவருடைய சிறப்பு மருத்துவப் பிரிவு தோல் மருத்துவம் என்பதாகும். அவர், இச்சிறப்பு மருத்துவப் பிரிவில் எம்.டி. (டி.வி.எல்.) பட்டம் பெற்றிருக்கின்றார். அவர் மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்களை நேரடியாக விற்பனை செய்யும் ஒரு கடையை தனது வளாகத்தில் திறந்தார் என்பது வழக்கல்ல. அவர் தன்னுடைய நோயாளிகளுக்கு அவசரப் பயன்பாட்டிற்கு இம்மருந்துகளை விநியோகித்திருக்க வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறாக, அவர் சட்டத்தாலேயே பாதுகாக்கப்படுகின்றார். 1945-ஆம் ஆண்டு மருந்துகள் மற்றும் அழகு சாதனப்பொருட்கள் விதிகளின் ஒரு பகுதியான அட்டவணை (K) விதிவிலக்களிக்கிறது, அதனைப் பின்னர் ஆய்வோமாக.

8. சட்டப்பிரிவு 33-இன் கீழ் மைய அரசு விதிகளை வகுக்கமுடியும், அது சட்டப்பிரிவு 38-இன் கீழ் நாடாளுமன்றத்தின் முன்பு, அதன் அங்கீகாரத்திற்காக வைக்கப்படவேண்டியுள்ளது. இவ்விதிகள், 1940-ஆம் ஆண்டு மருந்துகள் மற்றும் அழகு சாதனப்பொருட்கள் விதிகள் என அறியப்படும் விதிகளாக வகுக்கப்பட்டுள்ளன. அவ்விதிகளின் விதி 123, சில நிபந்தனைகளின் கீழ், சட்டத்தின் அத்தியாயம் IV-இன் வகையங்களிலிருந்து (மேற்குறிப்பிடப்பட்ட தண்டனை வகையங்களான 18 மற்றும் 27-ஐ உள்ளடக்குகிறது) சில மருந்துகளுக்கு விலக்களிக்கிறது. விதி 123 கீழ்க்காணுமாறு:

“123. அட்டவணை (K)–இல் குறிப்பிடப்பட்டுள்ள மருந்துகளுக்கு, அந்த அட்டவணையின் வரம்புக்கும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கும் உட்பட்டு, சட்டத்தின் அத்தியாயம் IV-இன் வகையங்களிலிருந்தும், அதில் வகுக்கப்பட்டுள்ள விதிகளிலிருந்தும் விலக்களிக்கப்படவேண்டும்.”

அட்டவணை (K)-இன் கீழ் பதிவுக் குறிப்பு எண் 5-இல் உள்ள மருந்துகளே, பதிவு செய்யப்பட்ட மருத்துவரால் வழங்கப்படுகின்றன, அது குறித்தே, நாங்கள் தற்போது கவனத்தில் கொள்கிறோம். அட்டவணை (K)-இன் தொடர்புடைய வகையம் கீழ்க்காணுமாறு: அட்டவணை K (விதி 123-ஐ காண்க) மருந்துகளின் வகைகள் விதிவிலக்குகளின் வரம்பும் நிபந்தனைகளும்

1. xxxxxxxxxxxxxx xxxxxxxxxxxxxx

2. xxxxxxxxxxxxxx xxxxxxxxxxxxxx

3. xxxxxxxxxxxxxx xxxxxxxxxxxxxx

4. xxxxxxxxxxxxxx xxxxxxxxxxxxxx (5) பதிவு செய்யப்பட்ட மருத்துவர் சட்டத்தின் அத்தியாயம் IV-இன் வகையங்களுக்கு மற்றும் அதன் கீழான விதிகளுக்கு ஏற்ப (அ) ஒரு கடை வைத்திருக்கவோ அல்லது (ஆ) நேரடியாக விற்பனை செய்யவோ அல்லது (இ) மருந்துகளை இறக்குமதி செய்தல், உற்பத்தி செய்தல், விநியோகித்தல் அல்லது விற்பனை செய்தல் ஆகியவற்றில் ஈடுபடுதல் கூடாது என்பதற்குட்பட்டு. பதிவு செய்யப்பட்ட மருத்துவரால் தம்முடைய நோயாளிக்கு வழங்கப்படும் மருந்துகளும் அல்லது பதிவு செய்யப்பட்ட மருத்துவரால், அத்தகைய மற்றொரு மருத்துவரின் வேண்டுகோளின் பேரில், வழங்கப்படும் அட்டவணை C-இல் குறிப்பிடப்பட்டுள்ள மருந்து எதுவும், தனிப்பட்ட நோயாளியின் நிலைமைக்கு ஏற்பவோ அல்லது பயன்பாட்டிற்காகவோ குறிப்பிட்டளவில் தயாரிக்கப்படுமெனில், அது இந்தியாவில் அவருக்கு வழங்கு வதற்குரிய அளவுக்கு இருக்கவேண்டும். சட்டத்தின் அத்தியாயம் IV-இன் அனைத்து வகையங்களும் அதன்கீழ் வகுக்கப்பட்ட விதிகளும் கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டவை: [1. மருந்துகள், இவ்விதிகளின் கீழ் உரிமம் அளிக்கப்பட்ட வணிகரிடமிருந்து அல்லது உற்பத்தியாளரிடமிருந்து மட்டுமே வாங்கப்படவேண்டும் மற்றும் அவ்வாறு வாங்கப்படும் மருந்துகளின் பெயர்கள் மற்றும் அளவுகளோடு சேர்த்து அவற்றின் தொகுதி எண்கள் மற்றும் உற்பத்தியாளர்களின் பெயர்கள் மற்றும் முகவரிகளைத் தெரிவிக்கும் ஆவணங்கள் பராமரிக்கப்படவேண்டும். அத்தகைய ஆவணங்கள், சட்டத்தின் கீழ் நியமிக்கப்படும் ஆய்வாளரால் ஆய்வு செய்யப்பட வைக்கப்படவேண்டும்; அவர், தேவையெனில், மருந்துகள் வாங்கப்பட்டது குறித்து விசாரித்து ஆய்வுக்காக மாதிரியையும் எடுத்துச்செல்லலாம்.]

2. (அட்டவணை G, H அல்லது X)-இல் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு பொருள் அடங்கியிருக்கும் மருந்தைப் பொறுத்தவரையில், கீழ்க்காணும் கூடுதல் நிபந்தனைகளும் பின்பற்றப்படவேண்டும்: (அ) மருந்து, எவருக்கு வழங்கப்படுகிறதோ, அந்த பதிவு செய்யப்பட்ட மருத்துவரின் பெயரும், முகவரியும் முகப்புச் சீட்டில் குறிக்கப்படவேண்டும்.; (ஆ) மருந்து வெளிப் பயன்பாட்டிற்கானது எனில், அது, [***] - “வெளிப் பயன்பாட்டிற்கு மட்டுமே” என்ற சொற்களாலும் அல்லது உள்பயன்பாட்டிற்கானதெனில், அதன் அளவும் முகப்புச் சீட்டில் குறிக்கப்பட வேண்டும்; (இ) மருந்தின் பெயர் அல்லது தயாரிப்பதற்கான பொருட்கள் மற்றும் அதன் அளவு. பரிந்துரைக்கப்பட்ட அளவு, நோயாளியின் பெயர், வழங்கப்பட்ட நாளையும் மருந்துச் சீட்டு வழங்கிய நபரின் பெயரையும் மருந்து வழங்கப்படும்போது, அதற்காக பராமரிக்கப்படும் பதிவேட்டில் பதிவு செய்யப்படவேண்டும்; (ஈ) பதிவேட்டின் பதிவுக்குறிப்புக்கு ஓர் எண்ணிடப்பட்டு, அந்த எண் கொள்கலனின் மீதான குறிப்புச்சீட்டில் பதியப்படவேண்டும்; (உ) மருந்துகள் வழங்கப்படுவதற்கான பதிவேடு அல்லது மருந்துச் சீட்டு ஏதேனுமிருப்பின், அது பதிவேட்டில் இறுதி பதிவுக்குறிப்பு செய்த நாளிலிருந்து அல்லது மருந்துச் சீட்டின் நாளிலிருந்து நேர்வுக்கேற்ப, இரண்டாண்டுகளுக்கு குறையாமல் பராமரிக்கப்பட வேண்டும்;

3. மருந்தானது முகப்புச் சீட்டில் அறிவுறுத்தப்பட்டவாறு தக்க சேமிப்புச் சூழலில் வைத்து சேமிக்கப்படவேண்டும்.

4. மருந்தின் கொள்கலன், முகப்புச் சீட்டு அல்லது அதன் அட்டையில் அது பயன்படுத்தப்படும் நாள் முடிந்தபின்னர் அல்லது அத்தகைய கொள்கலன், அல்லது அதன் முகப்புச் சீட்டு அல்லது அதன் அட்டையில் பதியப்பட்ட விவரம் அல்லது அறிவுறுத்தலுக்கு முரணாக அம்மருந்து வழங்கப்படவோ அல்லது அளிக்கப்படவோகூடாது. (வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளது) மேல்முறையீட்டாளர், மருந்துகளை வெளிப்படையாக கடையில் வைத்து, நேரடி விற்பனை செய்துவந்தார் என்பது அரசுத்தரப்பின் வழக்கல்ல. அவர், அரசு மருத்துவக் கல்லூரியில் துணைப் பேராசிரியராகவும், தோல் துறையின் தலைவராகவும் பணியாற்றி வருகின்ற மூத்த மருத்துவர் மற்றும் மருத்துவத் தொழிலையும் பார்த்து வருவதால், அவரும் சில நிபந்தனைகளின் கீழ், மேற்குறிப்பிடப்பட்ட சட்டத்தால் பாதுகாக்கப்படுகின்றார்.

9. பெரும்பான்மையான மருந்துகள், பூச்சு மற்றும் களிம்பு வகை மருந்துகளாக குறைந்த அளவில் இருந்ததைக் கவனத்தில் கொண்டு பார்க்கும்போது, அத்தகைய மருந்துகள் விற்பனைக்காக ’இருப்பு வைக்கப்பட்டது’ எனவும். விற்பனைக்காக மருந்துகளை இருப்பு வைத்தல் என்னும் வகையில் வரும் எனவும் கற்பனைக்கு எட்டாதவகையில் கூறப்படமுடியாது. பதிவு செய்யப்பட்ட மருத்துவரின் வளாகத்தில் சிறிய அளவிலான மருந்து காணப்பட்டது எனும்போது, அது அவர்களின் மருந்துகளை வெளிப்படையாகக் கடையில் நேரடி விற்பனை செய்வதாகாது. உண்மையில், இது மேல்முறையீட்டாளருக்கு எதிரான குற்றச்சாட்டுமல்ல. ஐயத்திற்கிடமின்றி, பிரிவுகள் 18 மற்றும் 27-இன் வகையங்கள், மற்றவற்றுக்கிடையே மருத்துவ நெறிமுறையைப் பின்பற்றாத மருத்துவர்களால் சாதாரண மக்கள் சுரண்டப்படுவதிலிருந்து பாதுகாக்கும் சமூக நோக்கம் கொண்ட சட்டத்தின் கீழான வகையங்களாகும்; இக்காரணத்திற்காக, சட்டப்பிரிவு 27-இன் கீழ் ஐந்தாண்டுகள் வரையில் நீட்டிக்கப்படக்கூடிய தண்டனையையும் குறைந்தபட்சம் மூன்றாண்டுகள் தண்டனையையும் கொண்டுள்ளது. ஆனால் வழக்கின் குறிப்பிடப்பட்ட சங்கதிகளையும் சூழ்நிலைகளையும் மற்றும் மேல்முறையீட்டாளர் ஒரு பதியப்பட்ட மருத்துவர் என்பதோடு பறிமுதல் செய்யப்பட்ட மருந்தின் அளவு மிகவும் குறைவானதே, அந்தக் குறைந்தளவு மருந்து ஒரு மருத்துவரின் வீட்டிலோ அல்லது ஆலோசனை அறையிலோ இயல்பாகக் காணப்படக்கூடியதே எனும் சங்கதியையும் பரிசீலித்ததில், எங்களுடைய கருத்தில், தற்போதைய வழக்கில் குற்றமேதும் இருப்பதாகத் தெரியவில்லை. உண்மையில், அட்டவணை (K) உடன் விதிகளின் விதி 123-இன் கீழ் ஒரு விதிவிலக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது, மேல்முறையீட்டாளருக்கு இவ்வகையங்களின் பயன் அளிக்கப்பட்டிருக்க வேண்டும் மற்றும் அனைத்து சாத்தியமான வழிகளிலும், அரசுத்தரப்பு அதன் வழக்கை ஐயத்திற்கிடமின்றி நிரூபிக்க தவறியிருக்குமிடத்து, அந்த மருத்துவர் வழக்கை எதிர்கொள்ள அனுமதித்திருக்கக்கூடாது. கு.ந..ச., பிரிவு 482-இன் கீழ் மேல்முறையீட்டாளரின் விண்ணப்பத்தை தனியமர் நீதியரசர் தள்ளுபடி செய்கையில், இந்நீதிமன்றத்தின் தீர்முடிவினைச் சார்ந்துள்ளார்:

“9. ஒரு முறையீடு அல்லது ஒரு குற்றச்சாட்டை செல்லுபடியற்றதாக்குவதற்காக, கு.ந.ச., பிரிவு 482-இன் கீழ் அதிகாரத்தைப் பயன்படுத்துகையில், நீதிமன்றம் இருக்கக்கூடிய சான்றின் செல்லுந்தன்மை குறித்து ஆராய்வதில் ஈடுபடக்கூடாது என்ற அறுதியுரைக்காக தீர்வறிக்கை எதனையும் குறிப்பீடு செய்யக்கோருவது இன்றைய நாளில் மிகவும் காலதாமதமானதாகும். அனைத்து விதத்திலும் நீதிமன்றம் பார்க்கவேண்டியது யாதெனில், சில குற்றங்களை முறையிடுவதற்காக உள்ள ஆக்கக்கூறுகளின் அடிப்படையில் அமைந்த குற்றச்சாட்டுகள் முறையீட்டில் உள்ளனவா? என்பதாகும். மேலும் நீதிமன்றம்,
(i) வழக்கின் விசாரணையை மேற்கொள்வதற்கு தேவையான முன் நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளனவா? இல்லையா? மற்றும் (ii) முறையீட்டில் உள்ள குற்றச்சாட்டுகள் முழுமையாக ஏற்கப்பட்டாலுங்கூட, சாட்டப்பட்டக் குற்றத்தை அமைக்காதா?.........
13. மேல்முறையீட்டாளரால் தாக்கல் செய்யப்பட்ட முறையீட்டினைப் பார்த்தோமானால், சாட்டப்பட்டக் குற்றங்களுக்காக எதிர்மேல்முறையீட்டாளர்கள் மீது வழக்குத் தொடர்வதற்குத் தேவையான ஆக்கக்கூறுகளை மேல்முறையீட்டாளர் இணைத்திருந்தார் என்பதைத் தெரிவிக்கும். மேல்முறையீட்டாளர் சட்டப்படி குற்றச்சாட்டுகளை நிரூபிக்கமுடியுமா? என்னும் வினாவானது, பிந்தைய நிலையிலேயே எழும்….................”

10. எனினும், உயர் நீதிமன்றம் 1945-ஆம் ஆண்டின் விதிகளின் விதிகள் 123 உடன் அட்டவணை ‘K’-இல் உள்ள வகையங்களைப் பரிசிலிக்கத் தவறிவிட்டது என்றாலும், ஒப்புக்கொண்டவகையில், பறிமுதல் செய்யப்பட்ட மருந்துகள், கடையில் நேரடியாக வெளிப்படையாகவே விற்கப்பட்டு வந்தது என்பது அரசுத்தரப்பு வழக்கல்ல. இது மேற்கண்டவாறு செய்யப்பட்டிருக்கவில்லை என்பதாலும், அட்டவணை ‘K’-இல் குறிப்பிடப்படும் மருந்துகள் சட்டத்தின் அத்தியாயம் 4-இன் வரம்பிலிருந்து விதிவிலக்களிக்கப்படுமிடத்து, மருத்துவருக்கு ஆதரவாக சட்டத்தின் கீழ் ஒரு விதிவிலக்கு உருவாக்கப்படுவதாலும், மேல்முறையீட்டாளர் மீதான வழக்கு தேவையற்றதென்பது எங்களுடைய ஆழ்ந்தாராய்ந்த கருத்தாகும்.

11. மேல்முறையீட்டாளரின் வளாகத்திலிருந்து 18 மருந்துகளின் பட்டியலுடன் விற்பனைச் சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்பது எதிர்மேல்முறையீட்டாளரின் வழக்கின் முக்கிய அம்சமாகும். எனினும், எதிர்மேல்முறையீட்டாளரால் அனுப்பப்பட்ட காரணம் கோரும் அறிவிப்பில் சொல்லப்பட்ட விற்பனைச் சீட்டுகள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட மருந்துகளின் விவரங்களைக் காணும்போது விற்பனைச் சீட்டுகள், எதிர்மேல்முறையீட்டாளரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள மருந்துகளுக்கானவையல்ல என்பது தெரிகிறது.

12. அதற்கு மாறாக, காரணம் கோரும் அறிவிப்பு வழங்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்ட மருந்துகள் எவரிடமிருந்துப் பெறப்பட்டனவோ, அந்நபர்களின் பெயரையும் முகவரிகளையும் தெரிவிக்குமாறு, மேல்முறையீட்டாளர் சட்டப்பிரிவு 18(அ)-இன் கீழ் பணிக்கப்பட்டார். அதற்கிணங்க, மேல்முறையீட்டாளர் தனது உண்மைத்தன்மையை நிரூபிக்க, பல மருந்தகங்களிலிருந்து பெறப்பட்ட விலைப்பட்டியல்களைச் சமர்ப்பித்துள்ளார். மேலும், தமிழ்நாடு மருந்துகள் ஆய்வகத்தால் மருந்துகள் ஆய்வு செய்யப்பட்டதில், மருந்துகள் ‘தரமானவை’ என்னும் முடிவிற்கு வந்தது, அது, மேல்முறையீட்டாளர் கடை வைத்து போலியான மருந்துகளை நேரடியாக விற்கவில்லை என்பதைத் தெரிவிக்கிறது.

13. பரிசீலிக்கப்படவேண்டிய மற்றொரு காரணி யாதெனில், 16.03.2016 அன்று சோதனை மேற்கொள்ளப்பட்டது, வழக்கிற்கான அனுமதி 22.09.2016 அன்று கோரப்பட்டு, முடிவாக, அனுமதியானது 23.01.2018 அன்றுதான் வழங்கப்பட்டது என்பதாகும். இவ்வனுமதியைப் பெறுவதிலான காலதாமதத்திற்கு விளக்கமேதும் தரப்படவில்லை. அண்மையில் முடிவு செய்யப்பட்ட ஹாஸ்முக்லால் டி. வோஹ்ரா மற்றும் ஒருவர் -எதிர்- தமிழ்நாடு மாநில அரசு1, என்னும் வழக்கில், வினாவுக்குரிய முக்கிய கூறு என்னவென்றால் அது இந்திய மருந்துகள் விவர ஏட்டின் கீழான மருந்து அல்ல என்னும் காரணத்தின் அடிப்படையில் மனுதாரருக்கெதிரான குற்றவியல் நடவடிக்கைகள் செல்லுபடியற்றதாக்கப்பட்டன. பரிசீலனைகளுள் ஒன்று, வழக்கு நடவடிக்கைகளில் காலதாமதமிருந்தது என்பதற்கு பின்வரும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டன, ‘25. தற்போதைய வழக்கில், எதிர்மேல்முறையீட்டாளர் ஆரம்பக்கால இட ஆய்வு, காரணம் கோரும் அறிவிப்பு மற்றும் முறையீடு ஆகியவற்றிற்கிடையிலான நான்காண்டுகளுக்கும் மேலான அளவுகடந்த காலதாமதத்திற்கு விளக்கமேதும் அளிக்கவில்லை. உண்மையில், அத்தகைய விளக்கமேதும் இல்லாமை என்பது குற்றவியல் நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு ஏதோ தீயநோக்கமுடைய பின்னணி உள்ளதாக முடிவெடுப்பதற்கே நீதிமன்றத்தைத் தூண்டுகிறது.

26. ஒரு குற்றவியல் முறையீட்டைச் செல்லுபடியற்றதாக்குவதற்கு அளவுகடந்த காலதாமதமே காரணமாகாது எனும்போது, அத்தகைய நேர்வுகளில், விளக்கமளிக்கப்படாத அந்தளவுக்கான அளவுகடந்த காலதாமதத்தை, குற்றவியல் முறையீட்டைச் செல்லுபடியற்றதாக்குவதற்கான காரணமாகவும், அதை ஒரு மிக முக்கியமான காரணியாகவும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளவேண்டும்.

27. குற்றவியல் முறையீட்டுக் கட்டத்தில் முழுமையான புலனாய்வை இந்நீதிமன்றம் எதிர்ப்பார்க்காதநிலையில் இருந்தாலும், அத்தகைய நேர்வுகளில், குற்றஞ்சாட்டப்பட்டவர் அவ்வளவு நீண்ட காலத்திற்கு குற்றவியல் நடவடிக்கைகளை திறம்பட தொடருவது குறித்த கவலைக்குள்ளாக்கப்பட்டுள்ளார் எனுமிடத்து, புலனாய்வு அதிகாரிகளிடமிருந்து மிகக் குறைந்தபட்ச சான்றுகளை எதிர்ப்பார்ப்பதே நீதிமன்றத்திற்குள்ள ஒரே வழிமுறையாகும். ’

14. தற்போதைய வழக்கில், வழக்குத் தொடருவதற்காக வழங்கப்பட்டுள்ள அனுமதி, சிந்தை செலுத்தாமை என்ற குறைபாட்டினால் முதல் நோக்கிலேயே பாதிப்படைவதாகத் தெரிகிறது. ஆவணங்கள், சான்றுகள் அல்லது வாதங்கள் எதுவும் எத்தரப்பினராலும் சமர்ப்பிக்கப்பட்டதற்கான குறிப்பீடு ஏதுமில்லை என்பதாலும், காலதாமதம் குறித்து விளக்கமோ அல்லது அது குறித்து காரணமேதும் தரப்படாததாலும், அது இயந்திரகதியில் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது என்பதையே காட்டுகிறது. மன்ஷுக்லால் விதல்தாஸ் சவான் -எதிர்- குஜராத் மாநில அரசு2 என்னும் வழக்கில் இந்நீதிமன்றம் குஜராத் மீடியம் நீர்ப்பாசன திட்டப் பிரிவில் பணியாற்றி வந்த கணக்காளருக்கெதிராக தொடரப்பட்ட குற்றவியல் நடவடிக்கைகளைச் செல்லுபடியற்றதாக்குகையில், குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 197-இன் கீழ் வழங்கப்படும் முன் அனுமதியின் முக்கியத்துவத்தைச் சிறப்புறக் கூறியது. அது பின்வருமாறு கருத்துத் தெரிவித்துள்ளது: ‘19. “அனுமதி”யின் செல்லுந்தன்மை என்பது அனுமதி வழங்கும் அதிகாரியால் வழக்கின் சங்கதிகளோடு, புலனாய்வின்போது சேகரிக்கப்பட்ட சான்றாவணங்கள் மற்றும் சான்றுகள் ஆகியவற்றுக்கு சிந்தைச் செலுத்தப்படுவதன்பேரில் சார்ந்துள்ளதால், அனுமதி அளிக்கும் அதிகாரி, வழக்குத் தொடர அனுமதிக்கப்படவேண்டுமா? வேண்டாமா? என தன்னியல்பான மனநிறைவைப் பெறும் பொருட்டு, தன்னுடைய சுய சிந்தையைப் பயன்படுத்தவேண்டும் என்பது கட்டாயமாகும்.’

15. உடைமையில் மருந்துகள் இருந்தன என்பது இருதரப்பினராலும் மறுக்கப்படவில்லை. எனினும், இந்நீதிமன்றம், முகமது ஷபீர் -எதிர்- மகாராஷ்டிர மாநில அரசு3 என்னும் வழக்கில் 1940-ஆம் ஆண்டு சட்டப்பிரிவு 18(சி) என்ற வகையத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட மேல்முறையீட்டாளரின் மேல்முறையீட்டைப் பகுதியாக அனுமதித்தும், அவரை சிறையிலிருந்து

விடுவிக்கப் பணித்தும், நேரடியாக மருந்துகள் உடைமையில் இருப்பது குற்றமாகாது என்றாலும், அது விற்பனைக்கான ‘இருப்பு’ வைக்கப்பட்டிருந்தாலுங்கூட, அது சட்டப்பிரிவு 27-இன் கீழ் அந்த இன்றியமையா ஆக்கக்கூறினை அரசுத்தரப்பு நிரூபிக்கவேண்டியிருந்தது எனக் கருத்துத் தெரிவித்தது. அது கீழ்க்காணுமாறு கருத்துத் தெரிவித்ததாவது: ‘4.........எனவே, ஒரு நபரை, சட்டப்பிரிவு 27(அ)(i)(ii) உடன் பிரிவு 18(சி)-இன் கீழ் வழக்கிற்குட்படுத்துவதற்கு அல்லது தண்டனையளிப்பதற்கு முன்னர், அவர் மருந்துகளை விற்பனைக்காக தயாரித்தார் அல்லது அதனை விற்றார் அல்லது அவற்றை இருப்பு வைத்தார் அல்லது விற்பனைக்காக மருந்துப் பொருட்களைக் காட்சிப்படுத்தினார் என்பதை அரசுத்தரப்பானது உறுதியாக நிரூபிக்கவேண்டும் என நாங்கள் தீர்மானிக்கிறோம். மருந்துப்பொருட்களின் நேரடியான உடைமையானது, சட்டத்தின் எந்த வகையங்களின் கீழும் தண்டிக்கத்தக்கதல்ல. எனவே, பிரிவு 27-இன் இன்றியமையா ஆக்கக்கூறுகள் நிறைவு செய்யப்படவில்லையெனில், குற்றஞ்சாட்டும் வாதமானது, மேல்முறையீட்டாளரை நீதிமன்றம் தண்டிக்க வழிகோலமுடியாது.’

16. குறைந்தளவு மருந்துகள் வைத்திருந்ததையும், விதி 123 உடன் அட்டவணை “K”-இன் கீழ் பணிமுறை மருத்துவருக்கு சாதகமாக உள்ள விலக்கினையும் பரிசீலித்து, வழக்கின் சங்கதிகளின்படி, பணிமுறை மருத்துவர் மீது வழக்குத் தொடரப்பட முடியுமா? என்பதற்கு அனுமதியளிக்கும் அதிகாரி விசாரிக்கப்படவே இல்லை. இக்காரணிகள் அனைத்தும் அனுமதியளிக்கும் அதிகாரியால் பரிசீலிக்கப்பட்டிருக்கவேண்டும். இச்சூழ்நிலைகளின் கீழ் நாங்கள் இம்மேல்முறையீட்டை அனுமதித்து, மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் அறிவார்ந்த தனியமர் நீதியரசரின் உத்தரவை நீக்கறவு செய்து, சென்னை, எழும்பூர் X மாநகர குற்றவியல் நடுவரின் கோப்பிலுள்ள குற்றவியல் வழக்கு எண் 7315/2018-இல் குற்றவியல் நடவடிக்கைகளைச் செல்லுபடியற்றதாக்குகிறோம். மாண்புமிகு நீதியரசர் திரு. கிருஷ்ண முராரி மாண்புமிகு நீதியரசர் திரு. சுதன்ஷுதுலியா புதுதில்லி 15.03.2023